போகர் சப்தகாண்டம் 881 - 885 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 881 - 885 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

881. இருக்கிறதோர் கற்பூரம்விராகநாலு இதமான கெந்தியது விராகனொன்று
பருக்கிறதோர் கல்வத்திற் பொடியாய்ப்பண்ணி பணவிடைதான் அனுபானத்தோடேகொள்ள
செருக்கிறதோர் கடிவிஷங்கள் புண்கள்சூலை செருமியவெண் குஷ்டங்கள் பவுத்திரங்கள்கிரந்தி
அருக்கிறதோர் வியாதியெல்லாம் அகன்றுபோகும் ஆதித்தன் கண்டதொரு பனிபோலாமே

விளக்கவுரை :


882. பனியென்ற பச்சைரசம் செந்தூரிக்கப் பாங்கான சூதமது பலந்தானெட்டு
கனியென்ற கெந்தகந்தான்ரண்டு பலமாகுங் கனமான வோட்டிலிட்டுத் தணலில்வைத்து
தொனியென்ற கெந்தகத்தை யுருக்கிக்கொண்டு சூதத்தையதில்விட்டு அயத்தால்கிண்டி
நனியென்ற சூதமது கரிபோலாகும் நயத்தோடே வாங்கிமெல்ல குப்பியிற்போடே

விளக்கவுரை :

[ads-post]

883. போட்டுமே அரைவாசிகுப்பிக்கப்பா புகழான வாலுகையின்மேலேவைத்து
நாட்டுமே ஓடாலேமேலேமூடி நயமாகவடுப்பெரித்து சாமம்ரண்டு
ஓட்டுமே ஓடதனை வாங்கிப்போட்டு வுக்கிரமாயெரித்தாக்கால் கெந்தகந்தான்பத்தும்
வாட்டுமே கெந்தகத்தின் நாலுக்கொன்று மருவியதோர் தாளகத்தை நிறுத்துவையே

விளக்கவுரை :


884. வைக்கவே கொஞ்சமாய்க் குப்பியிலேபோட்டு மறவாமல் அயக்கத்தியால் கிண்டுகிண்டு
நைக்கவே தாளகத்தைப் போட்டுப்போட்டு நலமாக கிண்டிவரச் சாகையாலே
உய்க்கவே சரக்கெல்லாம் பதங்கமாகும் உற்றவெறுங் குப்பியாயடியிற்காணும்
செயிக்கவே யடியிலே மருந்தில்லாட்டால் சீரானபதமென்று அடுப்பையாற்றே

விளக்கவுரை :


885. ஆற்றியே யிருநாழியானபின்பு அயக்குறட்டால் குப்பிதன்னை வெளியில்வாங்கி
போற்றியே நீர்தெளித்து ஆறப்போட்டு புகழாக குப்பியெல்லாம் தள்ளிப்போட்டு
தேற்றியே சிவப்பாகக் கம்பிபோலாய்ச் சிறுகதிராய்ப் பலகைபோலிருக்கும்பாரு
சாற்றியே பணவிடைதான் தேனிலுண்ணத் தப்பாதுநோயெல்லாம் சாடிப்போமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar