886. சாட்டியே
கல்வத்திலிதனைப்போட்டுத் தயங்காமல் பொடிபண்ணிக் காட்டுச்செம்பு
நீட்டியே
கிழங்கின்சாற்றுவைத்துக்கொண்டு நினைவாகயரைத்திடுவாய் மூன்றுநாள்தான்
வாட்டியே ரவியில்வைத்துப்
பொடியாய்ப்பண்ணி வளமானகாசிபென்ற குப்பியிலேபோடு
ஓட்டியே வாலுகையின்மேலேவைத்து
உற்பனமாயடுப்பெரித்து ஆறவிட்டுவாங்கே
விளக்கவுரை :
887. வாங்கியே முன்போலக்
கல்வத்திட்டு வளமானகிழங்குசார் விட்டுஆட்டி
தேங்கியே யரைத்திட்டு
மூன்றுநாள்தான் திறமாக பொடியாக்கிக் குப்பிக்கேற்றி
ஓங்கியே யரைக்கையிலே
பலந்தான்கெந்தி உற்பனமாய்ப் போட்டரைத்து குப்பிக்கேற்றி
தாங்கியே மூன்றுநாள்
தீயையாட்டு தப்பாமலிப்படிதான் ஐந்துதரமேற்றே
விளக்கவுரை :
[ads-post]
888. ஐந்துமே வாலுகையின்
தளத்தில்நிற்கும் அசங்காமல் அயச்சிமிழிலெடுத்துவைத்து
உஞ்சுமே நவலோகம்
நூற்றுக்கொன்றீய உற்பனமாய்ப் பத்தரையேமாற்றுகாணும்
செஞ்சுமே நோயெல்லாம்
தவிடுபொடியாகும் கெடியான காலனுமே யஞ்சிப்போவான்
மிஞ்சியதோர்
புளியுப்புவிட்டுத் தின்றால் மேவியதோர் சட்டைகக்கிப் பாலையாமே
விளக்கவுரை :
889. லையாஞ் சிவப்பான கெந்திதன்னை பகரக்கேள்பராபரைக்கு மூதல்நாகந்தான்
ஓலையாலெழுதவென்றால்
இதனினாட்டு உத்தமனே கடல்தண்ணீர்க் கொப்பேயாகும்
மாலையாங்கொன்றையைத்தான்தரித்தசிவன்மைந்தர்
மயங்கினார் இதினுடைய ஆட்டைபார்த்து
ஆலையாய் சரக்கெல்லாம்
கொல்லும்கொல்லும் அம்மம்மா ஆயியுட நாதந்தானே
விளக்கவுரை :
890. நாதமென்றுமிதுக்குப்பேர் சத்திகெந்தி
நலமான கோழித்தலைச் சூடனென்றும்
போதமென்ற விதினுடைய
வைப்புதன்னைப் போக்கோடே வெளியாகச் சொன்னேன் மக்காள்
நிதமென்ற நெல்லிக்காய்
கெந்தகத்தை நினைவாகப் பலம்பத்து நிறுத்துக்கொண்டு
கீதமென்ற செவ்வகத்தி
செவ்வலரிமுருக்கு கெடியான செவ்வல்லி செம்பருத்திதானே
விளக்கவுரை :