851. அண்டவித்தை யாருக்காம்
சிவயோகிக்காம் ஆத்தாளப்பூசித்தால் மிக்காகும்
பிண்டவித்தை
மும்மூலயோகிக்காகும் பேரான அசையையுட மூலிக்கொக்கும்
வண்டவித்தை பொல்லாதது
ரோகிக்கெய்து மகத்தான வேதாந்த ரிஷிகள்சித்தர்
கண்டவித்தை மனதடக்கி
யூமையாவார் காரணமாம் சீஷருக்குப் போதிப்பாரே
விளக்கவுரை :
852. பாரென்ற குருவெடுத்து
காசெடைதான்தூக்கிப் பரிவான சதுரகள்ளிப்பாலிற்போட்டு
காரென்ற சாமத்தில்
சுத்தசலமாகும் கல்வத்தில்சூதம்விட்டு சுத்திபண்ணிப்
பாரென்ற அயச்சட்டிக்குள்ளே
விட்டுப் பதறாமலொருசாமம் சுருக்குபோட
கோனென்ற யிட்டிளிபோல்
கட்டியாகும் கூப்பிட்டால் ஏனென்னும் வாதந்தானே
விளக்கவுரை :
[ads-post]
853. வாதந்தான் வேண்டுமென்றால்
சூதத்தாட்டு மகத்தான அஷ்டகர்மமெட்டுமாகும்
காதந்தான் கோடியது
நிமைக்குமுன்னே கலந்தோடிப்புக்கிவரு மணியினோசை
வேதந்தான் திடத்துமே
முடிவுக்கொக்கு மேவியதோர் சிலம்பொலியில் நாதங்கேட்கும்
நீதந்தான்
குகத்துக்கடுத்தவாறு நிமிஷத்திற்காயசித்தி கெவுனசித்தியாமே
விளக்கவுரை :
854. ஆமிந்தமணிநின்று
வுருகும்போது அந்திடைக்குத் தங்கமிட்டு ஆட்டுஆட்டு
சேமிந்தகெந்தகத்தை
ரெட்டுயிட்டு சிறப்பான பொற்றலையின் சாற்றாலாட்டி
போமிந்தசரக்கதனைக்
குப்பியில்வைத்துப் புகழாக சீலைமண்வலுவாய்ச்செய்து
ஓமிந்தகாசிபென்ற
மேருக்கேற்றி உற்பனமாம் வானுகையின் மேலேவையே
விளக்கவுரை :
855. வைக்கவே பனிரண்டுசாமந்தீயை
மறவாதே முத்தீயு மாட்டுமாட்டு
வைக்கவே தாளம்பூ
நிறத்தைபோலாம் சார்பாகச் சிலாகிட்டுக் கிண்டிப்பாரு
உய்க்கவே நவலோக
மாயிரத்துக்கொன்று உத்தமனே பதினாறுமாற்றுமாகும்
மொய்க்கவே
செந்தூரங்குன்றியுண்ணு மேனியுமே யருணன்போலாகுந்தானே
விளக்கவுரை :