போகர் சப்தகாண்டம் 911 - 915 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

911. வாட்டியபின் சுருக்கிடவே மெழுகாய்ப்போகும் வகையான கட்டினமாம் நீற்றினமுமாகும்
பூட்டியபின் செந்தூரங்களங்குமாகும் போக்கான சத்துவகை குளிகையாகும்
நீட்டியபின் நவலோகம் வேதையாகும் நிலைநிற்கும் காவிக்கும் புடத்துக்கே 
ஓட்டியபின் செயநீரில் சுருக்காம்வேதை உற்பனமாம் காயசித்துக் கெவனமாமே

விளக்கவுரை :


912. சீனமாமப்பிரேகங் காசுமைந்து சிறப்பான சூடனது காசுமைந்து
பானமாம்பூரமது காசுமைந்து பகருகின்ற வெண்காரங் காசுமைந்து
வூனமாம் வீரமது காசுமைந்து உற்பனமாஞ் சத்தியென்ற சாரமைந்து
கானமாம் அன்னமென்ற பேதியைந்து கனமான கல்வத்திற்பொடியாய்ப்பண்ணே

விளக்கவுரை :

[ads-post]

913. பண்ணியே வெடியுப்பு நீரைவார்த்து பாங்காக வரைத்திடுவாய் ஏழுநாள்தான்
ஒண்ணியே கலசத்திற் சுண்ணாம்புபூசி வுத்தமனே யதற்குள்வைத்து புடத்தைப்போடு
நண்ணியேயாறவிட்டுப் பனியில்வைக்க நலமான வாரிதீபோல் நலமுமாகும்
கண்ணியே இந்நீரில் வீரம்பூரம் காசெடைதான் பொடித்திட்டு வைத்துக்கொள்ளே

விளக்கவுரை :


914. கொள்ளென்ற செயநீரால் பாஷாணங்கள் குறிப்பாக சுருக்கிடவே கட்டிப்போகும்
அள்ளென்ற கல்லுப்பு மணிபோலாடு மாச்சரிய நாகத்தையமுக்கிக்கொல்லும்
துள்ளென்ற சூதத்தை மாலையாக்கும் துடியான பூரத்தை சுன்னம்பண்ணும்
புள்ளென்ற லிங்கத்தை மெழுகுபண்ணும் போகத்திலே வெகுகோடியாடலாமே

விளக்கவுரை :


915. ஆடலாம் துருசென்ற செயநீராலே அப்பனே துருசதுவும் பலந்தான்பத்து
சூடலாங் கெந்தகந்தான் பலந்தான்மூன்று சுடற்கொடியாஞ்சூடனது பலமுமூன்று
வூடலாம் வீரமது பலந்தானொன்று உற்பனமாம் வெள்ளையது பலமுமூன்று
நீடலாம் பூநீறுபலமுமொன்று நிச்சயமாம் காரமது பலமூமொன்றே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 906 - 910 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

906. ஐஞ்சோடு கல்லுப்பு காசெடைதானைந்து அழகான பூநீறு காசுமைந்து
நஞ்சோடு சீனமதுகாசுமைந்து நலமானவப்பிரேகங் காசுமைந்து
பஞ்சோடு சீனமது காசுமைந்து பாங்கான சூடனது காசுமைந்தே  

விளக்கவுரை :


907. காசுதானைந்தாகும் வெண்காரம்பூரம் காணிதுக்குள் சமனாகக் கடல்நுரையைப்போடு
மாசுதானிந்துப்பு அன்னபேதி மகத்தான சத்தியென்ற சாரத்தோடு
தூசுதானிதுவெல்லாம் கல்வத்திட்டுத் துடியாகப் பொடிபண்ணிச் சொல்லக்கேளு
பூசுதான் பழம்புளிதான் பலமும்பத்து புகழான கொறுக்காயின் பலமும்பத்தே

விளக்கவுரை :

[ads-post]

908. பத்தான ஏறலென்சதையினோடு பாங்கான பருங்கொன்றை பழத்தைக்கேளு
வித்தான பலம்பத்து நிறுத்துப்போட்டு மேவியதோர் எலுமிச்சை பழச்சார்விட்டு
முத்தாக இடித்துமைபோல் மெழுகாய்ப்பண்ணி முயற்சியாய் பில்லைசெய்து வுலரப்போட்டு
அத்தான பூப்புடத்தில் தயிலம்வாங்கி அழகான முன்மருந்தில் விட்டுஆட்டே

விளக்கவுரை :


909. ஆட்டியே ஏழுநாள் ரவியில்போடு அழகான அடிகனத்த கலசம்வாங்கி  
பூட்டியே கற்சுன்னங் குழைத்துக்கொண்டு புகழான விரல்பருமங் கனமாய்ப்பூசி
தேடியே கல்வத்தினுள்ளும்பூசிச் சிறப்பான சில்லுக்கு நடுவே பூசி
வாடியே கலயத்துள் மருந்தைவைத்து வகையாக சில்லிட்டுச் சீலைசெய்யே

விளக்கவுரை :


910. செய்தபின்பு நூறெருவிற் புடத்தைப்போடு திறமாக ஆறவிட்டு யெடுத்துப்பாரு
கைதபின்பு பொடிபண்ணிப் பீங்கானில்வைத்துக் கனமான பனியில்வைக்க செயநீராகும்
மைதபின்பு இந்நீரில் வீரம்பூரம் மருவநன்றாய்ப் பொடிபண்ணிச் செயநீரிற்போடு
எய்தபின்பு சரக்கான வறுபத்துநாலு மிதமான செயநீரிற் தோய்த்துவாட்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 901 - 905 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

901. அரைத்திட்டுப் பொடிபண்ணி மேருக்கேற்றி ஆறவிட்டுப் பனிரண்டுசாமந் தீயைப்போடு
வரைத்திட்டப் பதங்கமதுயிறுகியேறி வகையான பஞ்சபட்சி பாஷாணமாகும்
நரைத்திட்டுப் போகாதுமெழுகுபண்ணிக்கொண்டால் நவலோகமாயிரத்துக்கோடும்பாரு
புரைத்திட்டு வீசமுடை பாலிலுண்ணு பொலிவான சட்டைகக்கி வாலையாமே

விளக்கவுரை :


902. ஆமென்ற பவளப்புற்றுப் பாஷாணந்தான் அறையிறேன் யானறிந்தமட்டும்
போமென்ற காளகந்தான் பலமும்பத்து புகழானவெள்ளையென்ற பாஷாணந்தான்
காமென்ற பலம்பத்து கல்வத்திட்டு கனமாகவரைத்துநன்றாய் பொடியாய்ப்பண்ணி
தேமென்ற ரண்டுபலங்கெந்தியிட்டு சிறப்பாக காசிபென்ற மேருக்கேற்றே

விளக்கவுரை :

[ads-post]

903. ஏற்றியே வானுகையின் மேலேவைத்து இதமாகக் கமலம்போல் தீயைமூட்டு
போற்றியே நால்சாமங் கமலம்போலாட்டு புகழாக ஆறவிட்டுத் தண்ணீர்குத்து
சாற்றியே குப்பியைத்தான் உடைத்துப்பார்த்தால் சாங்கமாய்ப் பாஷாணம் புற்றுப்போலாகு
மாற்றியே யிதைக்கட்டி வேதையோடில் அம்மம்மா வெகுதூரமோடுங்காணே

விளக்கவுரை :


904. காணப்பா கெவுரியுடவைப்புகேளு கடிதான வெள்ளையென்ற பாஷாணந்தான்
ஊணப்பா பலம்பத்துநிறுத்துக்கொண்டு உத்தமனே கெந்தகம் ரண்டரைபலந்தான்
பூணப்பாபொடிபண்ணி மேருக்கேற்றிப் புகழான வாலுகையின்தீயைமூட்டு
வீணப்பா கமலம்போல் நாலுசாமம் விடுபடவே யெரித்திட்டு உடைத்துவாங்கே

விளக்கவுரை :


905. வாங்கியே யுடைத்தாக்கால் அடுக்குபோல வகையான சிவப்புமஞ்சள் போலிருக்கும்
ஓங்கியேயிதைக்கட்ட ஆராலாகும் உத்தமனே வெடியுப்புச் செந்நீராகும்
தேங்கியே வெடியுப்புச் செயநீர்கேளு சிறப்பான பெருங்கம்பி நாலாங்காய்ச்சல்
பாங்கியே பலம்பத்து நிறுத்துக்கொண்டு பக்குவமாஞ்சாரமது காசெடைதானைந்தே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 896 - 900 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

896. நிறமான கெந்தகத்தில் வேகம்பட்டால் நினைக்குமுன்னே சூதமதுயேமமாகும்
மறவான லோகத்தில் பரிசிக்கவேதை யானுண்டகற்பமிது யானுங்கொண்டேன்
திறமான தங்கமது செம்புமாகுஞ் சேர்ந்தநவலோகத்தில் யிரத்துக்கோடும்
குறமாது மாமியுட நாதமப்பா கொண்டாக்கால் கடிகையிலே சித்தியாமே

விளக்கவுரை :


897. சித்தியாந் தேவருக்கும் ஐந்துபூதம் ஜெகத்திலுள்ள சித்தருக்கும் ஐந்துபூதம்
முத்தியாம் ஊர்வனமும் ஐந்துபூதம் உயர்ந்துநின்ற விருட்சமெல்லாம் ஐந்துபூதம்
புத்தியாம் பாம்பினமும் ஐந்துபூதம் போக்கான ஐந்தினாலெல்லாமாச்சு
பத்தியாம் வாதத்தில் பஞ்சபட்சி பாஷாணவைப்புதனைப் பாடினேனே

விளக்கவுரை :

[ads-post]

898. பாடினேன் வடமொழியைப்பிரித்துப்பார்த்து பரிவாக ஆத்தாளைக் கேட்டுகேட்டு
ஓடினேன்குளிகையிட்டு நாதாக்கள் பதத்தில் உகந்தடுமை யாகியல்லோ வாதம்பார்த்தேன்
வாடினேன் மனமிளைத்து வாதம்பார்த்து பயக்கமெல்லாம் குருசொல்ல மனதிலெண்ணி
நாடினேன் உலகக்தோர் நம்மைபோல நவிந்துயான் வெளியாகத் திறந்திட்டேனே

விளக்கவுரை :


899. திறந்திடாதிருந்தாக்கால் சரக்குவைப்பை ஜெகத்திலே வாதம்பொய்யாகுமென்று
இறந்திடாதிருக்க வெளியாகச்சொன்னேன் ஏழைமதிபோகாதே பார்க்கவென்றால்
மறந்திடாக் கருவையெல்லாம் உன்னிப்பாரு மாயமாம் வாசினையால் மனம்புண்ணாகும்
பிறந்திடாதிருக்கவென்றால் காயசித்திபண்ணு பெரியோர்கள் பதம்போற்றிக் கருவைக்கேளே

விளக்கவுரை :


900. கருவென்ன தாளகமும் பலமுமைந்து காந்தளப்பூப்போலான பூநீறைந்து
உருவென்ன லிங்கமது பலமுமைந்து உயர்த்தியாய் சிலையதுவும் பலமுமைந்து
குருவென்ன கெவுரியது பலமுமைந்து கூட்டியெல்லாம் கல்வத்திற்பொடியாய்ப்பண்ணி
திருவென்ன செங்கீரைச்சாறுவிட்டு சிறப்பாக வேழுநாள் அரைத்திடாயே

விளக்கவுரை :


Powered by Blogger.