901. அரைத்திட்டுப் பொடிபண்ணி
மேருக்கேற்றி ஆறவிட்டுப் பனிரண்டுசாமந் தீயைப்போடு
வரைத்திட்டப்
பதங்கமதுயிறுகியேறி வகையான பஞ்சபட்சி பாஷாணமாகும்
நரைத்திட்டுப்
போகாதுமெழுகுபண்ணிக்கொண்டால் நவலோகமாயிரத்துக்கோடும்பாரு
புரைத்திட்டு வீசமுடை
பாலிலுண்ணு பொலிவான சட்டைகக்கி வாலையாமே
விளக்கவுரை :
902. ஆமென்ற பவளப்புற்றுப்
பாஷாணந்தான் அறையிறேன் யானறிந்தமட்டும்
போமென்ற காளகந்தான்
பலமும்பத்து புகழானவெள்ளையென்ற பாஷாணந்தான்
காமென்ற பலம்பத்து
கல்வத்திட்டு கனமாகவரைத்துநன்றாய் பொடியாய்ப்பண்ணி
தேமென்ற
ரண்டுபலங்கெந்தியிட்டு சிறப்பாக காசிபென்ற மேருக்கேற்றே
விளக்கவுரை :
[ads-post]
903. ஏற்றியே வானுகையின் மேலேவைத்து
இதமாகக் கமலம்போல் தீயைமூட்டு
போற்றியே நால்சாமங்
கமலம்போலாட்டு புகழாக ஆறவிட்டுத் தண்ணீர்குத்து
சாற்றியே குப்பியைத்தான்
உடைத்துப்பார்த்தால் சாங்கமாய்ப் பாஷாணம் புற்றுப்போலாகு
மாற்றியே யிதைக்கட்டி
வேதையோடில் அம்மம்மா வெகுதூரமோடுங்காணே
விளக்கவுரை :
904. காணப்பா கெவுரியுடவைப்புகேளு
கடிதான வெள்ளையென்ற பாஷாணந்தான்
ஊணப்பா
பலம்பத்துநிறுத்துக்கொண்டு உத்தமனே கெந்தகம் ரண்டரைபலந்தான்
பூணப்பாபொடிபண்ணி
மேருக்கேற்றிப் புகழான வாலுகையின்தீயைமூட்டு
வீணப்பா கமலம்போல் நாலுசாமம்
விடுபடவே யெரித்திட்டு உடைத்துவாங்கே
விளக்கவுரை :
905. வாங்கியே யுடைத்தாக்கால்
அடுக்குபோல வகையான சிவப்புமஞ்சள் போலிருக்கும்
ஓங்கியேயிதைக்கட்ட ஆராலாகும்
உத்தமனே வெடியுப்புச் செந்நீராகும்
தேங்கியே வெடியுப்புச்
செயநீர்கேளு சிறப்பான பெருங்கம்பி நாலாங்காய்ச்சல்
பாங்கியே பலம்பத்து
நிறுத்துக்கொண்டு பக்குவமாஞ்சாரமது காசெடைதானைந்தே
விளக்கவுரை :