896. நிறமான கெந்தகத்தில்
வேகம்பட்டால் நினைக்குமுன்னே சூதமதுயேமமாகும்
மறவான லோகத்தில்
பரிசிக்கவேதை யானுண்டகற்பமிது யானுங்கொண்டேன்
திறமான தங்கமது செம்புமாகுஞ்
சேர்ந்தநவலோகத்தில் யிரத்துக்கோடும்
குறமாது மாமியுட நாதமப்பா
கொண்டாக்கால் கடிகையிலே சித்தியாமே
விளக்கவுரை :
897. சித்தியாந் தேவருக்கும் ஐந்துபூதம் ஜெகத்திலுள்ள சித்தருக்கும் ஐந்துபூதம்
முத்தியாம் ஊர்வனமும்
ஐந்துபூதம் உயர்ந்துநின்ற விருட்சமெல்லாம் ஐந்துபூதம்
புத்தியாம் பாம்பினமும்
ஐந்துபூதம் போக்கான ஐந்தினாலெல்லாமாச்சு
பத்தியாம் வாதத்தில்
பஞ்சபட்சி பாஷாணவைப்புதனைப் பாடினேனே
விளக்கவுரை :
[ads-post]
898. பாடினேன்
வடமொழியைப்பிரித்துப்பார்த்து பரிவாக ஆத்தாளைக் கேட்டுகேட்டு
ஓடினேன்குளிகையிட்டு
நாதாக்கள் பதத்தில் உகந்தடுமை யாகியல்லோ வாதம்பார்த்தேன்
வாடினேன் மனமிளைத்து
வாதம்பார்த்து பயக்கமெல்லாம் குருசொல்ல மனதிலெண்ணி
நாடினேன் உலகக்தோர் நம்மைபோல
நவிந்துயான் வெளியாகத் திறந்திட்டேனே
விளக்கவுரை :
899. திறந்திடாதிருந்தாக்கால்
சரக்குவைப்பை ஜெகத்திலே வாதம்பொய்யாகுமென்று
இறந்திடாதிருக்க
வெளியாகச்சொன்னேன் ஏழைமதிபோகாதே பார்க்கவென்றால்
மறந்திடாக் கருவையெல்லாம்
உன்னிப்பாரு மாயமாம் வாசினையால் மனம்புண்ணாகும்
பிறந்திடாதிருக்கவென்றால்
காயசித்திபண்ணு பெரியோர்கள் பதம்போற்றிக் கருவைக்கேளே
விளக்கவுரை :
900. கருவென்ன தாளகமும்
பலமுமைந்து காந்தளப்பூப்போலான பூநீறைந்து
உருவென்ன லிங்கமது
பலமுமைந்து உயர்த்தியாய் சிலையதுவும் பலமுமைந்து
குருவென்ன கெவுரியது
பலமுமைந்து கூட்டியெல்லாம் கல்வத்திற்பொடியாய்ப்பண்ணி
திருவென்ன
செங்கீரைச்சாறுவிட்டு சிறப்பாக வேழுநாள் அரைத்திடாயே
விளக்கவுரை :