போகர் சப்தகாண்டம் 906 - 910 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 906 - 910 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

906. ஐஞ்சோடு கல்லுப்பு காசெடைதானைந்து அழகான பூநீறு காசுமைந்து
நஞ்சோடு சீனமதுகாசுமைந்து நலமானவப்பிரேகங் காசுமைந்து
பஞ்சோடு சீனமது காசுமைந்து பாங்கான சூடனது காசுமைந்தே  

விளக்கவுரை :


907. காசுதானைந்தாகும் வெண்காரம்பூரம் காணிதுக்குள் சமனாகக் கடல்நுரையைப்போடு
மாசுதானிந்துப்பு அன்னபேதி மகத்தான சத்தியென்ற சாரத்தோடு
தூசுதானிதுவெல்லாம் கல்வத்திட்டுத் துடியாகப் பொடிபண்ணிச் சொல்லக்கேளு
பூசுதான் பழம்புளிதான் பலமும்பத்து புகழான கொறுக்காயின் பலமும்பத்தே

விளக்கவுரை :

[ads-post]

908. பத்தான ஏறலென்சதையினோடு பாங்கான பருங்கொன்றை பழத்தைக்கேளு
வித்தான பலம்பத்து நிறுத்துப்போட்டு மேவியதோர் எலுமிச்சை பழச்சார்விட்டு
முத்தாக இடித்துமைபோல் மெழுகாய்ப்பண்ணி முயற்சியாய் பில்லைசெய்து வுலரப்போட்டு
அத்தான பூப்புடத்தில் தயிலம்வாங்கி அழகான முன்மருந்தில் விட்டுஆட்டே

விளக்கவுரை :


909. ஆட்டியே ஏழுநாள் ரவியில்போடு அழகான அடிகனத்த கலசம்வாங்கி  
பூட்டியே கற்சுன்னங் குழைத்துக்கொண்டு புகழான விரல்பருமங் கனமாய்ப்பூசி
தேடியே கல்வத்தினுள்ளும்பூசிச் சிறப்பான சில்லுக்கு நடுவே பூசி
வாடியே கலயத்துள் மருந்தைவைத்து வகையாக சில்லிட்டுச் சீலைசெய்யே

விளக்கவுரை :


910. செய்தபின்பு நூறெருவிற் புடத்தைப்போடு திறமாக ஆறவிட்டு யெடுத்துப்பாரு
கைதபின்பு பொடிபண்ணிப் பீங்கானில்வைத்துக் கனமான பனியில்வைக்க செயநீராகும்
மைதபின்பு இந்நீரில் வீரம்பூரம் மருவநன்றாய்ப் பொடிபண்ணிச் செயநீரிற்போடு
எய்தபின்பு சரக்கான வறுபத்துநாலு மிதமான செயநீரிற் தோய்த்துவாட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar