போகர் சப்தகாண்டம் 1176 - 1180 of 7000 பாடல்கள்
1176. வைத்தபின்பு
கூடயிடமருந்துகேளு வானவெண்காரம்கெந்தி
வைத்தபின்பு சவ்வீரம்
அரிதாரம் பூரம்கருநாபி கஸ்தூரிதொட்டிகூட
வைத்தபின்பு வகையொன்று
பணந்தானொன்று பண்பான வொன்பதையுங் கல்வத்திட்டு
வைத்ததிலே யரைத்துநன்றாய்
தயிலத்தில்சேர்த்து சாங்கமாய் வைத்திடவே சிங்கியாச்சே
விளக்கவுரை :
1177. ஆச்சப்பா சூதமது
கருத்துகொண்டு அழகாகுங் கல்வத்திற்நிறுத்திவிட்டு
பாச்சப்பா
சிங்கியொருபொட்டுபோடப் பதறாமல் சேருரசம் வெண்ணெயாகும்
கேச்சப்பா கிளிபோல
கட்டிக்கொண்டு சிறப்பான சூடனிட தீயில்வாட்டி
ஓச்சென்ற கரண்டியிலே
எண்ணெய்குத்தி யுருக்கிடவே வெள்ளிபொன்போலாகும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1178. ஆடுகின்ற சூதமென்ற
ஆணைப்பட்டுதானால் ஆகாகாவாதமென்ன மசகமாச்சு
நாடுவாரிச்சூதம்
தாழ்வடமாய்க்கோர்த்து நலமாகச் சகாசனத்திலிருந்துகொண்டு
ஊடுவார் சிவசிவா வென்றுமூட்ட
வுவந்துமுன்னே பஞ்சகர்த்தாள் நிற்பார்பாரு
தேடுவார் கேட்டதெல்லாம்
ஈவாரீசன் ஜெகஜால வித்தையெல்லாம் தெளிந்துபோமே
விளக்கவுரை :
1179. போமென்ற சிங்கினால்
கட்டுசூதம் புகழான வேரடைக்குத் தங்கம்நாலு
ஆமென்ற சுண்ணாம்புக்கு
கையில்வைத்து அப்பனே புடம்போட தங்கம்நீறும்
நாமென்ற நவலோக
மாயிரத்தஉக்கோடும் நாமறியோமிதனுடைய வர்ணந்தன்னை
ஓமென்ன பரிதிபோல்
நிறமேயாகும் உத்தமே வெகுசுருக்கு ஓடிப்பாரே
விளக்கவுரை :
1180. ஓட்டுவது சவர்க்காரச்
சுன்னந்தொட்டு உப்பினுட வுறதிதொட்டு வுயர்ந்துஓடும்
ஆட்டுவது வர்ணமென்ற
சூதத்தாலே ஆச்சரியஞ் சிவப்பென்ன கெந்தியாலே
பூட்டுவது தங்கத்தால்
காரத்தாலே பூப்போலாஞ் சுன்னமென்ன வீரந்தானே
நாட்டுவது விண்ணான பூரத்தாலே
நலமான வாதமிதிலடங்கிப்போச்சே
விளக்கவுரை :