1161. வாங்கியே பீங்கானில்
பதனம்பண்ணி வளமான நெற்குழியில்புதைத்துவைத்து
பாங்கியே பட்சத்திற்
பிறகுவாங்கிப்பார்க்கையிலே கடராஜனென்றுபேராம்
தேங்கியே கோபமாம்
ருத்திரனாரும் சிங்கமாங்கொடுஞ்சூரனாகும்
கோங்கியே கொடுங்கால
விஷமதாகும் குளிகைக்குப்புடந்தானும் சுருக்கம்பாரே
விளக்கவுரை :
1162. பாரென்ற புடந்தானுஞ்
சாத்திரத்தினுள்ளே பலபலவாய்ச் சொன்னார்கள் நாதாக்கள்சித்தர்
நேரென்ற திருமூலர்
ஆயிரத்தில்சொன்னார் நேர்ப்பான காலாங்கி சொல்லக்கேட்டுத்
தேனென்ற வேழாயிரத்தில்தான்
திறந்துசொன்னேன் சிறப்பான சாறனைதான் செய்யமார்க்கம்
வானென்ற ஆகாசவீதியோடி
லாவாக்கால் சிறுபிள்ள யோடுங்காணே
விளக்கவுரை :
[ads-post]
1163. காணிந்தச் சூதம்நின்று
வுருகும்போது கலங்காதே சம்பாதஞ் சத்தையூட்டு
பூணிந்த ரசம்பத்து
சத்துபத்து பொலிவாக வுருகையிலே புடமொன்று நீட்டு
ஆணிந்தச் சத்துடராகமெல்லா
மப்பனே பலபலவா வர்ணங்காணும்
தோணிந்தச் சூதத்தை
நிறுத்துப்பார்க்கத் துடியாக மணியிடையே நிற்குமென்னே
விளக்கவுரை :
1164. என்னவே புடத்துக்கே ஒப்பு
ஈசனுடபுடந்தானுந் தோற்றுப்போகும்
மன்னவே மணித்தாயார்
சொல்லையானும் வகைவகையாய்ச் சோதித்து யானுங்கண்டேன்
கன்னவேயுபசங்கள்
நூற்றிரண்டுபத்தும் காரசாரங்கள் மதலிருபத்தைந்து
பன்னவே பாஷாணமறுபத்துநாலும்
பாங்கான நவலோகம் நவாஷ்ட்டின்மூட்டே
விளக்கவுரை :
1165. ஊட்டியே இப்படிதான் சாரணையே செய்யில் ஒன்றாச்சி கெவுனமது நூற்றொக்கோடி
மாட்டியே மறுதரந்தான்
விடுவித்தாக்கால் மகத்தான ஆயிரமாங்காதமோடும்
நீட்டியே ரவிதனிலே
யீய்ந்தாயானால் நிகரான சிகாரவரை காணலாகும்
ஆட்டியே நாலுதரம்
விடுவித்தேற அப்பனே லட்சமாங்காதம்போமே
விளக்கவுரை :