1156. வார்த்துமே
யரைத்துநன்றாய்குகையிற்பூசி வாகாகக்கட்டினதோர் சூதம்வைத்து
ஏர்த்துமே வுருகையிலே
பூநாகசத்தை இதமான சூதத்தினிடையே தாக்குபோர்த்துமே
புடந்தானுஞ் சொல்லக்கேளு
புகழான வானசத்தை சித்திரமூலங்
கோர்த்துமே தொடையோடு
முள்ளங்கித்தாழை கொடிதான நாயுருவி வமுரிகூட்டே
விளக்கவுரை :
1157. கூட்டுநீ புரசோடுதேவதாளி கொடிக்கள்ளி புனமுருங்கை சதுரக்கள்ளி
மாட்டுநீயெள்ளோடு
புறாவினெச்சம் மகத்தான பதினைந்தும் வெவ்வேறேவாங்கித்
தீட்டுநீ வெவ்வேறாய்ச்
சுட்டுசாம்பல் திறமாக வகைவகையாய்ப் படியளந்துபோட்டு
மூட்டுநீ பாண்டத்திற்
கொட்டிநீயு மூத்திரந்தான் பதினைந்துபடிவாரே
விளக்கவுரை :
[ads-post]
1158. படியைந்து கோமியத்தைக்
கூடவாரு பாங்கான கழுதையொடு குதிரையானை
நெடியைந்து ஆடோடுநாலுங்கேளு
நிலவரமாயமுரிபடியைந்யுவாரு
கொடியைந்து படிதானும்
நாற்பதாச்சு கூசாதே சாம்பலுக்குங் கரைத்துவைத்து
தேடியைந்து மூன்றுநாள்
தெளிவைவாங்கிச் சிறப்பாக வடுப்பேற்றி யெரித்திடாயே
விளக்கவுரை :
1159. எரித்திடவே குழம்புபோல்
வருதல்கண்டு இணக்கமொடு படிகாரங் கெந்தினுப்பு
அரித்திட்டுக் கல்லுப்புச் சத்திசாரம்
ஆதியாம் நவாச்சாரம் ஏவட்சாரம்தான்
பொரித்திட்ட வெங்காரஞ்
சவர்காரம்தான் புகழான கெந்தியுப்பு வளகிலுப்பு
சரித்திட்டு கடல்நுரையு
மன்னபேதி சார்பான துரிசியொடு பூநீறுதானே
விளக்கவுரை :
1160. தானான வகைக்கொன்று
பலமுமைந்து சார்பாகப் பொடிபண்ணிக் குழம்பிலிட்டுப்
பானான பாஷாணநிலையைக்கேளு
பரிவான கெந்தியொடு சங்குசுன்னந்
தேனான வீரமொடு வகைக்குமொரு
பலந்தான்சிறக்கவே எருக்கம்பால் படிதான்வாரு
கானான
குழம்புதனிலொக்கவிட்டுக் கலரவேயடுப்பெரித்து மெழுகுபோல்வாங்கே
விளக்கவுரை :