போகர் சப்தகாண்டம் 1151 - 1155 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1151 - 1155 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1151. மாளாமற்கனமான கற்பமுண்ணு மாயியைத்தான் பூசைபண்ணு மயக்கம்போக
தாளாமல் வாசியைத்தான் பூட்டிவாங்கி சதாநித்தம் குருபதத்தில் சரணம்பண்ணு
ஆளாமல் பலத்திலஃ மனதையூணு ஆனந்தமாவதற்கு அமுதமுண்ணு
மீளாமல் கெவனத்திலேறவென்றால் விடுஞ்சூதம் பசிக்குண்ண மருந்ருகேளே

விளக்கவுரை :


1152. கேளுநீ யானையென்ற சூதராஜன் கெவனத்தில் பறக்கின்ற மார்க்கமெல்லாம்
கேளுநீ பரிசுத்த வேமமாக விbங்கியதோர் பகலிரவுமொன்றாய்க்காட்ட
தாளுநீ நிமைக்குமுன்னே கோடிகாதஞ் சஞ்சரித்து அடுக்கெல்லாம் தாண்டியேற
மீளுநீ அட்டமா சித்தியாடமிருந்துவட வாக்கினிபோல் பசியண்டாக்கே

விளக்கவுரை :

[ads-post]

1153. ஆக்குவது சூதமது குகையில்நின்று அமளியாயுருக்கையிலே பூநாகத்தை
நோக்குவது சமனாகக் கொடுத்துவாங்கி நேராகப்புடமிட்டு விடுவித்தாக்கால்
தேக்குவது சூதமென்ற ராஜாவுக்குச் சிவணுண்ட ஆலம்போல்பசியண்டாகும்
நீக்குவது அரசனைப்போல் நினைத்ததெல்லாம் வெல்லும் நேரிட்ட கெந்திசத்தை யிட்டுத்தாண்டே

விளக்கவுரை :


1154. தாண்டியே பின்னுபாசங்களெல்ல்ம் முட்டுதனித்தபின்பு மூலிகைக்குச் சத்தைப்பூட்டு
தீண்டியபின் நவலோக மிட்டுத்தீரு திறமாக புடத்தையிட்டு நவாவிட்டிணமூட்டு
வேண்டியபின் தனித்ததங்கம் செம்பைபூட்டு மேலான மணிபார்த்த வருணனைபோலாகும்
தூண்டியே யிவ்வளவுங்கடந்துபோச் சுகமான செம்பையினிசொல்லக்கேளே

விளக்கவுரை :


1155. சொல்லவே குகைக்குள்ளே மருந்துபூசத் துடியான சிலைகெந்திநிமிளைக்காந்தம்
கொல்லவே பூநாகமிவை தானைந்து கொடிதாகச்சமமாக நிறுத்துகொண்டு
கல்லவே கஞ்சாவினஃ விரையினொக்க கலரவே ரோமத்தின் தயிலம்வார்த்து
பல்லவே மூன்றுநாள்ட்டியாட்டிப் பக்குவமாய் ரோமத்தின் தயிலம்வாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar