1146. கொல்லுமே சூதமதுமாண்டுதானால்
கோடானகோடிவித்தை யாடலாகும்
வெல்லுமே சூதத்திற்
கெந்திரெட்டி விரைவாகத்தான் சேர்த்து ஜெயநீர்தன்னால்
புல்லுமே நாற்சாம மரைத்தபோது
புகழான மதவானை யடங்கும்பாரு
தெல்லுபோல் பில்லையது
செய்துமேதான் சிறப்பாக ரவியில்வைத்து காயப்போடே
விளக்கவுரை :
1147. போடவே பில்லையது
காய்ந்தபின்பு பொலிவாக வோட்டில்வைத்து சீலைசெய்து
நீடவே தளவாயாஞ் சட்டிதன்னில்
கெடிதாக வுப்பதனை நிரபக்கொட்டி
சூடவே வகலதனைவோட்டில்வைத்து
சூட்சமுடன் தானெரிப்பாய் நாலுசாமம்
சாடவே ஆறவிட்டு மறுநாள் தீயை
சட்டமுடன் தானெரிப்பாய் கமலந்தானே
விளக்கவுரை :
[ads-post]
1148. கமலமாமேழு நாளெரிப்பாய்
மைந்தா கருணைபெற தீயாறி யெடுத்துப்பாரு
அமலமாஞ் செந்தூரமென்ன
சொல்வேன் அப்பனே கண்கொள்ளா வேதையாகும்
தமலமாய் வெள்ளிசெம்பில்
பத்துக்கொன்று தாக்கடா மாற்றதுவும் பத்தேயாகும்
புமலமாம் பசுந்தங்கமிதுக்
கொப்பாமோ பூதலத்தி லாச்சரியமிகு வேதையாமே
விளக்கவுரை :
1149. வேதையாங் குடவனிவே மாற்றெட்டாகும் வெளியான தனிச்செம்பில் மாற்றோமெத்த
பாதையாமின்ன வெகுவேதை
யொடும்பாங்கான செந்தூரஞ் சொல்லப்போமோ
நீதையாம் ரசீதமென்ற
சூதவித்தை நிலைத்துதடா யேமமென்ற வித்தையாகும்
மேதையாஞ் சியோகம் நிலைக்கப்பாரு
மேதினியில் ராசனாய் வாழலாமே
விளக்கவுரை :
1150. தானான குருவுடைய
பதத்தைப்போற்றி சமுசயங்க ளிருந்தெல்லாங் கேட்டுக்கேட்டு
கோனான குருசொல்ல வாதம்பாரு
கருவில்லாதிருந்தாக்கால் நூலைப்பாரு
ஆனான நூலல்லால்
வாதம்பார்த்தால் அணுகாது வாதமொன்றுந் தலைகீழாகும்
தேனான சூதத்தின்
சாமமட்டுந்தியேங்கியே நரகெய்திமாளுவானே
விளக்கவுரை :