1166. போமெனவே ஐந்துதரம்
விடுவித்தேறப் பொருந்தவொரு கோடிக்கே யோடும்பாரு
தாமெனவே ஆறானால் பரிசைவேதை
தாண்டியே யேழுதரங்கடந்துயேறு
ஆமெனவே லக்கினங்கள்
சொல்லப்போகா அண்டொணாலோகத்தில் தெரிசவேதை
நாமெனவே காண்கிலேன்
சித்தர்வேதை நண்ணிய பேரீதுலகில் வேதையாமே
விளக்கவுரை :
1167. வேதையாஞ் செப்பிடிலோ ரூபவேதை
விளங்கியே பழுக்கவென்றால் பழுக்கும்வேதை
காதையாங் குளிகைதனைக்
காதில்வைத்துக் கடுகியே யுரைப்பராகில் பொன்னுமானால்
மாதையாம் பொன்னென்றே
உன்னநெஞ்சில் மலைகளெல்லாம் பொன்னாகு மக்காள்பாரு
பாதையா பகலிரவு
மொன்றாய்ப்போகும் பராபரித்தாய் சிவன்வந்து பூசிப்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1168. பாருங்கள் உபசரங்கள்
நூற்றிரண்டு பத்தும் பாஷாண மூலிகையின் சத்துங்கூட
கோருமே நவலோகம் பாஷாணங்கள்
குறிப்பாகக் குளிகைக்குக் கொடுத்துருக்கில்
வீருமே மாற்றதுவும்
இருபதாகும் விண்ணுலகி லிவ்வேதை காட்டப்போமோ
ஆருநீ விடுவித்தால்
சதமுமாச்சு அறிந்திப்படி செய்வார்தாமே
விளக்கவுரை :
1169. ஆமிந்தமார்க்கமாய்ச்
சூதத்துக்கு அணைத்தணை சத்துகளை ஈயானாகில்
போமிந்தக் கெவுனமே
சித்துப்பொய்யாய்ப் போனமட்டுங் கண்டலைந்து பழுத்துமாய்வான்
நாமிந்த வுபசரங்கள்
பொன்னேயாச்சு கடுஞ்சூதராசன் நிகேபதளித்தாக்கால்
தாமிந்த நாகமுண்ட சூதங்கேளு
தனிவேதை யாத்தாளும் அறியாள்கேளே
விளக்கவுரை :
1170. கேளுநீ பனிரண்டாம்
குளிகைதன்னில் கெடியான சுரபியொடு போகந்தன்னை
வாளுநீ ரண்டுநவலோகம்
போதுமற்ற மற்றகுளிகைதனை விடுவித்தேறு
வேளுநீ சத்துகளை
யூட்டிவூட்டி விடுவித்துச் சாரணைகள் செய்யாவிட்டால்
தாளுநீ கெவுனமது எடுத்துவோடா
தனித்துமே பரிசத்தில் வேதையில்லை
விளக்கவுரை :