1171. என்னவே சாரணையைத்
தீர்க்கமாய்ச் செய்யில் எடுத்தோடும் அண்டமெல்லாம் பதமுந்தாண்டி
பன்னவே ரவிகோடிபிடியோகோடி
பரிதியிலே கணங்களெல்லா மயங்கிப்போகும்
தன்னவே குளிகையினால்
மேற்கொண்டோடுஞ் சந்திரனிலோடையிலே நடுக்கங்காணும்
மன்னவே குளிகைதன்னால்
குளிரும்போகும் மாயமாஞ்சொரூபமெல்லாம் வெளியாய்ப்போமே
விளக்கவுரை :
1172. வெளியாக
சூதத்தைகட்டாவிட்டால் விரைந்தேறும் ஞானமெல்லாம் பொய்யாய்ப்போகும்
ஒளிவான யோகமது
பாழாய்ப்போகும் உற்பனமாங் காயசித்தி யொன்றுமாகும்
அளியான ஆதாரகுறியுமில்லை
அணுகையிலே வேதிக்கு மேமமில்லை
நெளிதான மனதாலே
யோகம்பார்ப்பார் நிர்மூட ஞானியென்று சொல்வார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1173. பாரப்பா மூலவன்னி துலங்கினாக்கால் பளிச்சென்று ஆறுதலம் வெளியாய்க் காணும்
நேரப்பா மேலாறும்
வெளியாய்ப்போகும் நேரான சாஸ்திரந்தா னாறுங்காணும்
சேரப்பா பராபரியின்
செயலுங்காணும் சேர்ந்தநிஷ்களமதுதான் வெளியாய்ப்போகும்
ஆரப்பா நிராதாரத்
தடங்கினோர்க்கு மாதியந்த நாமற்ற அந்தந்தானோ
விளக்கவுரை :
1174. தானென்ற சிங்கியொன்று
சொல்லக்கேளு சாதகமாயிது லெக்குமுன்னேபாரு
ஈனென்ற வேழாயிரத்திலொன்றே
மிஞ்சியிதமான வுடும்பாமை அழக்கினோடு
தானென்ன தாயீசல் மாட்டினுட
கொழுப்பு கலந்தைந்து ஐங்கழஞ்சி கொழுப்புதூக்கி
பானென்ற புழுகைந்து
சவ்வாதைந்து பருவமுடனொன்றாகப் பண்ணிக்கொள்ளே
விளக்கவுரை :
1175. கொள்ளயிலே பரிசுன்னந்
துரிசுசுன்னங் கொடிதான பூரமென்ற சுன்னமூன்றும்
விள்ளயிலே யொவ்வொன்று
கழஞ்சிதூக்கி ரவியொன்றாய் மத்தித்துக் கல்வத்திலப்பி
நள்ளவே ரவியில்வைத்துக்
காந்திநாட்டநலம்பெறவே தயிலமாய் வழித்துவாங்கு
துள்ளவே நில்லாமல்
நன்றாய்வாங்கு துடியான பீங்கானில் வைத்துக்கொள்ளே
விளக்கவுரை :