போகர் சப்தகாண்டம் 966 - 970 of 7000 பாடல்கள்
966. தானென்ற கருவேலும் வார்தஃதங்கி பூவாம் சார்பானயின்பூரம் கருக்காயோபட்டை
வானென்ற யிவ்வரையின்பட்டை
யெல்லாம்வளமாகச் சமபாகம்நிறுத்துக்கொண்டு
கோனென்ற வுரலிலிட்டுயிடித்து
நையக்கொட்டியே பாண்டத்தில் தண்ணீர்விட்டுப்
பானென்ற யெட்டிலொன்றாய்க்
காய்ச்சிக்கொண்டு பக்குவமாய் வடித்திறுத்து அயப்பாண்டத்திலூற்றே
விளக்கவுரை :
967. ஊற்றியபின்
படிகாரஞ்சேரவொன்று ஒளியானகெந்தகந்தான் பலமும்நாலு
சாற்றியபின் பூநீரு
பலமும்ரெண்டு மாசற்றதுரிசியது பலமும்நாலு
சாற்றியபின்பு
நீறுபலமும்ரண்டு சாரித்து யாதளையின் பாலினாலே
ஏற்றியபின் கியாழத்தில்
கூடவிட்டு எளியாலம்பால் சேருகூடவாரே
விளக்கவுரை :
[ads-post]
968. வார்க்கவே நல்லெண்ணெய்
நாலுசேரை நலமாகக்காய்ச்சியெல்லாம் குழம்பாய்ப்பண்ணி
ஏர்க்கவே கலயத்தில்
வார்த்துகட்டி இச்சையாம் படிகத்தின் மாவில்விட்டு
தோர்க்கவே யரைத்து
நாற்சாமமட்டும் நெல்லுப்போல் வில்லைபண்ணிச் சரவுலையில்வைத்து
பார்க்கவே துருத்தியிட்டு
யிருபுறமூடு படிகமதுசெம்பாகும் பண்பாய்வாங்கே
விளக்கவுரை :
969. வாங்கியே
செம்பெல்லாமெடுத்துக்கொண்டு வளமான கறடெடுத்துத் தயிலத்தாலாட்டிப்
பாங்கியே
முன்போலவைந்துதரமூதிப்பருவமாய்ச் செம்பெல்லாமெடுத்துக்கொண்டு
ஓங்கியே குளிகைக்குச்
செம்பையீய ஓடுகிறகெவுனத்தி லிருலெல்லாம்தீர்க்கும்
தாங்கியே இச்செம்பை
மதியிலீயச் சார்பாகப் பனிரெண்டுமாற்றுமாமே
விளக்கவுரை :
970. மாற்றான படிகத்தைப்போலேயப்பா
வளமான தங்கத்தைச் செம்புபண்ணு
கூற்றான
குளிகைக்குக்கொடுத்தாயானால் கொடுவேகமோடையிலே நாதம்பண்ணு
நாற்றான ததுவிளைந்து
நெல்லானாப்போல் நலமானசங்கத்தில் உயர்த்திவேதை
மூன்றான
தேவிவிடுபட்டுப்போவாள் முங்கியதோர் சங்கத்தை செந்தூரித்துண்ணே
விளக்கவுரை :