போகர் சப்தகாண்டம் 961 - 965 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 961 - 965 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

961. உண்ணென்ற பூநாகச்சத்துகேளு உத்தமனே செம்மண்ணில் பூநாகந்தான்
கண்ணென்ற ரிஷபத்தின் சாணிதண்ணில் கலந்தெடுத்துப் பிசறிநன்றாய்த் தட்டிப்போட்டு
கண்ணென்ற காய்ந்தபின்பு பாண்டத்திற்போட்டு மறவாமல் மேல்மூடி யெரித்தெடுத்து
கண்ணென்ற சாம்பிலைத்தான் காடிவிட்டுக்கரைத்து நலமான தெளிவையெல்லா மிறுத்திடாயே

விளக்கவுரை :


962. இறுத்துவிட்டு அடிவண்டலுற்றுப்பார்த்தா லிதமாகப் பளிச்சென்று மின்னல்காணும்
பறுத்துவிட்ட சூதத்தைவிட்டுத் தேய்க்கமாசற்ற செம்பெல்லாம் பிடித்துக்கொள்ளும்
கறுத்துவிட்ட காரத்தை யிட்டுருக்க கண்விட்டாடியல்லோ செம்பாய்நிற்கும்
அறுத்துவிட்ட குளிகைக்கு முந்திமுந்தி அப்பனேவுருக்கையிலே யிச்செம்புதாக்கே

விளக்கவுரை :

[ads-post]

963. தாக்காட்டால் குளிகைக்கு தீபனமேயில்லை சார்பான சத்தெல்லா மூடகொள்ளாது
தாக்காட்டால் கெவுனத்தில் சுறுக்கோடாது தளித்த மின்னலிடியுடற்குள் களித்துப்போகும்
தாக்காட்டால் சந்திரனிற்குளிச்சியாலே சங்கரிக்கவொட்டாது குளிர்ச்சிகாணும்
தாக்காட்டா லக்கினியிற் காந்திகாணும் தாக்கியல்லோ சாரணையிலாடினாரே

விளக்கவுரை :


964. ஆடினதோர் செம்புக்கு நாலிலொன்று அப்பனே தங்கமிட்டுத் தகடுதட்டி
ஓடினதோர் சூதமொடு சிலையுங்கெந்தி வுயர்ந்துநின்ற தாளகமும் வீரஞ்சேர்த்து
நாடினதோர் முலைப்பால்தான் விட்டியாட்டி நலமான தகட்டின்மேற்பூசிப்பூசிப்
பாடினதோர் மூன்றுபுடம் போட்டெடுத்து பாய்ச்சினாலாயிரத்துக் கோடும்பாரே

விளக்கவுரை :


965. ஓடுமே படிகத்தின் சொல்வேனுத்தமனே வெகுபுளுக்கு ஓடும்வேதை
பாடுமே படிகக்கல் பொடியாய்ப்பண்ணி பண்பாகமாவாக்கிச் சேரைநாலு
ஆடுமேயாவாரம் வேர்தனின்பட்டை அப்பனே மறுதோன்றி வாகைமல்லி
தேடுமே பூவரசுமருதுவன்னி சிறப்பான கிளிஞ்சியொடு நுணாவேர்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar