போகர் சப்தகாண்டம் 956 - 960 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 956 - 960 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

956. வஅதந்தானெளிதென்று யெண்ணவேண்டா மகத்தான சிவத்தினுட தெரிசனையேயொக்கும்
நாதமென்ற சிலம்பொலியில் மேவப்பண்ணும் நாதாக்களருகிருந்து வார்த்தைசொல்லலாகும்
கீதமொடு மூன்றுலோகஞ்சஞ்சரிக்கலாகும் கெடியாங்காயமது உகாந்தவரைநிற்கும்
நீதமென்ற சிங்கியைத்தான் செம்புபண்ணு நிலவரமாய்ப்பதினாறு மாற்றுமாமே

விளக்கவுரை :


957. சிங்கியென்ற செம்புக்குத் தண்ணீர்மிட்டான் திறமான பழச்சாறுபடிதான்வாங்கி
அங்கியென்ற சிங்கியைத்தான் பொடிபோற்பண்ணி அயச்சட்டிதனில்வைத்து சருக்குபோடு
மங்கியென்ற பொடிபோல வருத்துப்போடு மாசற்ற தண்ணீர்மிட்டான் கிழங்குவாங்கி
தெங்கியென்ற பொற்பொடியாய்ச் சீவிவைத்துக் கெடியாக நிழலுலர்த்தித் தயிலம்வாங்கே

விளக்கவுரை :

[ads-post]

958. வாஙகியந்த தயிலத்தாலாட்டும்ஆட்டு மறவாமல்மூன்றஉநாளாகுமட்டும்
ஏங்கியந்த வெங்காரங்கூடவிட்டு இயல்பான மூசையிட்டு லையிலூது
தாங்கியந்த மணிமணியாய்ச் செம்புமாகும் தக்கறடெல்லாந் தயிலத்தாட்டித்
தேங்கியந்த முன்போல மூன்றுதரமூது சிவசிவா சிங்கியென்ற செம்புமாச்சே

விளக்கவுரை :


959. சிங்கியென்ற செம்பாலே சுன்னங்கோடி திறமானசெந்தூரங்களங்குகோடி
தங்கியென்ற செம்பெடுத்துத் தங்கள்கூட்டிச் சார்பான தகடாக்கிச் சூதங்கெந்தி
நங்கியென்ற சாரரைத்துத்த கட்டிற்பூசிநலமாகமூன்றுபுடம் போட்டெடுத்துத்
தெங்கியென்ற நவலோகம் நூற்றிக்கொன்றீ திறமான மாற்றதுவும் வார்த்ததல்லோ

விளக்கவுரை :


960. வார்த்தல்லோ தினந்தினமும் ஊறவைத்து மண்டலந்தான்கடந்தபின்பு எடுத்துவாங்கிப்
போர்த்தல்லோ அயமெல்லாந் தாராய்ப்போகும் போக்கானமருந்தோடே சுரண்டிவாங்கி
ஏர்த்தல்லோ சுண்ணாம்பு உப்புநேரே யிடித்தல்லோ மருந்துக்குக்கவசங்கட்டி
ஆர்த்தல்லோ புடம்போட்டு எடுத்துக்கொண்டு அதட்டியே குகையிலிட்டு வுருக்கிடாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar