போகர் சப்தகாண்டம் 1006 - 1010 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1006. மதியான பூநீறு காரந்தானு மார்க்கமாமூவருப்பு நாகத்தோடு
ததியான வறுவகை ஜெயநீராலே தண்பெறவெணசாமமரைத்துப்போடு
பசயான செம்பினுட பாத்திரத்தில் பதிவாகத்தான்கொட்டி சட்டிமூடி
விதிபோலே முப்பொழுது யெரித்தாயானால் விளையுமடா லிங்கமென்ற கம்பியாச்சே

விளக்கவுரை :


1007. கம்பியாமேற் பதங்கலிங்கமாச்சு காட்டுமே தீமுறுவல் நடுவிலாச்சு
தும்பிபோல் நிறமுடைய பாண்டந்தானும் தொட்டியென்பாஷாணந்தானுமாச்சு
தம்பாலென்ற லிங்கமது வெள்ளிசெம்பில் தாக்காக பத்துக்கொன்றுபோடு
அம்பொன்னாமாற்றதுவும் மொன்பதாகும் அப்பனே லிங்கமது குருவுமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

1008. குருவான லிங்கமதை செம்புதன்னில் கொடுத்தமே சரியெடையாய் வூதிப்போடு
கருவான வெள்ளியிலே பத்துக்கொன்று கருத்தாகத்தானுருக்கி யெடுத்துப்பாரு
உறவான மாற்றதுவும் எட்டதாகும் உத்தமனே பத்திலொன்று தங்கஞ்சேர்த்து
பருவாகத் தகடடித்துப் புடத்தைப்போடு பாங்கான தங்கமது பிறக்கும்பாரே

விளக்கவுரை :


1009. பாரப்பா தங்கமென்ன சொல்லப்போமோ பழுப்பான பசுந்தங்கம் யென்னசொல்வேன்
கூறப்பா சிவயோகநிலையில் நின்றுகும்பித்து ரேசகத்தை மாறிக்கொண்டு  
சேரப்பா நடுநிலையை மையம்பற்றி சிறக்கவே சுழிமுனையைநிறுத்திக்கொண்டு
பாரப்பா தவநிலையைக்கைவிடாமல் பக்குவமாய் வாசியோகம் பாருபாரே

விளக்கவுரை :


1010. பார்க்கையிலே தேகமதுகற்பமுண்ணு பச்சையென்ற வில்வமது இதழேயாகும்
சேர்க்கையுட னிதமொன்று மிளகுவொன்று சிறப்பாகக் காலையிலே வுண்ணவேண்டும்
தீர்க்கமுடன் நாளொன்றுக்கதிகமாக திறமுடனே மிளகதனையேத்தவேண்டாம்
ஆர்க்கமுடன் மண்டலந்தானுண்டுபாரு அப்பனே தேகமதுபொன்னாம்பாரே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 1001 - 1005 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1001. ஆதிபாராபரத்தினிட கிருபைபோற்றி அன்பான வடிமுடியும் நந்திகாப்பு
ஜோதியா முச்சுடரின் அருளேகாப்பு சுட்சமாஞ் சதாசிவத்தின் பொருளேகாப்பு
பாதிமதிசடையணிந்த பரமன்காப்பு பத்தியடன் முத்திதரு முதல்வன்காப்பு
ஓதியதோர் வாணிசரஸ்வதியேகாப்பு ஓங்காரத்துள் வட்டத்தொளிகாப்பாமே

விளக்கவுரை :


1002. காப்பான யேழுலட்சம் கிரந்தந்தன்னில் கருவாக வொளித்துவைத்த சூட்சமார்க்கம்
காப்பான வைப்புடனே சீனவெப்பு காரமாங்குடோரிமுதல் கண்டாராய்ந்து
காப்பான களங்குகளும் சுன்னப்போக்கும் களிப்பான செந்தூரக்காடெல்லாந்தான்
காப்பான ஜெயநீர்கள் பூநீர்யாவும் கடையான திராவகமும் மெழுகுமாமே

விளக்கவுரை :

[ads-post]

1003. ஆமேதான் மெழுகுடனே தயிலமார்க்கம் அழகான வஞ்சனமாமையின்போக்கும்
தாமேதான தர்வனத்தின் யெழுத்தின்போக்கும் தாக்கான மூலிகையின் சாபப்போக்கும்
வேமேதான் வெகுகோடி காலகற்பம் விருப்பமுடனுண்டுபின் காட்சியெல்லாம்
நாமேதான றிவதற்குயாவுஞ்சொன்னோம் நாதாக்களடிவணங்கி நவிறிட்டேனே
விளக்கவுரை :


1004. நவின்றிட்டே னேழுலட்சம் கிரந்தப்போக்கை நயமுடனே நாட்டிலோர்க் கறியவென்று
புகன்றிட்டேனே ழாயிரக்காண்டமாக பூட்டினேன் சத்தகாண்டம் பண்பதாக
நவின்றிட்டேனிக் காண்டமிரண்டாக்காண்டம் தகுமானபோக்குகளு மனந்தஞ்சொன்னேன்
நவின்றிட்ட போகரிஷி சொன்னநூலில் கருமான நூலிதுதான் மதநூல்தானே

விளக்கவுரை :


1005. தானான பெருநூலேழாயிரந்தான் தாக்கான சீனமுடன் வைப்புமார்க்கம்
போனான குருசொன்ன நீதிமார்க்கம் குறிப்பான கைபாகஞ்செய்பாகந்தான்
வேனானலிங்கமது வைப்புமார்க்கம் எளிதாகக் கூறுகிறேன் மைந்தாகேளு
பானான படிகாரம் கெந்திதானும் பளிங்கான ரசமுடனே மதியமாமே

விளக்கவுரை :





போகர் சப்தகாண்டம் 996 - 1000 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

996. அமைத்தேனே மதற்காண்டந் தன்னிலப்பா வப்பனேயோகிகளுக்கான மார்க்கம்
நிமைப்பொழுது தவப்பொழுது மழியாவண்ணம் நீடாழியுலகுமது முடிவுமட்டும்
தமையான அத்வீதஞானந்தன்னில் தபோதனர்கள் ரிஷிகள்முதல் கூறாவண்ணம்
சுமைபோன்ற ஞானமெனும் வடிவந்தன்னை சூட்சமுடன் கொட்டிவைத்தேன் கூர்மைபாரே

விளக்கவுரை :


997. பாரேதான் யெந்தனது காண்டமேழு பான்மையுடன் கண்டவர்க்கு யெல்லாஞ்சித்தி
நேரேதான் பன்னீராயிரத்துக் கொப்பாய் நேர்மையுள்ள தைத்தியனார் கூறும்நூலில்
வேரோடுஞ் சொல்லியதோர் ஞானமார்க்கம் வேதாந்த சின்மயத்தை வெளியதாக்கி
கூரோடு முதற்காண்டந்தன்னிலேதான் கூறினேனே சங்கையறக் கூறினேனே

விளக்கவுரை :

[ads-post]

998. கூறினேன் போகரேழாயிரந்தான் குருவான நூலிதுதான் சத்தகாண்டம்
மீறியதோர் யிந்நூலுக்கெந்தநூலும் மேதினியில் செய்தவர்காருமில்லை
தேறியதோர் கும்பமுனி பன்னீராயிரந்தான் சிறப்பான நூலென்றே செய்யலாகும்
ஆறியதோர் போகரேழாயிரந்தான் வப்பனே முதற்காண்டம் முற்றதாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 991 - 995 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

991. செய்யவே புலிப்பாணிமைந்தாகேளு செயலான மார்க்கமது யின்னஞ்சொல்வேன்
துய்யநல்ல வக்கிராந்த செந்தூரத்தை துப்புரவாயுண்டவர்க்கு பலனைகேளு
வையகங்கள் நாலுயுகமிருக்கலாகும் வாகானசெந்தூர மதித்தமார்க்கம்
வெய்யபுகழ் வாசியைத்தான் மேல்நோக்காது மேனியதுசிவப்பேரி மின்னும்பாரே

விளக்கவுரை :


992. மின்னுமே தேகமதுசெந்தாழைவீசும் மிக்கானவாசியது கீழ்நோக்காகும்
பன்னவேநெடுங்காலமிருக்கலாகும் பாங்கான தூலமதுவழியாதப்பா
சொன்னதொரு காலாங்கிநாதர்வாக்கு துப்புரவாய் வையகத்தில் பொய்யாதப்பா
நன்னயமாய் ஞானமென்ற பொருள்தான் காட்டும்நாதாந்த செந்தூரவேதைதானே

விளக்கவுரை :

[ads-post]

993. காணவே புலிப்பாணிமைந்தாகேளு காசினியில் திக்கெட்டும் கண்டுவந்தேன்
தேணவே சீனபதித்தன்னிற்சென்று தோற்றமுடன் காலாங்கிநாதர்பக்கம்
வேணபடி சமாதிமுகந்தானிருந்து வெகுகால மகிமையெல்லாம் கண்டுவந்தேன்
ஆணவங்கள் தானொடுங்கி குளிகைபூண்டு வப்பனேநாற்றிசையும் சுத்தினேனே

விளக்கவுரை :


994. சுத்தினேன் மலைவளங்கள் நானுங்கண்டேன் சுந்தரனே சாத்திரங்கள் சமாதிகண்டேன்
எத்திசையும் பதினெண்பேர் நவகோடிதானும் யெழிலான நாற்பத்தெண் முனிவரோடும்
புத்தியுள்ள இதிகாச புராணம்யாவும் புகழானசித்துமுனியாயுர்வேதம்
பத்தியுடனாராய்ந்து வுளவுகண்டு பாங்கான சாஸ்திரத்தைப் பாடினேனே

விளக்கவுரை :


995. பாடினேன் போகரேழாயிரந்தான் பாங்கான காண்டமது சத்தகாண்டம்
தேடினேன் யோகமது வட்டவேதை தெளிவான ஜாலங்கள் கருவுமார்க்கம்
நீடியதோர் பிறப்புரூபாவர்ணம் கெடிதான யிந்திரமாம் ஜாலப்போக்கு  
கூடியதோர் மந்திரமாம் தந்திரப்போக்கும் குறிப்பான மாற்றமது வமைத்திட்டேனே

விளக்கவுரை :


Powered by Blogger.