போகர் சப்தகாண்டம் 1101 - 1105 of 7000 பாடல்கள்
1101. நில்லவே
சித்திராப்பர்வதந்தன்னில் நெடிதான பூரணையில் சாமநேரம்
கல்லான களர்மண்ணா
மூவர்மண்பூமி கடிதான மலைச்சாரல் தன்னில்சென்று
புல்லான மணற்றூரு
யாவுமாய்ந்துபோக்கான சவுட்டுமண் தன்னைப்போக்கி
வல்லான கிட்டலைகள்
யாவும்செய்து வளமாக மூங்கல்தனை யாப்புமாச்சே
விளக்கவுரை :
1102. ஆச்சப்பா மூங்கலா
லாப்பேயாச்சு அப்பனே நடுச்சாமம் கதிர்போலுப்பாம்
பேச்சப்பா வொன்றில்லை
பூநீர்பூக்கும் பேரான கற்பமது பூநீராகும்
மூச்சப்பா முன்சொன்ன
பூநீராலே முன்னிரைத்த செந்நீரு மளவாய்கொண்டு
காச்சப்பா கலசமது தீபம்போல
கண்கொள்ளாயுப்பதுவும் பூநீராமே
விளக்கவுரை :
[ads-post]
1103. ஆமேதான் பூநீரின்
மார்க்கங்கேளு அப்பனே சீனமதுபலந்தானொன்று
தாமேதான் வெடியுப்பு
பலமதொன்று தாக்கான இந்துப்பு பலமதொன்று
வேமேதான் வீரமது பலமதொன்று
மிக்கான சூடனது பலமதொன்று
நாமேதான் சொன்னபடி
யெல்லாங்கூட்டி நலமாகத் தானரைப்பா யமிநீர்தானே
விளக்கவுரை :
1104. தானான சரக்கதனை
தசப்பங்காக்கிச் சார்பான லிங்கமதுக் கங்கிபூட்டி
வேனாக ரவிதனிலே காயவைத்து
விருப்பமுட னோட்டில்வைத்து சீலைசெய்து
கோனான குக்குடத்தி
லிறுக்கிக்கட்டும் குருவான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
மானாகக் கொடுத்திடவே
வுருகிப்பாயும் மாசற்ற களங்கதுவு மாகும்பாரே
விளக்கவுரை :
1105. பாரேதா னோட்டில்வைத்து வூதிப்போடு
பழிப்பான மாற்றதுவுமெட்டதாகும்
சீரேதா னாலுக்கோர்
தங்கஞ்சேர்த்து சிறப்பாகப் புடம்போட மாற்றுகாணும்
கூரேதான வணிகரிடஞ்
சென்றுமாறி குறிப்பான சிவயோகந் தன்னிற்சென்று
நீரேதான் நிர்த்தமுடன்
மாயிபூசை நேர்ப்பாகச் செய்து சிவசொத்தையுண்ணே
விளக்கவுரை :