1096. நிலையென்ற யிஞ்சிதின்ற
குரங்கைப்போல விளித்தேங்கி நின்றதினால் பயனுண்டாமோ
நிலையான
பத்தியமுமில்லாவிட்டால் நேரான மோட்சவழிக் கேகலாமோ
நிலையான காயத்தை
நிறுத்தவேண்டும் நெடுங்காலம் யோகநிலையறியவேண்டும்
நிலையான பதவிமனையடையவென்று
நீனிலத்திலெப்பொதும் யோகம்பாரே
விளக்கவுரை :
1097. பார்க்கவே லிங்கமொருபலமே தூக்கு பாங்கான முலைப்பாலில் சுத்திசெய்து
ஏர்க்கவே வீரமென்ற
ஜெயநீர்தன்னால் யெழிலாக நாற்சாமம் சுறுக்குதாக்கு
தீர்க்கவே வெள்ளிபோல்
கட்டியாகும் தெளிவான லிங்கமது வுருகியாடும்
வேர்க்கவே வங்கமதை
வெட்டைசெய்து விரைவாக லிங்கமுடன் நாகஞ்சேரே
விளக்கவுரை :
[ads-post]
1098. சேரவே நாகத்தையொன்றாய்கூட்டி
செழிப்புடனே செந்தூரஞ்செய்யலாகும்
கூரவே வெள்ளியது வாரதாகும்
குணமான செம்பதுவும் மூன்றதாகும்
நேரவே மூசையிட்டு
வுருக்கிநன்றாய் நேரான கண்விட்டாடும்போது
தீரவே செந்தூரமொன்றுபோட
திறமுடனே மாற்றதுவுங் காணும்தானே
விளக்கவுரை :
1099. தானான களங்குதன்னை
யோட்டில்வைத்து தகமைபெற வூதிடவேதெளிவதாகி
வஆனான ரவிமதியமொன்றாய்ச்
சேர்ந்து விரைவான மாற்றதுவும் மிகுதியாகும்
கோனான குருவருளால்
வாதசித்திக் குணமானசின்மயமும் வெளியாய்த்தோன்றும்
பானான சிவயோகந்
தன்னில்சென்று பாருலகில் வாழுவது பான்மையோர்க்கே
விளக்கவுரை :
1100. பான்மையாம் லாகிரியை
நீக்கவேண்டும் பாங்கான மோகமதை தவிர்க்க வேண்டும்
மேன்மையாஞ் சின்மயத்தைப்
பூசித்தேதான் மேலானகருவிகரணாதியெல்லாம்
வான்மையா மடிமுடியுங்
கண்டுமேதான் வாகுடனே பராபரியை நிர்த்தஞ்செய்து
துன்மைபெற
வஷ்டாங்கயோகஞ்சென்று துறைகோடி முடியுமட்டும் துலைவாய்நில்லே
விளக்கவுரை :