போகர் சப்தகாண்டம் 1091 - 1095 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1091 - 1095 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
1091. மூடியே சட்டிகொண்டு சீலைசெய்து முயற்சியாய்த் தானெரிப்பாய் கமலம்போல
ஓடியே நாற்சாமம் எரித்தபோது வுயர்வான பற்பமதுயென்னசொல்வேன்
நாடியே பற்பமதுதன்னைவாங்கி நலமாக வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
தேடியே வுருக்குமுகந் தன்னிலீய தெளிவான மாற்றதுவுங் காணும்பாரே

விளக்கவுரை :


1092. காணவே கரியோட்டிலூதிப்போடு கருவான வெள்ளியது கனகமாகும்
தோணவே நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து சிறப்பாகத் தகடடித்துப் புடத்தைப்போடு
மாணவே தங்கமதுயிறங்கும்பாரு மகத்தான வேதையிது களுக்குவேதை
நீணவே ஜீவனத்தைசெய்துகொண்டு நெடிதான சாஸ்திரத்தை யறிந்துபாரே

விளக்கவுரை :

[ads-post]

1093. பாரேதான் கோடிபொருளிருந்துமென்ன பாருலகில் வெகுநாளாய் வாழ்ந்துமென்ன
சீரேதான்மனமகிழ்ச்சி கொண்டுமென்ன சிறப்பான மாளிகையுங் கட்டியென்ன
நேரேதான் வாசியோகஞ் செய்துமென்ன நெடிதான மலைகளிலே யிருந்துமென்ன
கூரேதான் ரிஷிசித்தராயுமென்ன குவலயத்தில் நாயமது யிருக்கப்பாரே

விளக்கவுரை :


1094. இரக்கவே யுகாந்தவரை யிருக்கவேண்டும் யெழிலான காயத்தை நிறுத்தவேண்டும்
பொருக்கவே மனமாசை வெறுக்கவேண்டும் பூதலத்தில் காயகற்ப மருந்தவேண்டும்
வருக்கவே வாலுமுலைத்தயிலத்தாலே வாகாக காயத்தை இருத்தலாகும்
தருக்கவே வெகுகோடி காலமட்டும் தரணியிலே தானிருந்து வாழலாமே

விளக்கவுரை :


1095. வாழலாம் பொய்யான வாழ்வைநம்பி வகைதெரியா பசகளெல்லாம் கூட்டம்கூடி
வாழலாமென்று சொல்லிவாதந்தேடி வையகத்தில் சுட்டிறந்தோர் கோடாகோடி
வாழலாமென்றுமல்லோ பொருளைத்தேடி வையகத்தில் மோசங்கள் மிகவும்பண்ணி
வாழலாம் புக்கோடி காலமட்டும் நீனிலத்திலெப்போதும் யோகம்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar