1086. தீர்க்கவே
தாளகத்துக்கங்கிபூட்டி திறமான மணல்மறைவிற்புடத்தைப்போடு
மார்கமாய்ப்
புடம்போடலீயமாகும் மகத்தான யீயமதுயென்னசொல்வேன்
பார்க்கவே சூதமது
சரிநேரொக்கப் பாங்காகத் தானூட்டி ஜெயநீர்தன்னால்
மூர்க்கமாய் நாற்சாம
மரைத்துமேதான் முனையான மகமேருக் குப்பிக்கேற்றே
விளக்கவுரை :
1087. ஏற்றவே சாமமது பனிரண்டாகும்
யெழிலான செந்தூரமென்ன சொல்வேன்
மாற்றவே வெள்ளிசெம்பில்
பத்துகொன்று வரிசைபெறத்தானுருக்கி குருவொன்றீய
நாற்றமுடன் செம்பதுவும்
நீங்கியேதான் நலமான வெள்ளயது மாற்றுகாணும்
தோற்றவே பத்திலோர்
தங்கஞ்சேர்த்து சுருதிபெற தகடடித்து புடத்தைப்போடே
விளக்கவுரை :
[ads-post]
1088. போடவே மாற்றதுவு
மிகுதியாகிப் பொங்கமுடன் னெட்டரையுங்காணும்பாரு
கூடவே சிவயோகந்தன்னிற்சென்று
கும்பகத்தில்மீதிருந்து பாய்ச்சலாகி
நீடவே சதாநித்தம் வாசியோகம்
நெடியான பூரணத்தி ரேசித்தேதான்
மாடவே யோகத்தை சாதித்தேறு
மகத்தான ரேசகத்தில் மருவிப்பாரே
விளக்கவுரை :
1089. மருவியதோர் வாலையது பிரம்மபீடம் மகத்தான புவனையது கருவிதாரம்
மருவிதோர் திரிப்புரைதான்
கபாலபீடம் மகத்தான வஷ்டாங்கந் தன்னிற்சென்று
கருவியதோர் ஞானத்தின்
மார்க்கங்கண்டு கருவான வெட்டவெளிதன்னிற்சென்று
உருவிதோர்
பரபிரமந்தன்னிற்புக்கி வுத்தமனே லகிரியிலே போற்றிநில்லே
விளக்கவுரை :
1090. போற்றவே மனோன்மணியாள்
நிர்த்தஞ்செய்வாள் பொங்கமுடனின்னமொரு மார்கங்கேளு
ஆற்றவே பாஷாணம் பலமைந்தாகும்
அப்பனே சுக்கான்றன் கல்லைத்தானும்
தூற்றவே திருகுகள்ளிப்
பாலாலாட்டி தூய்மைபெற கவசித்துக் காயவைத்து
மாற்றவே சட்டியிலே
மணல்தான்கொட்டி மறவாமல் மணலையுந்தான் மேல்மூடே
விளக்கவுரை :