போகர் சப்தகாண்டம் 1081 - 1085 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1081 - 1085 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1081. துலைவான செம்பொன்னைக் கோடாகோடி துறையாகத் தேடியென்ன பலந்தானென்ன
நிலையான தேகமது போகும்போது நேரான கடுகளவு செம்பொன்தானும்
கலையான பொன்னதுவும் தன்னோடொக்க கடைசியிலே யாதொன்றுங்கண்டதில்லை
மலையான சாஸ்திரத்தி னுபதேசம் மார்க்கமுட னறிவதற்கு வகைதான்கேளே

விளக்கவுரை :


1082. கேளேதான் சார்புநூலறியவேண்டும் கொடியான வஷ்டாங்கம் பார்க்கவேண்டும்
மீளேதான் தத்துவத்தின் மூலமார்க்கம் மிக்கான சடாதாரக் குருவின்மார்க்கம்
பானேதான் குண்டலியின் வாசிமார்க்கம் பாங்கான அறாதாரத்தின் மார்க்கம்
சூளேதான் ஓங்காரக் குளிகைமார்க்கம் சுடரொளியின் சின்மயத்தின் மார்க்கம்தானே

விளக்கவுரை :

[ads-post]

1083. தானான லிங்கமது சுத்திசெய்து தாக்கான வைங்கோலத் தயிலத்தாலே
வேனாக சுருக்கிடவே கட்டிப்போகும் எழிலாக வங்கமதை யிதுபோற்செய்து
பானான விரண்டையுந்தா னுருக்கிப்பாரு பாங்கான மணிபோலக் கட்டியாடும்
தேனான மணியதனை யுடைத்துக்கொண்டு தெளிவாக வெள்ளிசெம்பில் தன்னிற்றாக்கே

விளக்கவுரை :


1084. தாக்கவே கரியோட்டிலூதிப்போடு தளுக்கறவே கசடுதா னகன்றுபோகும்
நோக்கவே மாற்றதுவும் மாறதாகும் நொடிதான யேமவித்தை சொல்லப்போமோ
தேக்கவே பத்திலோர் தங்கஞ்சேர்த்து தெளிவறவே தகடடித்து புடத்தைப்போடு
நோக்கவே பரியதுவுஞ் சேர்ந்துமல்லோ நொடிதான மாற்றதுவும் எட்டதாகும்

விளக்கவுரை :


1085. எட்டான மாற்றதுவுங் காணமாட்டார் யெழிலான விஞ்சிதின்னுங் குரங்கைப்போல
வட்டாக மயங்கியல்லோ யேங்கிநிற்பார் வரிசைபெற கருவான மின்னமொன்று
திட்டமுடன் சொல்லுகிறேன் மைந்தாகேளு தெளிவான தாளகமும் பலந்தானொன்று
திட்டமாய் சுண்ணாம்பும் பூநீர்தானும் கெடியான வமுரியினா லாட்டித்தீரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar