போகர் சப்தகாண்டம் 1076 - 1080 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1076 - 1080 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1076. மாட்டவே யறுவகை ஜெயநீர்தன்னால் மதிப்புடனே நாற்சாமமரைத்துமேதான்
நீட்டவே மேருவென்ற குப்பிக்கேற்றி நெடிதாக வெண்சாமம் எரித்துப்போடு
கூட்டவெ யாறவிட்டு யெடுத்துப்பாரு கொடிதான செந்தூரம் முருக்கம்பூப்போல்
தீட்டவே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று திறமுடனே கொடுத்துருக்க மாற்றாறாமே

விளக்கவுரை :


1077. ஆமேதான் செம்பதனை ஊதிப்போடு அப்பனே மாற்றதுவு மின்னும்பாரு
தாமேதான் பத்திலொன்று தங்கஞ்சேர்த்து தாக்காகப் புடம்போட மாற்றெட்டாகும்
வேமேதான் சிவபதத்தி லிருந்துகொண்டு வெளியான ஜெகஜோதிதன்னைக்கண்டு
போமேதான் பராபரியை மனதிலெண்ணி போற்றடா குருபாதத்தைப் பணிந்துநில்லே

விளக்கவுரை :

[ads-post]

1078. நில்லவே துவாதிஷ்டானந் தன்னிற்சென்று நிலையான கும்பகத்திலிருந்துகொண்டு
புல்லவே பிராணாயந் தன்னிற்சென்று போற்றவே நிர்வாணிரூபிதன்னை
மல்லவே சதாகாலம் போற்றிசெய்து மக்கமென்னுஞ்சாகரத்தை யகற்றிப்போடு
வெல்லவே வேதாந்தந் தன்னிற்சென்று விரைவுடனே சொரூபநிலை சார்ந்துதேறே

விளக்கவுரை :


1079. சார்ந்ருமே வுப்பிட்டப் பாண்டம்போல தட்டழிந்துபோகுமே தேகந்தானும்
கூர்ந்துமே தேகமது கல்தூணாகும் குறியான காயமது கற்பஞ்சொல்வேன்
தேர்ந்துபார் செங்கடுக்காய் நிதமுமுண்ணு தெளிவான மண்டலந்தா னுண்டபோது
ஆர்ந்துமே சுவாசமது கீழேநோக்கும் மகங்கார்க்குண்டதியி னுணுக்கம்பாரே  

விளக்கவுரை :


1080. நுணுக்கமாம் சதாசிவத்தின் பெருமைபாரு நுனிநாக்கு மூக்குமுனைசிரசுதானும்
கணுக்கமாங் குண்டலியை வாசிபற்றிக் கதிரொளியைக் காணுதற்கு லக்கோயில்லை
பணுக்கமாம் நேசகபூரகத்தில் தானும்பார்க்கவே மதிலயத்தை யூணிநிற்கும்
துணுக்கமாம் காயமது யிறுகிப்போகும் துன்பசாகரத்தைவிட்டுத் துலைவாய்நில்லே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar