போகர் சப்தகாண்டம் 1071 - 1075 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 1071 - 1075 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1071. தாமேதான் பசுவுக்கு ஞானமார்க்கம் தாக்குடனே போதித்தால் அறிவுமுண்டோ
வேமேதான் கரைகடந்த ஞானிதானும் வெளியான சற்குருவின் முன்னேவந்து
போமேதான் சொன்னாலும் தெரியாதொன்றும் புகட்டினாலென்னபலன்தானுண்டாமோ
நாமேதான் சொன்னபடி யேழாயிரத்தில் நலமான நுட்பமெல்லாம் காட்டினேனே

விளக்கவுரை :


1072. காட்டினேன் நுட்பமெல்லா முலகத்தோர்க்கு நலமாக கொட்டிவிட்டேன் பிசகுமல்ல
காட்டினேன் பிள்ளைகளும் பிழைக்கவென்று கருத்தறியாமல் போனால்நானென்ன செய்வேன்
பூட்டினேன் பிழைக்கவென்று மைந்தாகேளு பிசகாமல் சொல்லிவிட்டேன் ஞானமார்க்கம்
மாட்டினேன் அரைக்கீரை அறுத்தாலும்தான் மறுகாகாலும் ததைப்பதுபோலாகும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1073. பாரேதான் அவரவர்கள் குணம்போலாகும் பாங்கான கற்பகத்தை சார்ந்தாலென்ன
சீரேதான் பலநூறுங்கற்றாலென்ன சிவயோகந்தன்னிலே சென்றாலென்ன 
நேரேதான் தத்துவங்கள் அறிந்தாலென்ன நெடிதான வாசிடைதா னிறுத்திலென்ன
கூரேதான் அஷ்டசித்துக் கொண்டாலென்ன குணமில்லை பூவுலகிலொன்றங்காணே

விளக்கவுரை :


1074. காணவே தாளகத்தின் வேதைகேளு கடிதான தாளகமோர் பலமதாகும்
மாணவே சுண்ணாம்புக் கவசஞ்செய்து மதிப்புடனே பனங்கள்ளிற் சாமம்நாலு
நீணவே தாளித்துச் சுத்திசெய்து நெடிதான தாளகத்தை யெடுத்துப்பாரு
வேணவே துருசதுஊம் நேரேயொக்க விரைவாகப் படிசாற்றால் அரைத்துப்பூசே

விளக்கவுரை :


1075. பூசியே ரவிதனிலே காயப்போடு பொங்கமுடன் சுண்ணாம்புச் சீலைசெய்து
வீசியே குக்குடமாம் போடயீயம் விரைவான வங்கமது யென்னசொல்வேன்
ஊதியே காந்தமது யீயமாச்சு உப்பனமாந் தாளகத்தின் வேதையாச்சு
மாசில்லா வங்கமது நேரேசூதம் மாட்டாகெந்தகமு மாட்டித்தீரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar