போகர் சப்தகாண்டம் 1121 - 1125 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1121. பெரியோர்களென்று சொன்னமொழி யேதுக்குப் பேரின்பசாத்திரத்தி லுரைத்ததாலே
பெரியோர்களாவதுவும் ஏதலாலென்றால் பொய்மறந்து மெய்யுரைத்த பிரதாபத்தாலே
பெரியோர்களானதென்ன யோகநிஷ்டை பேரானகற்பமுண்டு காயசித்திசெய்தார்
பெரியோர்கள் குருபதத்தை மறவாமலென்றும் பேசாமலூமையைப்போ லிருப்பார்பாரே

விளக்கவுரை :


1122. பாரப்பா நிர்மூடவாதிகட்குப் பலியாது யேமமென்ற வித்தைதானும்
நேரப்பா பொய்சொல்லும்புலையருக்கு நிச்சயமாய் காணுகிற யோகம்பொய்யாம்
சேரப்பா காமமென்ற காதுகட்குத்தானும் செயலான காயசித்தி சோபம்பொய்யாம்
தூரப்பா குருசொன்ன மொழிமாயை யிந்ததுஷ்டருக்குச் சகலநூல்களெல்லாம் பொய்யே

விளக்கவுரை :

[ads-post]

1123. பொய்யென்ற வார்த்தையது சொன்னானாகில் போக்கோடேயேழுஜென்ம புலையனாவான்
பொய்யென்று காயசித்தியென்று சொன்னால் பிறந்திடுவான் கழுதையென்ற ஜென்மமாகப்
பொய்யென்று யோகத்தைச் சொன்னானாகில் புளுவான பாழ்நரகில் வீழ்வான்பாவி
பொய்யென்ற பூசையைத்தான் தூசித்தோர்க்கும் பேராகமூவேழுவங்கிஷம்பாழாமே

விளக்கவுரை :


1124. பாழாகும் வஸ்துசுத்தி பானந்தன்னைப் பதையாமற் சொன்னோர்க்கு அல்லலுண்டாம்
கூழாகும் கஞ்சிக்கி ஏங்கிஏங்கிக் கொடிதான பெருவயறுஏளையெய்தி
மீழாகுங்குணமுவலி பித்துக்கொண்டு மிகையெய்தி நகையெய்தி வீடுதோறும்
நாளாக யிரப்புண்டு கொடுப்பார்க்கைபார்த்து நமனுக்குப்பகையாகி நரகெய்வானே

விளக்கவுரை :


1125. எய்தவே சகஸ்திரமாஞ்சத்துகேளு இதமான ஆதளையின் பால்தானல்லோ
கொய்தவே யெருக்கம்பால் சேரையொன்று கோழிமுட்டை வெண்கருவுஞ் சமனாய்க்கூட்டி
பைதவே வெண்காரம் பலந்தானைந்து பகருகின்ற கெந்தகந்தான் பலமும்நாலு
நைதவே துரிசியது பலமுமூன்று நாட்டுவாய் தாளகமும் பலமும்ரண்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1116 - 1120 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1116. ஆமென்ற வுலகத்தோர் வாதந்தேடி ஆராய்ந்து சரக்குகளைப் பார்த்துப்பார்த்து
போமென்று யிதினாலே சீவனங்கள்பண்ணிப் புல்லர்கள்தா னெட்டுபேர்பத்துபேர்கூடி
காமென்ற யோசனைதான் மிகவும்பண்ணிக் கலந்துநின்ற சாஸ்திரத்தில் மறைத்துப்போட்டார்
நாமென்ன ஜெயநீரில் பார்ப்பதொன்று நலமாகச் சாறுவிட்டு அரைப்பார்பாரே

விளக்கவுரை :


1117. அரைத்துமே புடம்போட்டுப் பனியில்வைத்து ஆகாகாஜெயநீர்தா னாச்சுதென்பார்
நிரைத்துமே புடம்போட்டுச் சரக்கைகட்டி நேராகவாச்சுதென்று லோகத்தீய்ந்து
கரைத்துமே செம்பையிட்டுக் காரீயங்குத்தி கசடகற்றியூதியே யுரைத்துப்பார்த்து
மறைத்துமே நால்மாற்று ஆச்சுதென்று மயங்குவாருலகத்தச் சண்டிதானே

விளக்கவுரை :

[ads-post]

1118. சண்டிகள்தான் மெத்தவுண்டு வுலுத்தமாண்பர் தருகுரும்பனதிலொருவன் பொன்னைச்சேர்த்து
மண்டியே கடைதனிலே வுரைத்துக்காட்டி மனதுநொந்து புண்ணாகிப் போட்டபொன்போய்
தண்டியே ஒருகாசிரண்டுகாசி சார்பாக யின்னொன்று பார்ப்போமென்று
மண்டியே நான்போட்டே நீபோடென்று மயிர்பிடித்துச் சண்டையிட்டு வழக்கம்பாரே

விளக்கவுரை :


1119. வழக்கிட்டுச் சண்டைகொண்டு பின்னொருவன்வந்து வாதியொருபரதேசிவந்தானப்பா
வழக்கிட்டு தொழில்செய்து கடையில்விற்றான் நான்பார்த்தேன் வெகுசுளுவு நீயும்பாரு
அமுக்கிட்டு ஒன்றோடெஒன்றைச்சேர்த்து அமர்த்தியவர்புடம் போடப்புகைத்துப்போயி
பழுக்கிட்டு இப்படியே சாகுமட்டும் புலம்பியிறந்துண்டவர்கள் கோடியாமே

விளக்கவுரை :


1120. இறந்திட்டார் சித்தர் சர்வாதிஞானி இயல்பான சாஸ்திரத்தை யாராய்ந்துபார்த்து
மறந்திட்டார் கருவையெல்லாம் மனதிலெண்ணி மகத்தான பெரியோர்க்குத் தொண்டுபண்ணி
திறந்திட்டார் குருசொன்ன மொழியைத்தானும் சிவயோகமார்க்கத்தின் வழியிற்சென்று
அறந்திட்டா ஆத்தாளைக் கேட்டுகேட்டு அவள்சொன்னபடி செய்வார் பெரியோர்தாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1111 - 1115 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1111. பணியவே கன்றுக்கு பால்கொடுத்த பழங்கதையாம் போல்யாகும் பரிநதுபார்த்து
துணியவே போகரிஷி சொன்னநூலில் துறைகோடி யுகங்கோடி தொந்தங்கோடி
அணியவே வொவ்வொன்று மாராய்ந்தேதான் அப்பனே செய்திடிலோ யெல்லாஞ்சித்தி
கணியவே காலாங்கி பாதம்போற்றி கருதினார் போகரிஷி கருதினாரே

விளக்கவுரை :


1112. கருத்தவுவே வுப்பதுதான் சேரொன்றாகும் கனமான புளியாரைச் சாரைவாங்கி
திருத்தமாய்த் தானரைத்துப் பில்லைதட்டி திறமாக ரவிதனிலே காயப்போடு
பருதமாம் குக்குடத்தில் புடத்தைப்போடு பாங்கான செந்தூமாகும்பாரு
வெருதமாமிப்படியே பத்துமுறைபோடு வெளியான சூதத்தை கூடச்சேரே  

விளக்கவுரை :

[ads-post]

1113. சேர்த்துமே மேனிச்சார் தன்னாலாட்டி சிறப்பாக பத்துமுறை யிப்படியேபோடு
கார்த்துமே யாறவிட்டு யெடுத்துப்பாரு கனமான செந்தூரம் சொல்லப்போமோ
தீர்த்துமே செந்தூரந்தானெடுத்து திகழான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
பார்த்தமே தானுருக்கிக் கொடுத்துப்பாரு பாங்கான மாற்றதுவுங்காணும்பாரே

விளக்கவுரை :


1114. மாற்றான வெள்ளிக்கு நேரேதங்கம் மதிப்புடனே தான்சேர்த்து வுருக்கிப்பாரு
தூற்றான திரைநீங்கி சிவந்ததங்கம் துரைகோடி சென்றாலும் பழுதுறாது
காற்றான கானகந்தன்னிற்சென்று கருமூலிவிஷமூலி யாவும்பார்த்து
சோற்றான துருத்தியென்னுங் காயந்தன்னை சுகம்பெறவே சாதித்துக் கற்பங்கொள்ளே

விளக்கவுரை :


1115. கொள்ளவே காயாதிகற்பங் கொண்டால் கோடிவரையுகங்கோடி யிருத்தலாகும்
தள்ளவே மாய்கைதனை யறுக்கவேண்டும் சமுசார தொல்லைதனை வெறுக்கவேண்டும்
மெள்ளவே சிவயோகங் காணவேண்டும் மேலான பதாம்புயத்தை நண்ணவேண்டும்
உள்ளவே வாசியைத்தான் நிறுத்தவேண்டும் முத்தமனே போகரிஷி யுரைத்ததாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1106 - 1110 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1106. உண்ணயிலே வஷ்டாங்கந் தன்னிற்சென்று உத்தமனே அரமணைத்தும்கைவிடாமல்
எண்ணயிலே எளியார்போல் மனதிலெண்ணி ஏற்றமாங் கர்வமதை யகற்றித்தள்ளி
நண்ணியிலே சிவவேடம் பூண்டுகொண்டு நாதாக்களடிவணங்கி நானிலத்தில்
திண்ணயிலே வொதுங்கிருந்து யோகம்பார்த்து தேவிமனோன்மணியை பார்த்திடாயே

விளக்கவுரை :


1107. போற்றவே மேருகிரிதன்னிற்சென்று புகழான சித்தர்வர்க்கம் யாவுங்கண்டு
ஆற்றவே யுந்தனது வுள்ளந்தன்னில் அடக்கியதோர் கருகரணாதியெல்லாம்
 சீற்றமுடனவர்பாதம் பணிந்துபோற்றிச் செழிப்புடனே தாமுரைத்து வதீகங்கேட்பீர்
கூற்றனுமே தானகற்றி யுந்தன்மீது குவினது கடாட்சம் வைத்து ரட்சிப்பாரே  

விளக்கவுரை :

[ads-post]

1108. இரட்சிக்க வின்னமொரு கருமானங்கேள் இயலான நாகமதுபலந்தானொன்று
இரட்சிக்க கெந்தகமும் பலந்தானொன்று யெழிலான மஞ்சளிட கருவாலாட்டி
இரட்சிக்க கெந்தகத்தை தயிலமாக்கி யெழிலான தயிலமதை நாகத்தூண்டு
இரட்சிக்க நாகமது கட்டிப்போகும் இயலான நாகத்தின் வேதையாமே

விளக்கவுரை :


1109. வேதையாமதிதனிலே சரியாய்க்கூட்டி வேடிக்கை சிமிட்டுவித்தை வாதங்கேளு
பாதையாங் கரியோட்டிலூதிப்போடு பாங்கான வெள்ளியது மாற்றுகாணும்
நீதியாம் வெள்ளியது மெட்டதாறும் நிலையான செம்பதுவுமொன்றுகூட்டி
மாதையாந் தானுருக்கி யெடுத்துப்பாரு மகத்தான மாற்றதுவு மேழதாமே

விளக்கவுரை :


1110. ஏழான வெள்ளிக்கு இரண்டுதங்கம் ஏற்றமாந்தகடடித்துப் புடத்தைப்போடு
சாழான தங்கமது நேரேசேர்ந்து சரியான தன்னிறப்போலாகும்பாரு
மாழான பிரமவித்தை வாதவித்தை வாய்குமோ யெல்லோர்க்கும்
பாழான துக்கசாகரத்தைவிட்டுப் பதறாமல் பதாம்புயத்தை பணிந்து நில்லே

விளக்கவுரை :


Powered by Blogger.