1116. ஆமென்ற வுலகத்தோர் வாதந்தேடி
ஆராய்ந்து சரக்குகளைப் பார்த்துப்பார்த்து
போமென்று யிதினாலே
சீவனங்கள்பண்ணிப் புல்லர்கள்தா னெட்டுபேர்பத்துபேர்கூடி
காமென்ற யோசனைதான்
மிகவும்பண்ணிக் கலந்துநின்ற சாஸ்திரத்தில் மறைத்துப்போட்டார்
நாமென்ன ஜெயநீரில்
பார்ப்பதொன்று நலமாகச் சாறுவிட்டு அரைப்பார்பாரே
விளக்கவுரை :
1117. அரைத்துமே புடம்போட்டுப் பனியில்வைத்து ஆகாகாஜெயநீர்தா னாச்சுதென்பார்
நிரைத்துமே புடம்போட்டுச்
சரக்கைகட்டி நேராகவாச்சுதென்று லோகத்தீய்ந்து
கரைத்துமே செம்பையிட்டுக்
காரீயங்குத்தி கசடகற்றியூதியே யுரைத்துப்பார்த்து
மறைத்துமே நால்மாற்று
ஆச்சுதென்று மயங்குவாருலகத்தச் சண்டிதானே
விளக்கவுரை :
[ads-post]
1118. சண்டிகள்தான் மெத்தவுண்டு
வுலுத்தமாண்பர் தருகுரும்பனதிலொருவன் பொன்னைச்சேர்த்து
மண்டியே கடைதனிலே வுரைத்துக்காட்டி
மனதுநொந்து புண்ணாகிப் போட்டபொன்போய்
தண்டியே ஒருகாசிரண்டுகாசி
சார்பாக யின்னொன்று பார்ப்போமென்று
மண்டியே நான்போட்டே
நீபோடென்று மயிர்பிடித்துச் சண்டையிட்டு வழக்கம்பாரே
விளக்கவுரை :
1119. வழக்கிட்டுச் சண்டைகொண்டு
பின்னொருவன்வந்து வாதியொருபரதேசிவந்தானப்பா
வழக்கிட்டு தொழில்செய்து
கடையில்விற்றான் நான்பார்த்தேன் வெகுசுளுவு நீயும்பாரு
அமுக்கிட்டு
ஒன்றோடெஒன்றைச்சேர்த்து அமர்த்தியவர்புடம் போடப்புகைத்துப்போயி
பழுக்கிட்டு இப்படியே
சாகுமட்டும் புலம்பியிறந்துண்டவர்கள் கோடியாமே
விளக்கவுரை :
1120. இறந்திட்டார் சித்தர்
சர்வாதிஞானி இயல்பான சாஸ்திரத்தை யாராய்ந்துபார்த்து
மறந்திட்டார் கருவையெல்லாம்
மனதிலெண்ணி மகத்தான பெரியோர்க்குத் தொண்டுபண்ணி
திறந்திட்டார் குருசொன்ன
மொழியைத்தானும் சிவயோகமார்க்கத்தின் வழியிற்சென்று
அறந்திட்டா ஆத்தாளைக்
கேட்டுகேட்டு அவள்சொன்னபடி செய்வார் பெரியோர்தாமே
விளக்கவுரை :