1111. பணியவே கன்றுக்கு
பால்கொடுத்த பழங்கதையாம் போல்யாகும் பரிநதுபார்த்து
துணியவே போகரிஷி சொன்னநூலில்
துறைகோடி யுகங்கோடி தொந்தங்கோடி
அணியவே வொவ்வொன்று
மாராய்ந்தேதான் அப்பனே செய்திடிலோ யெல்லாஞ்சித்தி
கணியவே காலாங்கி பாதம்போற்றி
கருதினார் போகரிஷி கருதினாரே
விளக்கவுரை :
1112. கருத்தவுவே வுப்பதுதான்
சேரொன்றாகும் கனமான புளியாரைச் சாரைவாங்கி
திருத்தமாய்த் தானரைத்துப்
பில்லைதட்டி திறமாக ரவிதனிலே காயப்போடு
பருதமாம் குக்குடத்தில்
புடத்தைப்போடு பாங்கான செந்தூமாகும்பாரு
வெருதமாமிப்படியே
பத்துமுறைபோடு வெளியான சூதத்தை கூடச்சேரே
விளக்கவுரை :
[ads-post]
1113. சேர்த்துமே மேனிச்சார்
தன்னாலாட்டி சிறப்பாக பத்துமுறை யிப்படியேபோடு
கார்த்துமே யாறவிட்டு
யெடுத்துப்பாரு கனமான செந்தூரம் சொல்லப்போமோ
தீர்த்துமே
செந்தூரந்தானெடுத்து திகழான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
பார்த்தமே தானுருக்கிக்
கொடுத்துப்பாரு பாங்கான மாற்றதுவுங்காணும்பாரே
விளக்கவுரை :
1114. மாற்றான வெள்ளிக்கு
நேரேதங்கம் மதிப்புடனே தான்சேர்த்து வுருக்கிப்பாரு
தூற்றான திரைநீங்கி
சிவந்ததங்கம் துரைகோடி சென்றாலும் பழுதுறாது
காற்றான கானகந்தன்னிற்சென்று
கருமூலிவிஷமூலி யாவும்பார்த்து
சோற்றான துருத்தியென்னுங்
காயந்தன்னை சுகம்பெறவே சாதித்துக் கற்பங்கொள்ளே
விளக்கவுரை :
1115. கொள்ளவே காயாதிகற்பங்
கொண்டால் கோடிவரையுகங்கோடி யிருத்தலாகும்
தள்ளவே மாய்கைதனை
யறுக்கவேண்டும் சமுசார தொல்லைதனை வெறுக்கவேண்டும்
மெள்ளவே சிவயோகங்
காணவேண்டும் மேலான பதாம்புயத்தை நண்ணவேண்டும்
உள்ளவே வாசியைத்தான்
நிறுத்தவேண்டும் முத்தமனே போகரிஷி யுரைத்ததாமே
விளக்கவுரை :