போகர் சப்தகாண்டம் 1236 - 1240 of 7000 பாடல்கள்
1236. கட்டியதோர் லிங்கமது
பலமேயாகும் கடிதான ரவிமதியும் பலமேயாகும்
திட்டமுடன் தான்ராவி
மைந்தாகேளு திறமான குன்றிமணி யரைத்துமேதான்
பட்டயம்போல் தான்பிசறி
லிங்கமிதில் பக்குவமாயங்கியது பதியமாட்டி
சட்டமதாய் சீலையது வலுவாய்ச்
செய்து சார்புடனே மிப்புடத்தில் போட்டிடாயே
விளக்கவுரை :
1237. போடவே லிங்கமது வுருகியாடும்
போக்கான சரக்கதுவுங் கட்டிப்போகும்
நீட்டமுடன் லிங்ககுரு
தனையெடுத்து நேர்ப்பாக வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
வாட்டமுடன் கொடுத்துருக்க
மாற்றாகும் மைந்தனே வுப்புக்கு காவிக்கேகா
தேட்டமுடன் கரியோட்டி
லூதிப்போடு தெளிவான மாற்றதுவும் பாருபாரே
விளக்கவுரை :
[ads-post]
1238. பாரேதான் செம்பதுவும்
நீங்கியல்லோ பாங்கான வெள்ளயது மாற்றுகாணும்
சீரேதானவ்விடைக்குத்
தங்கஞ்சேர்த்துச் சிறப்பாகத் தகடடித்துப் புடத்தைப்போடு
நேரேதான்
தங்கமதுவதிகங்காணும் நிலையான வித்தையடா வாதவித்தை
கூரேதான் போகரிஷச
சொன்னமார்க்கம் கவலயத்தில் பொய்யாது மெய்யாங்காணே
விளக்கவுரை :
1239. காணவே துடுப்பொன்று
தானிருக்க கருவான கையதுதான் வேகுமோசொல்
நாணவே தவமொன்றுதானிருக்க
நாம்செய்ய வினையதுதா னென்னசெய்யும்
பூணவே மருந்தினது
போக்கிருக்க பொலிவான பாகமது வென்னசெய்யும்
நீணவே போகரிஷி
புகலுமார்க்கம் நிச்சயமாய் தெரிந்துகொள்ளும் நெளிவைத்தானே
விளக்கவுரை :
1240. தானான ரசமதுவும்
சேர்தானொன்று தாக்கான கெந்தியது சேர்தான்ரண்டு
வேனான வடிகனத்த சட்டிலேதான்
வெகுளாமல் வுப்பதனை படிதான்கொண்டு
பானாக கீழ்மேலுப்பைகொட்டிப்
பாங்காக கஙந்தகத்தை கீழ்மேலிட்டு
கோனாக ரசமதுவை நடுவேயூத்தி
குப்புரவாய் தீயெரிப்பாய் சாமம்பத்தே
விளக்கவுரை :