1231. அஞ்சான சரக்கெல்லா
மொன்றாய்கூட்டி அப்பனே குழியம்மி தன்னாலாட்டி
திஞ்சான ஜெயநீர்தன்னால்
மைந்தா தெளிவாக வறுசாம மரைத்துமேதான்
கஞ்சான வஜ்ஜிரமாம்
குகையில்வைத்து கலங்காமலுலையில் வைத்தூதிப்பாரு
மிஞ்சாமல்
மூசதனையடைத்துப்பாரு மிக்கான களங்குமது வாகுந்தானே
விளக்கவுரை :
1232. தானான களங்கமதை
யென்னசொல்வேன் தாக்கான வெள்ளிசெம்பில் தன்னிற்றாக்கு
கோனான குருமுறையாய்
வூதிப்போடு குணமான மாற்றதுவும் சொல்லப்போமோ
வேனான நாலிலோர்
தங்கம்சேர்த்து விருப்பமுடன் தகடடித்துப் புடத்தைப்போடு
மானான மாற்றதுவும்
மிகுதியாகி மாசற்ற தங்கமது வாகும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1233. பாரேதான் பராபரியைப் பூசித்தேதான் பாங்கான சின்மயத்தி லிருந்துகொண்டு
நேரேதான் மும்மலமும்
விட்டகற்றி நெறியான வெட்டவெளி தன்னிற்சென்று
சீரேதாத்
ஜோதிமயந்தன்னைக்கண்டு சுடரொளியையெப்போது மனதிலெண்ணி
கூரேதான் விட்டகுறை
நேருமட்டும் குறிப்பாக சமாதியிலே யிருந்துபோற்றே
விளக்கவுரை :
1234. போற்றவே தாயறியாச் சூலுமிந்த
பூதலத்திலில்லை என்றவாக்கியம்போல
ஏற்றவே நானறியா வாதந்தானும்
யெழிலாகத் தானுமுண்டோ தரணிமீது
ஆற்றவே லிங்கமது பலமதாகும்
அப்பனே பாவையர்பாலூறவைத்து
தூற்றவே சுறுக்குடனே
நாலுசாமம் துடிப்பான லிங்கமது சுத்தியாச்சே
விளக்கவுரை :
1235. ஆச்சப்பா தேனதுவும் நாலுசாமம்
அப்பனே சுருக்கதுவும் தாக்கவேண்டும்
மூச்சப்பா தைவேளை நாலுசாமம்
முசுக்கையுடன் கருப்பன்சார் நாலுசாமம்
பேச்சப்பா பழச்சாறு
நாலுசாமம் பேரான சங்கன்சார் நாலுசாமம்
பேச்சப்பா மேனிச்சார்
நாலுசாமம் கலங்காமல் சுருக்கிவே கட்டிப்போமே
விளக்கவுரை :