1226. பாளேதான் பாஷாணம்
பலமைந்தாகும் பாங்கான பூநீறு பலமைந்தாகும்
சூளேதான்
பூநீறுதன்னைத்தானும் சோகமாங் கேசரியிந்நீராலாட்டி
கோளேதான் ஏறாமற் பாஷாணத்துக்
குறுதிபெறக் கவசத்துக்கங்கிபூட்டி
சாளேதான்
போலாந்திரமாகக்கட்டி தயவுடனே யடுப்பில்வைத் தெரித்திடாயே
விளக்கவுரை :
1227. எரித்தபின் பாஷாணங்கவசநீக்கி
எழிலாக தானெடுத்து எருக்கன்பாலால்
பரித்துமே நாற்சாமம்
சுருக்குதாக்க பளிங்கான பாஷாணங் கட்டிப்போகும்
தெரிந்துமே சூதமது
நேரேதாக்கு தெளிவாக வறுவகையின் ஜெயநீராலே
முறித்துமே எண்சாம
மரைக்கும்போது முனையான மெழுகதுபோலாகும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1228. பாரேதான் மெழுகெடுத்து
வெள்ளீயத்தில் பாச்சப்பா பத்துக்கு ஒன்றுபோடு
நேரேதான் வெள்வங்க
நீரைவாங்கி நிலைத்துதடா வாதவித்தை நிசமதாச்சு
கூரேதான் சிவயோகந்
தன்னிற்சென்று குறிப்புடனே மனோலயத்தை மேவிப்பாரு
வீரேதான் போகாமல் காயந்தன்னை
விருப்பமுடன் யோகநிலை சாதிப்பீரே
விளக்கவுரை :
1229. சாதிப்பீர் தவளைபூ
மணத்தைதானும் சற்றுமேயதின்வாச மறியாற்போலும்
சொதிக்க சித்தர்சொல்லும்
நூல்கள்யாவும் சுருதிபெற வேதாந்தநூல்கள்யாவும்
வாதிக்க யெவராலுமுடியாதப்பா
வரியெந்நூலில் நுட்பம்வைத்து
நீதியாய் மனோன்மணித்தாய்
பாதம்போற்றி நிஷ்களமாய்ப் பராபரியை பரவிநில்லே
விளக்கவுரை :
1230. நில்லடா நாகமது பலந்தானைந்து
நெடிதான தாளகமும் பலந்தானைந்து
கொள்ளடா கெந்தகமும்
பலந்தானைந்து கொடிதான சிங்கியது பலந்தானைந்து
மெல்லடா சூதமது பலந்தானைந்து
மேலான துருசதுவும் பலந்தானைந்து
கல்லடா வாக்ரந்தம்
பலமைந்தாகும் கருவாக வெள்ளியது பலமஞ்சாமே
விளக்கவுரை :