1221. தானான பொடியதனில்
சாரந்தன்னைத் தாக்குடனே நாலுவிதயாகஞ்செய்து
பானான வயப்பொடியி
லோர்பாகந்தான் பதறாமல் தான்போட்டு வரைத்துமேதான்
வேனாக யிந்தமுறை நாலுபாகம்
விடாமலே வமுரியினால் கழுவிப்போடு
கோனாக துருசிதனை நாலுபாகம்
குறிப்புடனே முன்போல செய்துகொள்ளே
விளக்கவுரை :
1222. கொள்ளவே வமுரியினால்
கழுவிப்போடு கொற்றவனே நாலுமுறை யிந்தபாகம்
விள்ளவே வமுரியினால்
கழுவிப்போடு விகற்பமுடன் வந்திடைக்கு சூதஞ்சேர்த்து
மெள்ளவே குழியம்மி
தன்னாலாட்டி விருப்பமுடன் சட்டியிட்டு சீலைசெய்து
உள்ளவே யடுப்பேற்றி நாலுசாம
முத்தமனே தானெறிப்பாய்க் கமலந்தானே
விளக்கவுரை :
[ads-post]
1223. கமலமாஞ் செந்தூரமாகும்பாரு
கதிப்புடனே செந்தூரம் நாலிலொன்று
விமலமாய்க் காரமது
நாலேசேர்த்து விருப்பமுடன் குகையிலிட்டு வுறுக்கிப்பாரு
தமலமாங் களங்குடனே
செம்புமாகும் தளிரான களங்குமுட நேரேசேர்த்து
விமலமாம் வூதிடவே
செம்புமாகும் விசையான களிப்பதுவுங் கட்டிப்போச்சே
விளக்கவுரை :
1224. கட்டியதோர் செம்பொன்று
தங்கமொன்று கருவான வெள்ளியது விராகனொன்று
திட்டமுடன் தானுறுக்கி
வூதிப்போடு தெளிவான மாற்றதுவு மெட்டதாகும்
நட்டமென்ன வணிகரிடம்
சென்றுமேதான் நலமாக நீர்கொடுக்கி லாபங்காணும்
கட்டமுட னிருந்துகொண்டு
கவனியாவாய் ஒருவருடன்கூடாதே கருவைப்பாரே
விளக்கவுரை :
1225. கருவான பிராணாயந் தன்னில்நின்று கதிப்புடனே சின்மயத்தைக் கடந்துமேதான்
உருவான குருபீடந்
தன்னைப்போற்றி வுத்தமனே உதாசினத்தை தள்ளிப்போடு
மருவான கும்பகத்தில்
நின்றுகொண்டு மகத்தான ஜெகஜோதி தன்னைப்பாரு
திருவான மகெஸ்பரியாள்
நிர்வாணிதானும் தேவியரும் கடாட்சித்து அர்ச்சிப்பாளே
விளக்கவுரை :