போகர் சப்தகாண்டம் 1236 - 1240 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1236. கட்டியதோர் லிங்கமது பலமேயாகும் கடிதான ரவிமதியும் பலமேயாகும்
திட்டமுடன் தான்ராவி மைந்தாகேளு திறமான குன்றிமணி யரைத்துமேதான்
பட்டயம்போல் தான்பிசறி லிங்கமிதில் பக்குவமாயங்கியது பதியமாட்டி
சட்டமதாய் சீலையது வலுவாய்ச் செய்து சார்புடனே மிப்புடத்தில் போட்டிடாயே

விளக்கவுரை :


1237. போடவே லிங்கமது வுருகியாடும் போக்கான சரக்கதுவுங் கட்டிப்போகும்
நீட்டமுடன் லிங்ககுரு தனையெடுத்து நேர்ப்பாக வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
வாட்டமுடன் கொடுத்துருக்க மாற்றாகும் மைந்தனே வுப்புக்கு காவிக்கேகா
தேட்டமுடன் கரியோட்டி லூதிப்போடு தெளிவான மாற்றதுவும் பாருபாரே

விளக்கவுரை :

[ads-post]

1238. பாரேதான் செம்பதுவும் நீங்கியல்லோ பாங்கான வெள்ளயது மாற்றுகாணும்
சீரேதானவ்விடைக்குத் தங்கஞ்சேர்த்துச் சிறப்பாகத் தகடடித்துப் புடத்தைப்போடு
நேரேதான் தங்கமதுவதிகங்காணும் நிலையான வித்தையடா வாதவித்தை
கூரேதான் போகரிஷச சொன்னமார்க்கம் கவலயத்தில் பொய்யாது மெய்யாங்காணே

விளக்கவுரை :


1239. காணவே துடுப்பொன்று தானிருக்க கருவான கையதுதான் வேகுமோசொல்
நாணவே தவமொன்றுதானிருக்க நாம்செய்ய வினையதுதா னென்னசெய்யும்
பூணவே மருந்தினது போக்கிருக்க பொலிவான பாகமது வென்னசெய்யும்
நீணவே போகரிஷி புகலுமார்க்கம் நிச்சயமாய் தெரிந்துகொள்ளும் நெளிவைத்தானே

விளக்கவுரை :


1240. தானான ரசமதுவும் சேர்தானொன்று தாக்கான கெந்தியது சேர்தான்ரண்டு
வேனான வடிகனத்த சட்டிலேதான் வெகுளாமல் வுப்பதனை படிதான்கொண்டு
பானாக கீழ்மேலுப்பைகொட்டிப் பாங்காக கஙந்தகத்தை கீழ்மேலிட்டு 
கோனாக ரசமதுவை நடுவேயூத்தி குப்புரவாய் தீயெரிப்பாய் சாமம்பத்தே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1231 - 1235 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1231. அஞ்சான சரக்கெல்லா மொன்றாய்கூட்டி அப்பனே குழியம்மி தன்னாலாட்டி
திஞ்சான ஜெயநீர்தன்னால் மைந்தா தெளிவாக வறுசாம மரைத்துமேதான்
கஞ்சான வஜ்ஜிரமாம் குகையில்வைத்து கலங்காமலுலையில் வைத்தூதிப்பாரு
மிஞ்சாமல் மூசதனையடைத்துப்பாரு மிக்கான களங்குமது வாகுந்தானே 

விளக்கவுரை :


1232. தானான களங்கமதை யென்னசொல்வேன் தாக்கான வெள்ளிசெம்பில் தன்னிற்றாக்கு
கோனான குருமுறையாய் வூதிப்போடு குணமான மாற்றதுவும் சொல்லப்போமோ
வேனான நாலிலோர் தங்கம்சேர்த்து விருப்பமுடன் தகடடித்துப் புடத்தைப்போடு
மானான மாற்றதுவும் மிகுதியாகி மாசற்ற தங்கமது வாகும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1233. பாரேதான் பராபரியைப் பூசித்தேதான் பாங்கான சின்மயத்தி லிருந்துகொண்டு
நேரேதான் மும்மலமும் விட்டகற்றி நெறியான வெட்டவெளி தன்னிற்சென்று
சீரேதாத் ஜோதிமயந்தன்னைக்கண்டு சுடரொளியையெப்போது மனதிலெண்ணி
கூரேதான் விட்டகுறை நேருமட்டும் குறிப்பாக சமாதியிலே யிருந்துபோற்றே

விளக்கவுரை :


1234. போற்றவே தாயறியாச் சூலுமிந்த பூதலத்திலில்லை என்றவாக்கியம்போல
ஏற்றவே நானறியா வாதந்தானும் யெழிலாகத் தானுமுண்டோ தரணிமீது
ஆற்றவே லிங்கமது பலமதாகும் அப்பனே பாவையர்பாலூறவைத்து
தூற்றவே சுறுக்குடனே நாலுசாமம் துடிப்பான லிங்கமது சுத்தியாச்சே

விளக்கவுரை :


1235. ஆச்சப்பா தேனதுவும் நாலுசாமம் அப்பனே சுருக்கதுவும் தாக்கவேண்டும்
மூச்சப்பா தைவேளை நாலுசாமம் முசுக்கையுடன் கருப்பன்சார் நாலுசாமம்
பேச்சப்பா பழச்சாறு நாலுசாமம் பேரான சங்கன்சார் நாலுசாமம்  
பேச்சப்பா மேனிச்சார் நாலுசாமம் கலங்காமல் சுருக்கிவே கட்டிப்போமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1226 - 1230 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1226. பாளேதான் பாஷாணம் பலமைந்தாகும் பாங்கான பூநீறு பலமைந்தாகும்
சூளேதான் பூநீறுதன்னைத்தானும் சோகமாங் கேசரியிந்நீராலாட்டி
கோளேதான் ஏறாமற் பாஷாணத்துக் குறுதிபெறக் கவசத்துக்கங்கிபூட்டி
சாளேதான் போலாந்திரமாகக்கட்டி தயவுடனே யடுப்பில்வைத் தெரித்திடாயே

விளக்கவுரை :


1227. எரித்தபின் பாஷாணங்கவசநீக்கி எழிலாக தானெடுத்து எருக்கன்பாலால்
பரித்துமே நாற்சாமம் சுருக்குதாக்க பளிங்கான பாஷாணங் கட்டிப்போகும்
தெரிந்துமே சூதமது நேரேதாக்கு தெளிவாக வறுவகையின் ஜெயநீராலே
முறித்துமே எண்சாம மரைக்கும்போது முனையான மெழுகதுபோலாகும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

1228. பாரேதான் மெழுகெடுத்து வெள்ளீயத்தில் பாச்சப்பா பத்துக்கு ஒன்றுபோடு
நேரேதான் வெள்வங்க நீரைவாங்கி நிலைத்துதடா வாதவித்தை நிசமதாச்சு
கூரேதான் சிவயோகந் தன்னிற்சென்று குறிப்புடனே மனோலயத்தை மேவிப்பாரு
வீரேதான் போகாமல் காயந்தன்னை விருப்பமுடன் யோகநிலை சாதிப்பீரே   

விளக்கவுரை :


1229. சாதிப்பீர் தவளைபூ மணத்தைதானும் சற்றுமேயதின்வாச மறியாற்போலும்
சொதிக்க சித்தர்சொல்லும் நூல்கள்யாவும் சுருதிபெற வேதாந்தநூல்கள்யாவும்
வாதிக்க யெவராலுமுடியாதப்பா வரியெந்நூலில் நுட்பம்வைத்து
நீதியாய் மனோன்மணித்தாய் பாதம்போற்றி நிஷ்களமாய்ப் பராபரியை பரவிநில்லே

விளக்கவுரை :


1230. நில்லடா நாகமது பலந்தானைந்து நெடிதான தாளகமும் பலந்தானைந்து
கொள்ளடா கெந்தகமும் பலந்தானைந்து கொடிதான சிங்கியது பலந்தானைந்து
மெல்லடா சூதமது பலந்தானைந்து மேலான துருசதுவும் பலந்தானைந்து
கல்லடா வாக்ரந்தம் பலமைந்தாகும் கருவாக வெள்ளியது பலமஞ்சாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 1221 - 1225 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1221. தானான பொடியதனில் சாரந்தன்னைத் தாக்குடனே நாலுவிதயாகஞ்செய்து
பானான வயப்பொடியி லோர்பாகந்தான் பதறாமல் தான்போட்டு வரைத்துமேதான்
வேனாக யிந்தமுறை நாலுபாகம் விடாமலே வமுரியினால் கழுவிப்போடு
கோனாக துருசிதனை நாலுபாகம் குறிப்புடனே முன்போல செய்துகொள்ளே

விளக்கவுரை :


1222. கொள்ளவே வமுரியினால் கழுவிப்போடு கொற்றவனே நாலுமுறை யிந்தபாகம்
விள்ளவே வமுரியினால் கழுவிப்போடு விகற்பமுடன் வந்திடைக்கு சூதஞ்சேர்த்து
மெள்ளவே குழியம்மி தன்னாலாட்டி விருப்பமுடன் சட்டியிட்டு சீலைசெய்து
உள்ளவே யடுப்பேற்றி நாலுசாம முத்தமனே தானெறிப்பாய்க் கமலந்தானே   

விளக்கவுரை :

[ads-post]

1223. கமலமாஞ் செந்தூரமாகும்பாரு கதிப்புடனே செந்தூரம் நாலிலொன்று
விமலமாய்க் காரமது நாலேசேர்த்து விருப்பமுடன் குகையிலிட்டு வுறுக்கிப்பாரு
தமலமாங் களங்குடனே செம்புமாகும் தளிரான களங்குமுட நேரேசேர்த்து
விமலமாம் வூதிடவே செம்புமாகும் விசையான களிப்பதுவுங் கட்டிப்போச்சே

விளக்கவுரை :


1224. கட்டியதோர் செம்பொன்று தங்கமொன்று கருவான வெள்ளியது விராகனொன்று
திட்டமுடன் தானுறுக்கி வூதிப்போடு தெளிவான மாற்றதுவு மெட்டதாகும்
நட்டமென்ன வணிகரிடம் சென்றுமேதான் நலமாக நீர்கொடுக்கி லாபங்காணும்
கட்டமுட னிருந்துகொண்டு கவனியாவாய் ஒருவருடன்கூடாதே கருவைப்பாரே

விளக்கவுரை :


1225. கருவான பிராணாயந் தன்னில்நின்று கதிப்புடனே சின்மயத்தைக் கடந்துமேதான்
உருவான குருபீடந் தன்னைப்போற்றி வுத்தமனே உதாசினத்தை தள்ளிப்போடு
மருவான கும்பகத்தில் நின்றுகொண்டு மகத்தான ஜெகஜோதி தன்னைப்பாரு
திருவான மகெஸ்பரியாள் நிர்வாணிதானும் தேவியரும் கடாட்சித்து அர்ச்சிப்பாளே

விளக்கவுரை :


Powered by Blogger.