போகர் சப்தகாண்டம் 3016 - 3020 of 7000 பாடல்கள்
3016. பூத்ததொரு பூவெடுத்து
சொல்லக்கேளும் புகழான பூவுடனே பச்சைப்பூரம்
நேர்த்தியுடன் வீரமது காலதாக
நேர்மையுடன் சீனமது வரையதாகும்
கீர்த்தியுடன் வெடியுப்பு
சமனதாக கிருபையுடன் பூரமது தானுங்கூட்டி
மாத்தியே சரக்கெல்லாம்
ஒன்றாய்ச்சேர்த்து மன்னவனே கல்வமதில் மாட்டிடாயே
விளக்கவுரை :
3017. மாட்டவே பிண்டமென்ற செயநீர்தன்னால் மயங்காமல் நாற்சாமம் அரைத்துத்தீரு
வாட்டமுடன் பில்லைதட்டி
காயவைத்து வளமாக வகல்தனிலே மூடிமைந்தா
நீட்டமுடன் சீலையது
வலுவாய்ச்செய்து நேர்மையுடன் ரவிதனிலே காயவைத்து
நாட்டமுடன் தான்போடு கோழியாக
நாயகனே பில்லையது பூர்க்குந்தானே
விளக்கவுரை :
[ads-post]
3018. தானான பில்லையது
பூர்க்காவிட்டால் தகைமையுடன் புடமதுவும் பின்னும்போடு
கானான பில்லையது கறப்பேராது
கடுஞ்சுருக்கு ஒருவேளை சிவக்கும்பாரு
மானான பில்லையது
மறுபடியுமப்பா மயங்காமல் செயநீரில் அரைத்துக்கொண்டு
கோனான குருவருளால்
பில்லைதட்டி கொப்பெனவே ரவிதனிலே காயப்போடே
விளக்கவுரை :
3019. போடவே பில்லையது
சத்தமிட்டால் பொங்கமுடன் ஓட்டிலிட்டு சீலைசெய்து
நீடவே ரவிமுகத்தில்
காயவைத்து நேர்மையுடன் சீலையது வலுவாய்ச்செய்து
கூடவே கோழியென்ற
புடந்தான்போடு கொப்பெனவே பில்லையது பூர்க்கும்பாரு
தேடவே பூநீராம் வன்னமாகும்
தெளிவான சரக்கெல்லாம் தட்டிப்போடே
விளக்கவுரை :
3020. போமென்று விடுகாதே
பின்னுங்கேளு போக்கான சரக்கெல்லாம் கட்டுதற்கு
வேமென்ற சத்துரு
மித்துருவுஞ் சேர்த்து வேகமுடன் வசகமது செய்துகொண்டு
நாமென்ற வாக்கு
பொய்யாகாமற்றான் நலமாக சட்டிதனில் மணல்தான்கொட்டி
நாமென்ற மேல்சட்டி
கொண்டுமூடி சட்டமுடன் தானெரிப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :