போகர் சப்தகாண்டம் 3036 - 3040 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3036. பேரான சுக்காங்கல் பிரம்மக்கல்லாம் பெருமையுள்ள மூதண்டக்கல்லுமாகும்
சீரான படிகக்கல் லென்றும்பேரு சிறப்பான குழியானை யென்றும்பேரு
தாரான குடுகுக்கல் என்னும்பேரு தாக்கான கண்ணகக்கல் என்றும்பேரு
பாரான பச்சையென்ற கன்னக்கல்லு பாங்கான உதகமென்ற கல்லுமாச்சே

விளக்கவுரை :


3037. கல்லான கல்லதனைக் காணவேண்டும் காசினியில் ஆருந்தான் காணமாட்டார்
புல்லான பூநீரை யறியமாட்டார் புகழான சோனக்கல் கண்ணமப்பா  
மல்லான மண்கட்டி யென்பார்பாரு வையகத்தில் தாமறியார் மகிமைதன்னை
செல்லான புத்துக்குள் இருக்குங்கல்லாம் ஜெகஜோதி மகிமைதனை காணார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3038. காணாரே கருவாளி காண்பானானால் காசினியில் விண்டிடுவான் கருத்துளோர்க்கு
தோணவே பூவுலகில் தொட்டாலுந்தான் தொல்லுலகில் மாண்டிடுவார் மாந்தர்தாமும்
நாணவே சாத்திரத்தை மிகவாராய்ந்து நாதாக்கள் சொல்லுதையும் மிகவுங்கேட்டு
நீணவே கற்பாந்திர மிருப்பதற்கு நீணிலத்தில் கைமறைப்பு யாவுங்கேளே

விளக்கவுரை :


3039. கேட்கையிலே சாத்திரமாம் யுகாந்தகால மிருப்பதற்கு வாசிநோக்கு
நீட்கமுடன் வாசியிலே இருந்துகொண்டு நீடாழி யுலகத்தை வெறுக்கப்பண்ணி
சூட்சமுடன் சின்மயத்தை யறிந்துபோற்றி சுருதியுள்ள கருவிகருணாதியெல்லாம்
தாட்கமல பீடமதை பணிந்துபோற்றி சதாகாலம் சமாதியிலே இருக்கநன்றே

விளக்கவுரை :


3040. நன்றான சரக்குதனைக் கொல்லவென்று நாட்டமுடன் சத்துரு மித்துருவுங்கண்டு
குன்றான மலைகளிலே பாஷாணமுண்டு கொப்பெனவே கொண்டுவந்து பூநீர்ச்சுண்ணம்
பன்றான வுமிழ்நீரால் மத்தித்தேதான் பாலகனே சுண்ணமென்ற பாஷாணத்தில் 
தன்றான கட்டிக்கு வங்கிபூட்டி தகைமையுடன் கோழியென்ற புடத்தைப்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3031 - 3035 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3031. மறைவான பொருளெல்லாம கண்டாராசய்ந்து மார்க்கமுடன் வாதமதைச் செய்யவேண்டும்
குறைவான பொருளறிந்து சேர்க்காவிட்டால் குற்றம்வரும் வாதத்திற்குறுதியில்லை
நிறைவான பொருளையல்லோ விட்டார்மாந்தர் நீனிலத்தில் வெகுகோடி கெட்டார்வீணில்
பறைவான சாத்திரத்தை முன்பின்னாக பாடுபட்டு பாராமல் மடிந்தார்தாமே

விளக்கவுரை :


3032. மடிந்ததினால் மானிலத்தில் கற்பமுண்டு மறைவாக மண்மேலே இருந்தார்தாமும்
முடிந்ததொரு காயாதிகற்பந்தன்னை மூதுலகில் பாடுபட்டு கிடையாமற்றான்
படிந்ததொரு கூடுவிட்டு கூடுபாய பாழான தேகமதை மெய்யெனறெண்ணி
வெடிந்தமட்டு மாயாதிசாகரத்தை விட்டொழிக்க வகைதேடி மாண்பர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

3033. மாண்பான பயிர்களெல்லாமொன்றாய்கூடி மயக்கமுடன் சாத்திரத்தில் பிரிவுதோன்றா
காண்பான வவரவர்கள் செய்தகாப்பு கடையேடு முடியேடு நடுவேடுந்தான்
வீண்பான முப்புவகை மெய்யென்றெண்ணி விண்ணுலகில் சாத்திரத்தின் வழிபோகாமல்
சாண்பாம்பை யானாலுந்தடிகொண்டடிக்க தாரணியில் மறந்துவிட்ட காதையாமே

விளக்கவுரை :


3034. காதையாம் இப்படியே தெளிவுகாணார் காசினியில் வூசிகொள்ள திராணியற்று
பாதையாம் துலாங்கொண்ட கணக்கைப்போல பாரினிலே குருமுடிக்க சூட்சங்காணார்
மேதையாம் பஞ்சனையிற் சுகம்கண்டார்போல் மேதினியில் சாத்திரத்தைப் பார்த்துமென்ன
வேதையாம் பொருளறிந்து போனவர்க்கு விருப்பமுடன் வாதமது லயிக்கும்பாரே

விளக்கவுரை :


3035. பாரேதான் அண்டபிண்ட மறியவேண்டும் பாரினிலே அண்டமதை யாருங்காணார்
நேரேதான் முப்பூவு பார்க்கும்போது நெடிதான அண்டமென்ற கல்தானப்பா
கூரான பரதிவினால் உற்பத்தியாச்சு கொடிதான விஷக்கல்லு அண்டக்கல்லாம்
சேரேதான் சிற்றண்டம் பேரண்டமாகும் சிறப்பான நடுவண்டமென்னும்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3026 - 3030 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3026. இருந்தாரே கோடிரிஷிசித்தர் தாமும் எழிலான முப்பூவை முடித்துக்கொண்டு
திருத்தமுடன் சமாதியினிலிருந்துகொண்டு சீர்பெறவே யனேகவித சித்செய்தார்
பொறுந்தவே பூமியிடப் பாகங்கண்டு புகழான முப்பூவை கண்டறிந்து  
வருந்தியே முடித்தவர்கள் கோடாகோடி வளமுடனே பதங்கெட்டார் கோடியாமே

விளக்கவுரை :


3027. கோடியாஞ் சித்தர்களி லொருவருண்டு கவலயத்தில் குருமுடிப்போன் ஒருவருண்டு
தேடியே பார்த்தாலும் கிடைப்பதில்லை தேசத்தில் விட்டகுறைநேருமானால்
கூடியே அவர்தனக்கு கிட்டும்பாரு கிட்டாவிட்டால் விட்டகுறை யில்லையென்று
நாடியே கர்மானுபவத்தினாலே நாட்டமுடன் அறிந்துகொள்ள நீதியுண்டே  

விளக்கவுரை :

[ads-post]

3028. உண்டான சாத்திரத்தில் அனேகஞ்சொன்னார் உத்தமர்கள் ரிஷிகோடி முனிவர்தாமும்
அண்டமுடன் பிண்டங்களை அறியாமற்றான் அனேகமதாய் சுட்டலைந்து கெட்டார்கோடி
கண்டபடி சாத்திரங்கள் தாறுமாறாய் காசினியில் தம்மனம்போல் பாடிவிட்டார்
விண்டவர்கள் கண்டவர்கள் யாருமில்லை வஇருப்பமுடன் பூநீரை கெடுத்தார்தாமே

விளக்கவுரை :


3029. தாமான பிண்டமது நடுப்பிண்டத்தை தாக்கான மடிப்பிண்டம் தலைப்பிண்டம்தான்
கோமான மாதர்களுங் கொண்டுவந்து கொப்பெனவே பூநீரு காச்சவென்று
நாமான சாத்திரத்தின் வுளவுகாணார் நாட்டிலே எந்நூலைபாராமற்றான்
சாமானமான கவியேழாயிரத்தை சாங்கமுடன் பாராமற் கெட்டார்தாமே

விளக்கவுரை :


3030. கெட்டான கோடிமனு ராஜரெல்லாம் கேடுகெட்ட கருமிகளு மாந்தர்தாமும்
சுட்டாரே முப்பூவைக் காணாமற்றான் சுட்டதினாலாபமென்ன லோபங்கண்டார்
விட்டகுறை இருந்ததினா லிந்நூல்பார்த்து விருப்பமுடன் வாதமதைக் காணலாச்சு
இட்டமுடன் சத்தகாண்ட மேழாயிரத்தில் எழாலாகப் பாடிவைத்தேன் மறைப்பில்லைதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3021 - 3025 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3021. நாலான சாமமது எரித்தபோது நலமான பில்லையது பூர்க்கும்பாரு
காலான பில்லையது காரமெத்த கடுக்காரச் சுண்ணமென்றே செய்யலாகும்
பாலான சுண்ணமதை மஞ்சள்தன்னில் பாச்சினால் மஞ்சளது சிவந்துபோகும்
மேலான சரக்குக்கு காலனாகும் மேன்மையுடன் சரக்கனைத்தும் கொல்லுந்தானே

விளக்கவுரை :


3022. கொல்லுமே பாஷாணமுப்பத்திரண்டும் கொடிதான சரக்கனைத்தும் நீற்றுப்பாரு
வெல்லுமே நவலோகம் நீறிப்போகும் வேகமுடன் சூதமது துடித்துக்கொல்லும்
புல்லுமே காரசாரங்கள் தானும் புகழான முப்புவால் மடிந்துபோகும்
கல்லைகளும் முப்புவால் நீறிப்போகும் காடெல்லாந்தான் விளையும் மூலியாமே

விளக்கவுரை :

[ads-post]

3023. மூலியாம் சாறுவரா தழைகளெல்லாம் முப்பூவி லணுவளவு பட்டாக்கால்
கேலியாம் தழைகளெல்லாம் சலமாய்ப்போகும் கெவனமுடன் குளிகைக்கு முப்புவாகும்
வாலிபப்பெண்ருதுவாவால் முப்புவாலே வளமுடனே காயமது கற்றூணாகும்
சாலியனாம் வண்ணானும் காணமாட்டான் சட்டமுடன் முப்பூவின் வளமைபாரே  

விளக்கவுரை :


3024. வளமுடனே முப்பூவைக் கண்டபோது வாகுடனே யேமத்துக் குறுதியாச்சு
பளமையுடன் வயித்தியமும் வாதயோகம் பலிக்குமடா முப்பூவின் மார்க்கத்தாலே
இளமையுடன் முப்பகலும் முப்புவாலே எழிலுடனே நீயுமொரு சித்தனாவாய்
நளபதியும் முப்பூவையுண்டபோது நரைதிரையு மற்றுமல்லோ ராஜனாமே

விளக்கவுரை :


3025. ராஜனாம் ராஜாதிராசனாவான் நலமான முப்பூவின்தன்மார்க்கத்தால்
போஜனுமே விவர்க்கீடு சொல்லப்போமோ பொங்கமுடன் முப்புவின் பெருமையாலே
கோஜபீஜங்களது முப்பூவாலே குவலயத்தில் காயகற்பம் முப்பூவாலே
பாசமுடன் சித்தர்முனி ரிஷிகள்தாமும் பாரிலே கர்ப்பமுண்டு இருந்தார்தாமே

விளக்கவுரை :


Powered by Blogger.