போகர் சப்தகாண்டம் 3026 - 3030 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3026 - 3030 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3026. இருந்தாரே கோடிரிஷிசித்தர் தாமும் எழிலான முப்பூவை முடித்துக்கொண்டு
திருத்தமுடன் சமாதியினிலிருந்துகொண்டு சீர்பெறவே யனேகவித சித்செய்தார்
பொறுந்தவே பூமியிடப் பாகங்கண்டு புகழான முப்பூவை கண்டறிந்து  
வருந்தியே முடித்தவர்கள் கோடாகோடி வளமுடனே பதங்கெட்டார் கோடியாமே

விளக்கவுரை :


3027. கோடியாஞ் சித்தர்களி லொருவருண்டு கவலயத்தில் குருமுடிப்போன் ஒருவருண்டு
தேடியே பார்த்தாலும் கிடைப்பதில்லை தேசத்தில் விட்டகுறைநேருமானால்
கூடியே அவர்தனக்கு கிட்டும்பாரு கிட்டாவிட்டால் விட்டகுறை யில்லையென்று
நாடியே கர்மானுபவத்தினாலே நாட்டமுடன் அறிந்துகொள்ள நீதியுண்டே  

விளக்கவுரை :

[ads-post]

3028. உண்டான சாத்திரத்தில் அனேகஞ்சொன்னார் உத்தமர்கள் ரிஷிகோடி முனிவர்தாமும்
அண்டமுடன் பிண்டங்களை அறியாமற்றான் அனேகமதாய் சுட்டலைந்து கெட்டார்கோடி
கண்டபடி சாத்திரங்கள் தாறுமாறாய் காசினியில் தம்மனம்போல் பாடிவிட்டார்
விண்டவர்கள் கண்டவர்கள் யாருமில்லை வஇருப்பமுடன் பூநீரை கெடுத்தார்தாமே

விளக்கவுரை :


3029. தாமான பிண்டமது நடுப்பிண்டத்தை தாக்கான மடிப்பிண்டம் தலைப்பிண்டம்தான்
கோமான மாதர்களுங் கொண்டுவந்து கொப்பெனவே பூநீரு காச்சவென்று
நாமான சாத்திரத்தின் வுளவுகாணார் நாட்டிலே எந்நூலைபாராமற்றான்
சாமானமான கவியேழாயிரத்தை சாங்கமுடன் பாராமற் கெட்டார்தாமே

விளக்கவுரை :


3030. கெட்டான கோடிமனு ராஜரெல்லாம் கேடுகெட்ட கருமிகளு மாந்தர்தாமும்
சுட்டாரே முப்பூவைக் காணாமற்றான் சுட்டதினாலாபமென்ன லோபங்கண்டார்
விட்டகுறை இருந்ததினா லிந்நூல்பார்த்து விருப்பமுடன் வாதமதைக் காணலாச்சு
இட்டமுடன் சத்தகாண்ட மேழாயிரத்தில் எழாலாகப் பாடிவைத்தேன் மறைப்பில்லைதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar