3036. பேரான சுக்காங்கல்
பிரம்மக்கல்லாம் பெருமையுள்ள மூதண்டக்கல்லுமாகும்
சீரான படிகக்கல்
லென்றும்பேரு சிறப்பான குழியானை யென்றும்பேரு
தாரான குடுகுக்கல்
என்னும்பேரு தாக்கான கண்ணகக்கல் என்றும்பேரு
பாரான பச்சையென்ற
கன்னக்கல்லு பாங்கான உதகமென்ற கல்லுமாச்சே
விளக்கவுரை :
3037. கல்லான கல்லதனைக்
காணவேண்டும் காசினியில் ஆருந்தான் காணமாட்டார்
புல்லான பூநீரை யறியமாட்டார்
புகழான சோனக்கல் கண்ணமப்பா
மல்லான மண்கட்டி
யென்பார்பாரு வையகத்தில் தாமறியார் மகிமைதன்னை
செல்லான புத்துக்குள்
இருக்குங்கல்லாம் ஜெகஜோதி மகிமைதனை காணார்தாமே
விளக்கவுரை :
[ads-post]
3038. காணாரே கருவாளி காண்பானானால்
காசினியில் விண்டிடுவான் கருத்துளோர்க்கு
தோணவே பூவுலகில்
தொட்டாலுந்தான் தொல்லுலகில் மாண்டிடுவார் மாந்தர்தாமும்
நாணவே சாத்திரத்தை
மிகவாராய்ந்து நாதாக்கள் சொல்லுதையும் மிகவுங்கேட்டு
நீணவே கற்பாந்திர
மிருப்பதற்கு நீணிலத்தில் கைமறைப்பு யாவுங்கேளே
விளக்கவுரை :
3039. கேட்கையிலே சாத்திரமாம்
யுகாந்தகால மிருப்பதற்கு வாசிநோக்கு
நீட்கமுடன் வாசியிலே
இருந்துகொண்டு நீடாழி யுலகத்தை வெறுக்கப்பண்ணி
சூட்சமுடன் சின்மயத்தை
யறிந்துபோற்றி சுருதியுள்ள கருவிகருணாதியெல்லாம்
தாட்கமல பீடமதை
பணிந்துபோற்றி சதாகாலம் சமாதியிலே இருக்கநன்றே
விளக்கவுரை :
3040. நன்றான சரக்குதனைக்
கொல்லவென்று நாட்டமுடன் சத்துரு மித்துருவுங்கண்டு
குன்றான மலைகளிலே
பாஷாணமுண்டு கொப்பெனவே கொண்டுவந்து பூநீர்ச்சுண்ணம்
பன்றான வுமிழ்நீரால்
மத்தித்தேதான் பாலகனே சுண்ணமென்ற பாஷாணத்தில்
தன்றான கட்டிக்கு
வங்கிபூட்டி தகைமையுடன் கோழியென்ற புடத்தைப்போடே
விளக்கவுரை :