போகர் சப்தகாண்டம் 3016 - 3020 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3016. பூத்ததொரு பூவெடுத்து சொல்லக்கேளும் புகழான பூவுடனே பச்சைப்பூரம்
நேர்த்தியுடன் வீரமது காலதாக நேர்மையுடன் சீனமது வரையதாகும்
கீர்த்தியுடன் வெடியுப்பு சமனதாக கிருபையுடன் பூரமது தானுங்கூட்டி  
மாத்தியே சரக்கெல்லாம் ஒன்றாய்ச்சேர்த்து மன்னவனே கல்வமதில் மாட்டிடாயே
விளக்கவுரை :


3017. மாட்டவே பிண்டமென்ற செயநீர்தன்னால் மயங்காமல் நாற்சாமம் அரைத்துத்தீரு
வாட்டமுடன் பில்லைதட்டி காயவைத்து வளமாக வகல்தனிலே மூடிமைந்தா
நீட்டமுடன் சீலையது வலுவாய்ச்செய்து நேர்மையுடன் ரவிதனிலே காயவைத்து
நாட்டமுடன் தான்போடு கோழியாக நாயகனே பில்லையது பூர்க்குந்தானே  

விளக்கவுரை :

[ads-post]

3018. தானான பில்லையது பூர்க்காவிட்டால் தகைமையுடன் புடமதுவும் பின்னும்போடு
கானான பில்லையது கறப்பேராது கடுஞ்சுருக்கு ஒருவேளை சிவக்கும்பாரு
மானான பில்லையது மறுபடியுமப்பா மயங்காமல் செயநீரில் அரைத்துக்கொண்டு
கோனான குருவருளால் பில்லைதட்டி கொப்பெனவே ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :


3019. போடவே பில்லையது சத்தமிட்டால் பொங்கமுடன் ஓட்டிலிட்டு சீலைசெய்து
நீடவே ரவிமுகத்தில் காயவைத்து நேர்மையுடன் சீலையது வலுவாய்ச்செய்து
கூடவே கோழியென்ற புடந்தான்போடு கொப்பெனவே பில்லையது பூர்க்கும்பாரு
தேடவே பூநீராம் வன்னமாகும் தெளிவான சரக்கெல்லாம் தட்டிப்போடே

விளக்கவுரை :


3020. போமென்று விடுகாதே பின்னுங்கேளு போக்கான சரக்கெல்லாம் கட்டுதற்கு
வேமென்ற சத்துரு மித்துருவுஞ் சேர்த்து வேகமுடன் வசகமது செய்துகொண்டு
நாமென்ற வாக்கு பொய்யாகாமற்றான் நலமாக சட்டிதனில் மணல்தான்கொட்டி
நாமென்ற மேல்சட்டி கொண்டுமூடி சட்டமுடன் தானெரிப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3011 - 3015 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3011. சாத்தியே மூலங்கள் என்னும்குழல்கள்தன்னை சட்டமுடன் தானிருந்து சாற்றக்கேளு
நேர்த்தியுடன் குழல்தனையே பூமிதன்னில் நேர்மையுடன் தானிடித்து சில்லுபோடு
பூர்த்தியுடன் மூன்றாநாள் வெடியச்சாமம் பொங்கமுடன் தான்திறந்து பார்க்கும்போது
காத்திரமாய் கதிர்கதிராய் பூநீர்தாமும் கதிரவன்போல் பூர்த்திருக்கக் கண்டிட்டோமே

விளக்கவுரை :


3012. கண்டிட்டோம் வாதிகளு மொன்றாய்க்கூடி கடுவே பூநீரையெடுத்துவந்து
அண்டமென்னும் கற்சுண்ணம் முடிப்பதற்கு அரகரா பிண்டமென்ற செயநீர்தன்னால்
விண்டபடி மேகமென்ற யந்நீர்தானும் விருப்பமுடன் தானெடுத்து பூநீர்தன்னை
கொண்டபடி பாண்டமதில் இட்டுமைந்தா கூறுவேன் காச்சலென்ற விபரங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3013. கேளேநீ பூநீரைக்காச்சவேதான் கெனிதமுடன் தான்கரைத்து மைந்தாகேளு
மாளவே மறுபாண்டம் தெளிவிருத்து மார்க்கமுடன் காய்ச்சடுவாய் பூநீர்தன்னை
மாளவே தசதீட்சை இப்படியே சேயாகும் மானிலத்தில் செய்வார்கள் இந்தமார்க்கம்
சூளவே இன்னமொரு பாகங்கேளு சுடரொளியாம் பரிதிமுகம் செய்வார்பாரே

விளக்கவுரை :


3014. செய்வாரே தினந்தினமும் தீட்சையப்பா செம்மையுடன் பூநீரை ரவியில்வைத்து
பெய்யவே பனிநீரை பூநீரில்விட்டு பேரான ரவிமுகத்தில் வைத்தபோது  
துய்யவே பூநீராம் பூவேபார்க்கும் துகளற்ற வெண்மையது கதிர்போலாகும்
மெய்யடனே இப்பாகஞ்செய்வார்மாந்தர் மேதினியில் இன்னமொரு பாகங்கேளே

விளக்கவுரை :


3015. பாகமென்றால் பாகமது சொல்லொண்ணாது பாவையுட கருவான செயநீராகும்
போமென்ற செயநீரும் பிண்டமாகும் பொங்கமுடன் பனிக்குடமாஞ் சலமேயாகும்
வேகமென்ற பூநிரைவிட்டு மைந்தா விருப்பமுடன் சலமதினில் கரைத்துநீயும்
சாகமுடன் தசதீட்சை யிப்படியேயாகும் சட்டமுடன் செய்துவந்தால் பூர்க்கும்பாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3006 - 3010 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3006. ஆமேதான் பாஞ்சாலன் பூமிவளமாகும் அப்பனே தென்புவனம் வடபுவனமாகும்
தேமேதான் புல்லவே தீர்த்தக்கரையாகும் தேன்விளையும் நர்மதா வடமேருமாகும்
போமேதான் இத்தாதிதேசநாடு பொலிவான வளர்பூமி என்னலாகும்
மாமேதான் பூநீரு எடுக்குங்காலம் பகருவேன் காலமது செப்பக்கேளே

விளக்கவுரை :


3007. கேளேதான் சித்திரா பருவமுன்னும் கெணிதமுடன் பங்குனிக்கு முன்னதாக
தாளேதான் அமாவாசை பூரணவட்டம் நாள்தேடி பரிபாஷை தாமுணர்ந்து
பாளேதான் போகாமல் நாளைப்பார்த்து பாரினிலே எல்லவரும் நூலாராய்ந்து
வேளேதான் சித்தர்நூல் நுணுக்கம்பார்த்து வேதாந்தத் தாயினது உபவாசங்கேட்டே

விளக்கவுரை :

[ads-post]

3008. கொண்டேதான் உபவாசமிருந்து கொண்டு காடான கோடிமலை தேசங்கண்டு
கண்டேதான் காணாறுதேசம்விட்டு காடுமலை நதிவனமுந் தான்கடந்து
விண்டேதான் பூநீருமெடுக்குங்காலம் விண்ணுலகில் சித்தர்முனி சொல்லைப்போலே
அண்டர்முனி ராட்சதர்கள் இருக்குங்காலம் அங்கனவே தாம்போனார் மாந்தர்தாமே

விளக்கவுரை :


3009. மாந்தராம் தவயோகி சிவயோகிதானும் மார்க்கமுடன் முப்புவனங்காணவென்று
வேந்தர்பதி முதலான தேசராஜர் வெகுகோடி மாந்தரெல்லாம் முப்பைக்காண
போந்தமுடன் நிலாப்பருவம் தன்னிற்சாமம் பொங்கமுடன் நடுவேளை சாமந்தன்னில்
சாந்தமுடன் பிரணவத்தின் மாறல்கொண்டு சட்டமுடன் பூநீருமெடுப்பார்தாமே 

விளக்கவுரை :


3010. எடுக்கையிலே சீனபதிதேசந்தன்னில் எழிலான பூநீரு மெடுக்குமார்க்கம்
அடுக்குடனே யோராளின்கீழ்மட்டாக அப்பனே யவர்பூமி தன்னைத்தோண்டி
இடுக்கமென்ற குழிதனிலே மண்ணைத்தானும் யெழிலாகத் தான்பரப்பீ மூடிப்போடு
ஒடுக்கமுடன் கெட்டணைகள் அதிகங்கொண்டு வுத்தமனே பன்னாடை மேலேசாத்தே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3001 - 3005 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3001. ஓடியே சதாசிவன்தான் பாதங்காப்பு வுரைத்திடுவேன் போகரேழாயிரத்தில்
தேடியே சத்தசாகரமதாக திறமாகப் படிவைத்தேன் சத்தகாண்டம்
கூடியே காலாங்கி நாதர்பாதம் குருவான நாதாக்கள் பாதம்போற்றி
ஆடியே வயித்தியமாம் நாலாங்காண்டம் அப்பனே வாதமது காப்பதாமே

விளக்கவுரை :


3002. தானான சத்தசாகரமுங் கண்டேன் தானான சத்ததீவுகளுங் கண்டேன் 
வேனான சத்தநதி தானுங்கண்டேன் வேகமுடன் அஷ்டதிக்கு தானும்கண்டேன்
கோனான அஷ்டபாலகரைக் கண்டேன் கொடிதான அஷ்டதேவாலயங் கண்டேன்
பானான பராபரியை மனதிலெண்ணி பாங்குபெற பாடிவிட்டேன் மகிமைபாரே

விளக்கவுரை :

[ads-post]

3003. பாரேதான் குளிகையது பூண்டுகொண்டு பண்புடனே சீனபதிசென்றேன்யானும்
நேரேதான் சீனபதி மூன்றுகாதம் நேர்மையுடன் சுத்திவந்து வுளவுகண்டேன்
சீரேதான் பூமிவளம் யானுங்கண்டேன் சிறப்பான அவர்பூமியிதுவேயாகும்
கூரேதான் நாதாக்கள் கண்டதில்லை கொற்றவனே யான்கண்டேன் பூநீராமே

விளக்கவுரை :


3004.  ஆமேதான் பூநீரின் வளப்பங்கேளிர் அகிலமெலாம் பூநீர்கள் மெத்தவுண்டு
தாமேதான் பாண்டிவளமெத்தநாடு தாக்கான யாவடையார் பிரம்மதேசம்
நாமேதான் கண்டபடி சேரநாடு நாதாக்கள் சோழவள மெடுப்பார்பூமி
போமேதான் நெடுங்காலம் தன்னிற்சென்று பொங்கமுடன் தானெடுப்பார் பூநீராமே

விளக்கவுரை :


3005. பூநீரில்ன்னம் வெகுதளமுஞ்சொல்வேன் புகழான காளஸ்திரி சிவகெங்கைதானும்
பூநீராம் பாலுவனம் பூம்பாறையாகும் புகழான திண்டுக்கல் பசுமலையுமாகும்
சோநீராந் தில்லைவனம் காளிங்கமடுவு சொர்ணமென்ற பூமியது வடமதுரையாகும்
தேநீரான் தென்மதுரை வயோத்திநகராகும் தெளிவான பொன்னகரந் தானுமாமே

விளக்கவுரை :


Powered by Blogger.