போகர் சப்தகாண்டம் 3351 - 3355 of 7000 பாடல்கள்
3351. திண்ணமா மின்னமொரு
கருமானங்கேள் திகழான வர்ணமென்ற போக்குசொல்வோம்
வண்ணமுடன் பஞ்சவர்ண விதங்கள்
சொல்வோம் வகுப்புடனே யதிற்பிறந்த வர்ணம் நான்காம்
நண்ணமுடன் வாயுவென்ற
இரும்புதன்னில் நலமான வர்ணமது ரூபபேதம்
கண்ணபிரான் வர்ணமது
போலேயாகும் காசினியில் சித்தர்செய்யும் வேதையாச்சே
விளக்கவுரை :
3352. வேதையிலே இன்னமொரு
போக்கைக்கேளும் வீறான சிறியகண்ணாகந்தானு
தீதையிலே தானுருக்கி
மதியுப்போடு திகழான களங்குபோல் உருகும்பாரு
போகமுடன் சூதமதைக்
கூடச்சேர்த்து பொங்கமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நாகமுடன் சாரமென்ற
செயநீர்தன்னால் நளினமுடன் தானரைத்து செப்பக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
3353. செப்பவென்றால் வளையலுப்பு
கூடச்சேர்த்து சிறப்புடனே நிம்பழச்சார் தானும்விட்டு
ஒப்பமுடன் வெந்நீரில்
கலக்கிக்கொண்டு ஓங்குபெற செம்பென்ற கட்டைதானும்
நெப்பமுடன் தகடடித்து
சலத்திற்போடே நேரான வர்ணமது மேலேதாவி துப்புரவாய்
ஒளிவீசுந் தகட்டின்மேலே
சூரியன்போல் தங்கமென்ற வர்ணமாமே
விளக்கவுரை :
3354. ஆமேதான் வர்ணமொடு
சிவப்புபச்சை அப்பனே நீலமென்ற கருப்புதானும்
தாமேதான் ரசமதனைக்
கூடச்சேர்த்து தன்மையுடன் சீசாவிலடைத்து மைந்தா
வேமேதான் தகடதனைத்
தோய்க்கும்போது விதமான சஞ்சாயவர்ணங்காணும்
நாமேதான் சொன்னபடி ரூபவர்ணம்
நயமுடனே தகடதனில் ஏறும்பாரே
விளக்கவுரை :
3355. பாரேதான் இரும்புக்கு
இந்தமார்க்கம் பாகமுடன் செய்துவந்தால் பண்பதாகும்
நேரேதான் வங்கமது தகடடித்து
நேரான முன்சொன்ன சரக்கிலேதான்
வாரேதான் வங்கமதை
யுருக்கியேதான் வளமுடனே காய்ச்சியல்லோ தோய்ச்சிப்பாரு
கூரேதான் துரிசியிட
காரத்தாலே கொற்றவனே பலபேதம் விளையுந்தானே
விளக்கவுரை :