போகர் சப்தகாண்டம் 3451 - 3455 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3451. போட்டபின்பு பில்லைதனை பதனம்பண்ணு பொங்கமுடன் நாதாக்கள் சொற்படிக்கி
தேட்டமுடன் பில்லைதனை பதனம்பண்ணி தெளிவான காயாதிகற்பவுண்டை
நீட்டமுடன் காயகற்ப செந்தூரத்தை நீணிலத்தில் கொண்டதொரு ஞானிகட்கு
மூட்டமுடன் கருவாதி மூலியுண்டை முனையான சிலும்புதனில் வைத்துக்கேளே

விளக்கவுரை :


3452. கேளேதான் சிலும்புதனில் மூலியுண்டை கிருபையுடன் தான்வைத்து சொல்லக்கேளு
பாளேதான் போகாமல் அக்கினியைப்போடு பாகமுடன் சிலும்பிதனைக் குடித்தபோது
நாளேதான் நாதாக்கள் சொற்படிக்கு நலமான புகையதுவுங் கபாலந்தன்னில்
சூளேதான் புகையதுவும் மேலேநோக்கி சுருக்குடனே லாகிரியைச் காட்டும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3453. பாரேதான் சிலும்புதனில் புகையெழும்பி பண்பான லாகிரியை மீட்டும்போது
நேரேதான் காயாதிகற்ப செந்தூரந்தான் நீடாழிக்காலம்வரை பழுதுறாது
கூரேதான் நவகோடி ரிஷிகள்தாமும் குறிப்பான சித்தர்முனி யனேகம்பேர்
சீரேதான் இப்படியே சொல்லாமற்றான் சீரான செந்தூரங் கொடுத்தார்காணே

விளக்கவுரை :


3454. காணவே காயாதிசெந்தூரத்தை காசினியில் இப்படியே கெடுத்தார்தாமும்
தோணவே காயாதிகற்பத்துக்கு துறைகோடி முறைகோடி தொந்தங்கோடி
பூணவே யிப்புகையைச் செய்யாவிட்டால் புகழான செந்தூரங் கெட்டுப்போகும்
வாணவே காயாதிகொண்டபேர்க்கு வளமுடனே லாகிரிகள் வேண்டும்பாரே

விளக்கவுரை :


3455. வேண்டியதோர் கருமானம் இன்னஞ்சொல்வேன் விருப்பமுடன் காயாதிகொண்டபேர்கள்
தூண்டியே முன்சொன்ன சூரணத்தை துப்புரவாய் கியாழமது செய்துகொண்டு
தாண்டியே யாவின்பால் சீனிதானும் சட்டமுடன் தூள்போட்டு கியாழஞ்செய்து   
தீண்டியே விஷம்போக வந்திசந்தி திறமாக குடிப்பதுவே யமுர்தமாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3446 - 3450 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3446. கோடியா மின்னமொரு கருமானங்கேள் கொற்றவனே புகையொன்று கூறக்கேளும்
நாடியஏ கருவூமத்தை சமூலங்கொண்டு நலமான பேய்ப்பாகல் மூலிதானும்
தேடியே சிறியானின் நங்கைதானும் தெளிவான கெஞ்சாவின் மூலிதானும்
பாடியே பொடுதலையின் சமூலந்தானும் பாங்கான செருப்படையின் மூலியாமே

விளக்கவுரை :


3447. மூலியுடன் தைவேளை சமூலந்தானும் முனையான வழிஞ்சியிடமூலிதானும்
சீலியாங் கொடிவேலி மூலிதானும் வீறான காட்டினாமணக்கு மூலிதானும்
சாலியாஞ் செம்பருத்திமூலிதானும் சார்பான கதலியிட சாருதானும்
வாலியாம் வழுதலையின் மூலந்தானும் வாசான கையானின் மூலிதாமே

விளக்கவுரை :

[ads-post]

3448. தாமான பொன்னினாவாரைமூலம் தாக்கான குறிஞ்சாவின் மூலிதானும்
காமான கருஞ்சூரிமூலிதானும் கருவான பேச்சுரையின் மூலிதானும்
நாமான நத்தையென்ற சூரிதானும் நலமான பேய்சமிட்டி மூலிதானும்
பாமானமானதொரு திகைப்பூண்டுதானும் பண்பான பேய்க்கொல்லி நாய்க்கொல்லிதானே

விளக்கவுரை :


3449. தானான கரும்பசளை செம்பசளைதானும் தாக்கான கொடிவிரியன் செவ்விரியன்தானும்
பானான சரட்டரணை யெழில்மூலிதானும் பாங்குடனே மதிமயக்கம் மிகவேயாகும்
கோனான யெனதையர்காலாங்கிநாதர் குருசொன்னபடியாக வனமூலிதன்னை
தேனான மூலிகைகள் சமூலங்கொண்டு தேற்றமுடன் தானெடுக்க வகையைக்கேளே

விளக்கவுரை :


3450. கேட்கவென்றால் மூலிதனை சமூலங்கொண்டு கொடிதான ரவிதனிலே காயப்போடு
நீட்கமுடன் கல்லுரலில் போட்டுக்குத்து நேர்மையுடன் பொடியாக்கித் தூளதாக்கி
மீட்கமுடன் வெள்ளாட்டின் பாலினாலே மேன்மையுடன் தானரைப்பாய் நாலுசாமம்
வாட்டமுடன் தானரைத்து பில்லைதட்டி வளமாக ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3441 - 3445 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3441. போமேதான் கரப்பனென்ற பதினெட்டும்போம் பொல்லாத வயிற்றுவலி பொருமல்போகும்
வேமேதான் கால்வாதம் கைவாதம்போம் மிக்கான குடல்பிரட்டல் யாவும்போகும்
நாமேதான் சொன்னபடி சேத்துமங்கள் நாடாது எந்நாளும் நாடாதப்பா
வேமேதான் காசமொடு ஈளைபோகும் வேகமுடன் வதுவையென்ற கட்டிபோமே

விளக்கவுரை :


3442. கட்டியென்றால் கொசியென்ற கட்டிபோகும் கருவான வுதிரத்தின்கட்டிபோகும்
அட்டியில்லா வன்லதுவும் பறந்துபோகும் அப்பனே குடச்சல்முதல் அகன்றுபோகும்
துட்டமெனும் கொடிரோகம் மாந்தைரோகம் துடித்துமே கூடுவிட்டுக் காடுபோகும்
திட்டமுடன் காயாதி கற்பங்கொண்ட தேகத்துக்கிந்தநெய் வேண்டும்பாரே   

விளக்கவுரை :

[ads-post]

3443. வேண்டுமே காயாதி செந்தூரத்தை விருப்பமுடன் கொண்டவர்க்கும்பேதியாகா
தீண்டவுமே விஷமதுவும் ஏறலாகா திகழான வானமது சேரலாகா
காண்டிபனாயிருந்தாலும் காயகற்பம் காசினியில் கொள்ளாவிட்டால் காயம்பாழாம்
தூண்டுமிகக் கருமானந் தானறிந்து துப்புரவா யுண்பவனே சித்தனாமே

விளக்கவுரை :


3444. சித்தனாய்ப் பிறந்தாலும் ஒன்றுமில்லை ஜெகதலத்தில் வுண்மைதனையறியவேண்டும்
மெத்தவே வழியோடே காயகற்பம் வெகுபேர்கள் உண்டுமல்லோ கெட்டுப்போனார்
சத்தேனும் அறிவிருந்து நூலைப்பார்த்து சதாகாலம் நேர்மையது பாராமற்றான்
பித்தனைப்போல் கெட்டலைந்து பிசாசுபூண்டு பேருலக்ல் மாண்டவர்கள் கோடியாமே

விளக்கவுரை :


3445. கோடியிலே ஒருவருண்டு கருவாளியப்பா குணமுடையான் மனமுடையான் மானமுள்ளான்
பேடிகள் போல்வாய்வீனர் மெத்தவுண்டு பேருலகில் ஒன்றறியார் கழுதைமாண்பர் 
தேடியோ வலைந்துமல்லோ காயகற்பம் திறமுடனே கண்டவன்தானென்றுசொல்லி
வாடியே பதிகெட்டு நிலையுங்கெட்டு வாட்டமுடன் மாண்டவர்கள் கோடியாமே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3436 - 3440 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3436. சாற்றவென்றால் சதாவேரி சேரதாகும் சார்பான முசுமுசுக்கை சேரதாகும்
கூற்றனென்னும் குதம்பைசார் சேரதாகும் குணமான மாதளையுஞ் சேரதாகும்
மாற்றலென்ற வாவிநெய் சேரதாகும் மகத்தான தேனதுவும் சேரதாகும்
சீற்றமுடன் கடைசரக்கு செப்பக்கேளு சிறப்புடனே சேர்க்கும்வகை செப்பக்கேளே

விளக்கவுரை :


3437. கேளேதான் திப்பிலியும் விசுவாசிதானும் கெடியான சுக்குடனே ஓமந்தானும்
வீளேதான் கூகைநீர் பரங்கிதானும் வுத்தமனே கருவாயின் பட்டைதானும்
பாளேதான் போகாமல் மதுரந்தானும் பாங்குடனே நில்வாகை சிவதைவேறும்
தானேதான் வகைக்கு ஒருபலமதாக சற்பனையாய்ப் போட்டுமிகக் காய்ச்சிடாயே

விளக்கவுரை :

[ads-post]

3438. காய்ச்சிகையில் கஸ்தூரி குங்குமப்பூ கருவான ரோசனையும் களஞ்சிசேர்த்து
காய்ச்சலுடன் மெழுகுபதந் தானிறக்கி மன்னவனே வடிகட்டி எடுத்துக்கொண்டு
பாச்சலுடன் வாரடித்துக் கிரண்டுமுறைதானும் பாங்குடனே யந்திசந்தி கொண்டாயானால்
மேச்சலெனும் ரோகமது கலன்றுபோகும் மேதினியில் எந்நாளும் இருக்கலாமே

விளக்கவுரை :


3439. இருக்கலாம் கற்பாந்த காலம்மட்டும் எழிலுடனே வாசியோகங்கொள்ளலாகும்
பொருக்கலாம் சிவயோகந்தன்னிற்சென்று பொங்கமுடன் வாசியைத்தான் மடக்கிக்கீழால்
சுருக்கவே கர்மேந்திரியம் அனைத்தும்போக்கி சதாகாலஞ் சின்மயத்திலிருந்துகொண்டு
வெருப்புடனே மாயாது ரட்சைதன்னை வெறுப்பதுவே யுத்தமர்க்கு புனிதமாமே

விளக்கவுரை :


3440. புனிதமாம் நெய்யதனைக் கொண்டபோது புகழான கசரோகமகன்றுபோகும்
வனிதமுடன் வாயுவென்ற தென்பதும்போம் வாகான பித்தமென்ற நாற்பதும்போம்
துனிதமுள்ள சூலைபதினெட்டும்போகும் துலையாத குன்மமென்ற ரோகம்போகும்
புனிதமுடன் பாரிசாமம் வாயுபோகும் பறக்குமடா தேகத்தில் ரோகம்போமே   

விளக்கவுரை :


Powered by Blogger.