3441. போமேதான் கரப்பனென்ற
பதினெட்டும்போம் பொல்லாத வயிற்றுவலி பொருமல்போகும்
வேமேதான் கால்வாதம்
கைவாதம்போம் மிக்கான குடல்பிரட்டல் யாவும்போகும்
நாமேதான் சொன்னபடி
சேத்துமங்கள் நாடாது எந்நாளும் நாடாதப்பா
வேமேதான் காசமொடு ஈளைபோகும்
வேகமுடன் வதுவையென்ற கட்டிபோமே
விளக்கவுரை :
3442. கட்டியென்றால் கொசியென்ற கட்டிபோகும் கருவான வுதிரத்தின்கட்டிபோகும்
அட்டியில்லா வன்லதுவும்
பறந்துபோகும் அப்பனே குடச்சல்முதல் அகன்றுபோகும்
துட்டமெனும் கொடிரோகம்
மாந்தைரோகம் துடித்துமே கூடுவிட்டுக் காடுபோகும்
திட்டமுடன் காயாதி
கற்பங்கொண்ட தேகத்துக்கிந்தநெய் வேண்டும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3443. வேண்டுமே காயாதி செந்தூரத்தை
விருப்பமுடன் கொண்டவர்க்கும்பேதியாகா
தீண்டவுமே விஷமதுவும் ஏறலாகா
திகழான வானமது சேரலாகா
காண்டிபனாயிருந்தாலும்
காயகற்பம் காசினியில் கொள்ளாவிட்டால் காயம்பாழாம்
தூண்டுமிகக் கருமானந்
தானறிந்து துப்புரவா யுண்பவனே சித்தனாமே
விளக்கவுரை :
3444. சித்தனாய்ப் பிறந்தாலும்
ஒன்றுமில்லை ஜெகதலத்தில் வுண்மைதனையறியவேண்டும்
மெத்தவே வழியோடே காயகற்பம்
வெகுபேர்கள் உண்டுமல்லோ கெட்டுப்போனார்
சத்தேனும் அறிவிருந்து
நூலைப்பார்த்து சதாகாலம் நேர்மையது பாராமற்றான்
பித்தனைப்போல் கெட்டலைந்து
பிசாசுபூண்டு பேருலக்ல் மாண்டவர்கள் கோடியாமே
விளக்கவுரை :
3445. கோடியிலே ஒருவருண்டு
கருவாளியப்பா குணமுடையான் மனமுடையான் மானமுள்ளான்
பேடிகள் போல்வாய்வீனர்
மெத்தவுண்டு பேருலகில் ஒன்றறியார் கழுதைமாண்பர்
தேடியோ வலைந்துமல்லோ
காயகற்பம் திறமுடனே கண்டவன்தானென்றுசொல்லி
வாடியே பதிகெட்டு
நிலையுங்கெட்டு வாட்டமுடன் மாண்டவர்கள் கோடியாமே
விளக்கவுரை :