3436. சாற்றவென்றால் சதாவேரி
சேரதாகும் சார்பான முசுமுசுக்கை சேரதாகும்
கூற்றனென்னும் குதம்பைசார்
சேரதாகும் குணமான மாதளையுஞ் சேரதாகும்
மாற்றலென்ற வாவிநெய்
சேரதாகும் மகத்தான தேனதுவும் சேரதாகும்
சீற்றமுடன் கடைசரக்கு
செப்பக்கேளு சிறப்புடனே சேர்க்கும்வகை செப்பக்கேளே
விளக்கவுரை :
3437. கேளேதான் திப்பிலியும்
விசுவாசிதானும் கெடியான சுக்குடனே ஓமந்தானும்
வீளேதான் கூகைநீர்
பரங்கிதானும் வுத்தமனே கருவாயின் பட்டைதானும்
பாளேதான் போகாமல்
மதுரந்தானும் பாங்குடனே நில்வாகை சிவதைவேறும்
தானேதான் வகைக்கு ஒருபலமதாக
சற்பனையாய்ப் போட்டுமிகக் காய்ச்சிடாயே
விளக்கவுரை :
[ads-post]
3438. காய்ச்சிகையில் கஸ்தூரி
குங்குமப்பூ கருவான ரோசனையும் களஞ்சிசேர்த்து
காய்ச்சலுடன் மெழுகுபதந்
தானிறக்கி மன்னவனே வடிகட்டி எடுத்துக்கொண்டு
பாச்சலுடன் வாரடித்துக்
கிரண்டுமுறைதானும் பாங்குடனே யந்திசந்தி கொண்டாயானால்
மேச்சலெனும் ரோகமது கலன்றுபோகும்
மேதினியில் எந்நாளும் இருக்கலாமே
விளக்கவுரை :
3439. இருக்கலாம் கற்பாந்த
காலம்மட்டும் எழிலுடனே வாசியோகங்கொள்ளலாகும்
பொருக்கலாம்
சிவயோகந்தன்னிற்சென்று பொங்கமுடன் வாசியைத்தான் மடக்கிக்கீழால்
சுருக்கவே கர்மேந்திரியம்
அனைத்தும்போக்கி சதாகாலஞ் சின்மயத்திலிருந்துகொண்டு
வெருப்புடனே மாயாது
ரட்சைதன்னை வெறுப்பதுவே யுத்தமர்க்கு புனிதமாமே
விளக்கவுரை :
3440. புனிதமாம் நெய்யதனைக்
கொண்டபோது புகழான கசரோகமகன்றுபோகும்
வனிதமுடன் வாயுவென்ற
தென்பதும்போம் வாகான பித்தமென்ற நாற்பதும்போம்
துனிதமுள்ள
சூலைபதினெட்டும்போகும் துலையாத குன்மமென்ற ரோகம்போகும்
புனிதமுடன் பாரிசாமம்
வாயுபோகும் பறக்குமடா தேகத்தில் ரோகம்போமே
விளக்கவுரை :