3431. காணாரே நெய்யதனை
யார்தான்கண்டார் காசினியில் ரிஷிகள்முனி சித்தர்வேதை
தோணவே காயகற்பரோகநெய்யாம்
தொல்லுலகில் சீனபதிதேசத்தார்க்கு
வேணவே காலாங்கிநாதர் தாமும்
விருப்பமுடன் செப்பவென்ற நெய்யுமாச்சு
பூணவே யறிவுள்ளான்
செய்துபார்த்து பொங்கமுடன் நேமித்தகாயமாமே
விளக்கவுரை :
3432. காயமாமிந்தநெய் வதீதங்கேளு காயாதிகற்பங்களுண்டபேர்க்கு
நேயமுடன் வாரத்துக்
கிரண்டுமார்க்கம் நேர்மையுடன் வந்திசந்திக் கொள்ளவேண்டும்
மாயமெனுங் கள்ளாசை
நீக்கவேண்டும் மதுபான் விரும்பினால் காயமில்லை
தூயமுடன் நெய்யதனைக்
கொண்டபோது துடியான ரோகமெல்லந் துலைந்துபோமே
விளக்கவுரை :
[ads-post]
3433. துலைந்துவிடுங் கரப்பனென்ற
ரோகக்போகும் துறையான மதுமேகம் விட்டேயாடும்
அலைந்துகெட்ட கசரோகம்
அகன்றுபோகும் அப்பனே வரையாப்பு மேகம்போகும்
தலைவலி மண்டையிடி
சண்ணல்போகும் சண்டாள வயிற்றுவலி தாவியோடும்
கலைந்துவிடும் காதுநோய்
கண்ணோய்போகும் கால்வலியும் மேல்வலியும் தகைத்துபோமே
விளக்கவுரை :
3434. தகைத்துமே வாய்ப்புண்ணு வாய்நாற்றம்போம் தாரிணியில் வாதமென்ற ரோகம்போகும்
திகைத்துமே குன்மவலி
குன்மரோகம் தீராத கவுசியென்ற மகோதரங்கள்
பகைப்புடனே பீசத்தின்
வாயுவீக்கம் பாங்கான குடைச்சல்முதல் வலிப்பஉதீரும்
நகைப்புடைய மாதருட ரோகம்போகும்
நாடாது பிணிமூப்பு நாடாதன்றே
விளக்கவுரை :
3435. நாடாது காயகற்பம்
கொண்டபேர்க்கு நலமான நெய்யதுதான் கொள்ளவேண்டும்
தேடான காயத்துக்
கிந்தநெய்தான் தேற்றமுடன் வாரத்திற் கிரண்டுமுறையப்பா
வீடான தேகத்துக்
குறுதிநெய்யாம் விருப்பமுடன் பாடிவைத்தேன் போகர்தாமும்
தாடான சதாவேரிச்
சமூலங்கொண்டு தளர்ச்சியுடன் சார்பிழிந்து சாற்றக்கேளே
விளக்கவுரை :