3426. கொள்ளவே யாவிநெய் சரியதாக கொற்றவனே தான்சேர்த்துக் காய்ச்சிக்கொண்டு
மெள்ளவே மெழுகுபதம்
வடித்துக்கொண்டு மேன்மையுடன் மண்டலந்தான் கொண்டுவந்தால்
கள்ளமெனும் கோழையது
எங்கேபோச்சு கடிதான சயரோகம் தியங்கலாச்சு
உள்ளபடி மேகமென்ற
ரோகம்போகும் வுத்தமனே சில்விஷங்களற்றுப்போமே
விளக்கவுரை :
3427. அற்றதொரு வரையாப்பு
பரைகள்போகும் அப்பனே கண்டத்தின்மாலைதீரும்
உற்றதொரு வகுவையென்ற
கட்டிதீரும் வுளமாந்தை குன்ம முதலகன்றுவோடும்
பெற்றதொரு மாதுக்கு
வயத்தில்ரோகம் பேசாமல் வோடுமடா யின்னங்கேளு
மற்றதொரு மேகங்கள்
கசரோகங்கள் மானிடத்தில் நிற்காது திண்ணந்தானே
விளக்கவுரை :
[ads-post]
3428. திண்ணமாம் இன்னமொரு
கற்பம்பாரு திறலான வல்லாரை பெரியாவாரை
நண்ணமுடன் மூலிதான்
சேர்தானாழி நலமுடனே கொண்டுவந்து செப்பக்கேளு
வண்ணமுடன் திப்பிலியுங்
கோஷ்டந்தானும் வளமான மிளகுடனே மதுரந்தானும்
எண்ணமுடன் சுக்குடனே
கூகைநீரும் எழிலான கிராம்புடனே சாதிக்காயே
விளக்கவுரை :
3429. காயான வாள்மிளகு
கூடச்சேர்த்து கருத்துடனே சாதிபத்திரி சரியதாக
மாயான வலம்புரியு
மிடம்புரியுஞ்சேர்த்து மன்னவனே மயங்காமல் குங்குமப்பூ
தாயான கஸ்தூரி கோரோசனைத்தானும்
தகமையுடன் வகைக்கொரு களஞ்சதாக
தோயாத பாலுடனே
இத்தனையும்போட்டு துப்புரவாய் தானரைப்பாய் செப்பக்கேளே
விளக்கவுரை :
3430. செப்பவென்றால் நெய்யதுவும்
சேர்தான்பாதி செம்மையுடன் ஒன்றாகக் காச்சியேதான்
ஒப்புடனே கடுகுபதந்தானிறக்கி
வுத்தமனே கணபதிக்குப் பூசைசெய்து
தப்பிதங்கள் நேராமல்
மைந்தாநீயும் தண்மையுடன் வடிபணிந்து சிரங்குவித்து
மைப்பதுவே சீஷாவிற்
பதனம்பண்ணு மகத்தான நெய்யதுவும் காணார்தாமே
விளக்கவுரை :