3451. போட்டபின்பு பில்லைதனை
பதனம்பண்ணு பொங்கமுடன் நாதாக்கள் சொற்படிக்கி
தேட்டமுடன் பில்லைதனை
பதனம்பண்ணி தெளிவான காயாதிகற்பவுண்டை
நீட்டமுடன் காயகற்ப
செந்தூரத்தை நீணிலத்தில் கொண்டதொரு ஞானிகட்கு
மூட்டமுடன் கருவாதி
மூலியுண்டை முனையான சிலும்புதனில் வைத்துக்கேளே
விளக்கவுரை :
3452. கேளேதான் சிலும்புதனில்
மூலியுண்டை கிருபையுடன் தான்வைத்து சொல்லக்கேளு
பாளேதான் போகாமல்
அக்கினியைப்போடு பாகமுடன் சிலும்பிதனைக் குடித்தபோது
நாளேதான் நாதாக்கள்
சொற்படிக்கு நலமான புகையதுவுங் கபாலந்தன்னில்
சூளேதான் புகையதுவும்
மேலேநோக்கி சுருக்குடனே லாகிரியைச் காட்டும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
3453. பாரேதான் சிலும்புதனில்
புகையெழும்பி பண்பான லாகிரியை மீட்டும்போது
நேரேதான் காயாதிகற்ப
செந்தூரந்தான் நீடாழிக்காலம்வரை பழுதுறாது
கூரேதான் நவகோடி
ரிஷிகள்தாமும் குறிப்பான சித்தர்முனி யனேகம்பேர்
சீரேதான் இப்படியே
சொல்லாமற்றான் சீரான செந்தூரங் கொடுத்தார்காணே
விளக்கவுரை :
3454. காணவே காயாதிசெந்தூரத்தை
காசினியில் இப்படியே கெடுத்தார்தாமும்
தோணவே காயாதிகற்பத்துக்கு
துறைகோடி முறைகோடி தொந்தங்கோடி
பூணவே யிப்புகையைச்
செய்யாவிட்டால் புகழான செந்தூரங் கெட்டுப்போகும்
வாணவே காயாதிகொண்டபேர்க்கு
வளமுடனே லாகிரிகள் வேண்டும்பாரே
விளக்கவுரை :
3455. வேண்டியதோர் கருமானம்
இன்னஞ்சொல்வேன் விருப்பமுடன் காயாதிகொண்டபேர்கள்
தூண்டியே முன்சொன்ன சூரணத்தை
துப்புரவாய் கியாழமது செய்துகொண்டு
தாண்டியே யாவின்பால்
சீனிதானும் சட்டமுடன் தூள்போட்டு கியாழஞ்செய்து
தீண்டியே விஷம்போக
வந்திசந்தி திறமாக குடிப்பதுவே யமுர்தமாமே
விளக்கவுரை :