போகர் சப்தகாண்டம் 3456 - 3460 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3456 - 3460 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3456. ஆமேதான் கியாழமதை யுண்டபோது அப்பனே காயாதி தேகந்தானும்
நாமேதான் சொன்னபடிக் கிச்சைசெய்தால் நலமான செந்தூரமேனியூறும்
போமேதான் கியாழமது காயாதிக்குப் பொங்கமுடன் அனுபானமென்னலாகும்
தாமேதான் இன்னமொரு வயனஞ்சொல்வேன் தகமையுடன் கேட்பவனே சீஷனாமே

விளக்கவுரை :


3457. சீஷனாம் மானிடர்க்கு சொல்வேன்பாரு சிறப்பான காயாதிகற்பத்துக்கு
பாஷமென்ற பசுமூலி யுண்டைதன்னை பட்சமுடன் நெய்தேனுங் கூடச்சேர்த்து
கோஷமென்ற சர்க்கரையைப் பாகுசெய்து கொப்பெனவே சூரணத்தைப்போட்டுக்கிண்டி
தோஷமது நீங்கியல்லோ மைந்தாகேளு துப்புரவாய் லேகியம்போல் கிண்டிடாயே

விளக்கவுரை :

[ads-post]

3458. கிண்டியே லேகியத்தை பதனம்பண்ணு கீர்த்தியுடன் வாரத்துக்கிரண்டுமுறைதானும்
தொண்டமுடன் அம்பாளைப் பூசித்தேதான் தேசிக்காய் தானளவுகொண்டபோது
கொண்டவுடன் காயாதிதேகந்தானும் கொற்றவனே கற்றூணாமென்னலாகும்
அண்டர்முனி தேவாதி ரிஷிகள்தாமும் வன்புடனே லேகியத்தை கொள்வார்பாரே

விளக்கவுரை :


3459. பாரேதான் காயாதிகற்பவுண்டை பாரினிலே கொண்டவர்க்கு பலனைக்கேளிர்
நேரேதான் ஏழானைப்பலனுண்டாகும் நேர்மையுடன் மானிலத்தில் இருக்கலாம்பார்
சீரேதான் சிவயோகந் தன்னிற்சென்றால் சின்மயத்தின் அஷ்டாங்கங் காணலாகும்
வேரேதான் காண்பதுவும் வொன்றுமில்லை வேதாந்தச் சுடரொளியைக்காணலாமே

விளக்கவுரை :


3460. காணலாம் ஞானவொளிப் பிரகாசந்தான் கடிதான யேழுவகைத் தோற்றந்தானும்
பூணலாம் தேகாதி காயத்துக்கு பூட்டலாம் வேதாந்தத் தாயின்சாரம்
பாணமுடன் ஞானவுபசாரந்தன்னை பார்வையுடன் மனக்கண்ணால் காணலாகும்
நாணமுடன் பரவெளியைக்கண்டபோது நாதாந்தச் சித்தர்களி லொருவனாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar