3461. ஆச்சென்ற பெரும்பாதைத்
தன்னிற்சென்றால் அப்பனே தத்துவங்கள் தொண்ணூற்றாறும்
மாச்சலுடன் மானிலத்தில்
காணார்சித்தர் மனக்கண்ணாலே யொருவர்காண்பார் கண்டீர்
மூச்சடங்கி யோகங்கள்
செய்தபேர்கள் மூதுலகில் ஒருபாகங் கண்டதில்லை
பேச்சலுடன்
வெறுபேச்சுப்பேசியல்லோ பேருலகில் வெந்தரெல்லாம் மண்ணானாரே
விளக்கவுரை :
3462. மண்ணானார் ஒருவருந்தான்
மண்டலத்தில் மகிட்சியுடன் வாழ்ந்தவர்களாருமில்லை
திண்ணமுடன் இறந்தவர்கள்
எழுந்ததுண்டோ தேசத்தில் கட்டுமொழி யென்னலாகும்
நன்னமுடன் நாதாந்தச்
சித்துவெல்லாம் நலமுடனே வேதாந்தம்பேசியேதான்
எண்ணமுடன் வெகுகோடி
மனதிலெண்ணி ஏற்றமுடன் மாண்டதுவும் உண்மையாமே
விளக்கவுரை :
[ads-post]
3463. உண்மையாம் வெகுகோடி
நூல்கள்தாமும் வுற்பனமும் விற்பனமுஞ் சொன்னார்பாரு
கண்மையுடன் மார்க்கண்ட
நாயர்தாமும் காசினியில் வெகுகாலமிருந்தாரென்று
வண்மையுடன் அவர்கூறும்
சாத்திரத்தில் வயதுபதினாரென்று கூறினார்பார்
திண்மையுடன் அவருமல்லோ
மண்ணின்மாண்டார் தேசத்திலிருந்ததுண்டோ பொய்யுமாச்சே
விளக்கவுரை :
3464. பொய்யான சாத்திரங்கள்
உளவுஞ்சொல்லி பூதலத்திலிருந்ததுண்டோ கண்டதுண்டோ
மெய்யான வார்த்தையைப்போல
வினயஞ்சொல்லி மேதினியில் கட்டுமொழி சொன்னார்கண்டீர்
துய்யமுடன் மேதினியில்
தருமராஜன் துப்புரவாய் மேனியுடன் கைலாயத்தில்
பையவே சென்றெழுந்து
போனாரென்று பாரினிலே இதுவுமொரு கதையுமாச்சே
விளக்கவுரை :
3465. கதையான கவிவாணர் கட்டுரைத்த
கதைதனையே மேதினியில் மெய்யென்றெண்ணி
பதைபதைத்து வச்சிராங்கம்
பாண்டியன்தான் பாரினிலே வெகுகோடி தவசிருந்தான்
கெதையுடனே
யீசனிடஞ்சென்றுமேதான் கீர்த்தியுடன் பேருலகில் வந்தானென்று
புகையொத்த மனப்போலக்
கினவுகண்டு பூதலத்தில் நடந்தமொழி பொய்யுமாச்சே
விளக்கவுரை :