போகர் சப்தகாண்டம் 3516 - 3520 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3516. ஆச்சப்பா சாத்திரங்கள் சொன்னார்கோடி அவனிதனில் வீரபத்திரன் கடவுளென்று
மூச்சடங்கிப் போனதொரு மனிதன்தன்னை முசியாமல் தேவனென்று தொழுதார்பாரு
வீச்சலுடன் காசினியில் அவருமாண்டார் விண்ணுலகி மாத்மாவும் போனதென்று
ஏச்சான வுறுதிமொழி காணலாச்சே என்மகனே வீரபத்ரன் மண்ணானானே

விளக்கவுரை :


3517. மண்ணானார் இன்னமொரு மார்க்கம்பாரு மகத்தான சீனபதி பிழைக்கவென்று
திண்ணாக வடபத்திரகாளியம்மன் திரளான கூட்டமுடன் சென்றுதானும்
குண்ணான நதிமலைகள் குகைகள்தேடி கொற்றவளும் யுத்தமது செய்யவென்று
வண்ணமுடன் மகுடாதி சூரன்தன்னை மார்பிளந்து வல்லபத்தில் குத்தினாளே

விளக்கவுரை :

[ads-post]

3518. குத்தவே மகுடாதி சூரன்தானும் கொற்றவனுங் கிடாவயிற்றில் வந்துதித்தான்
சத்தமுடன் வபயமிட்டு கண்பிதுங்கி தரணிதனில் மலைபோலே விழுந்தான்பாரு
பித்தனைப்போல் மதிமயங்கி வாக்குரைத்து பிசகான வார்த்தையது மிகவுஞ்சொல்லி
சித்தமடியேனென்று தொழுதுபோற்றி சிறப்புடனே மண்ணுலகில் மாண்டான்தானே

விளக்கவுரை :


3519. மாண்டானே காளியிட கைவசத்தால் மானிலத்தில் கேட்டவருஞ் சொன்னார்தாமும்
கூண்டோடே சடமழிந்து மண்ணாய்ப்போனார் குவலயத்தி லிருந்தவரும் யாருமில்லை
பாண்டுமகா புத்திரரு மிப்படியே மாண்டார் பாரினிலே மாண்டவரு மிப்படியேயுண்டு
காண்டிபமும் தாம்பிடித்த பத்ரகாளி காசினியில் தான்வளர்ந்து மண்ணாணாளே

விளக்கவுரை :


3520. மண்ணான தேவியவள் சாமியானால் மானிலத்தி லிருப்பதற்கு வையமென்ன
வண்ணமுடன் தேகமது வழிந்துபோச்சு மானிலத்தில் காளியவள் கூளியானாள்
எண்ணிமிகப் பார்க்கையிலே தேகம்பாழாம் எக்காலமிருந்தாலும் மண்தான்வீடு
நண்ணமுடன் தேகமது மண்ணுமாச்சு நயமுடனே மண்கூறும் மண்ணுமாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3511 - 3515 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3511. உண்டான வீரபத்ரன் படைவீரன்தான் வுத்தமனே யதிவீரன் போர்வீரன்தான்
திண்டான சாத்திரங்கள் பெருநூல்யாவும் திறைகோடி திசைகோடி திகழ்கள்கோடி
கண்டாலும் பெருநூல்கள் விரிநூல்தன்னில் காசினியில் அவர்பெருமை மெத்தவுண்டு
அண்டாத சேனைரதப்படைக் கூட்டத்தை அவனியிலே தான்ஜெயித்த வீரனாமே 

விளக்கவுரை :


3512. வீரனாந் தக்கனது யாகந்தன்னை வீரமுடன் தான்ஜெயித்த வீரபத்திரன் சூரனாம் பத்மாவின் சூரன்தன்னை சுட்டெரித்த சூட்சாதி கியானமாரன் கோரமாம் டாகினியைக் கருவறுத்த கொற்றவனா மென்றிவர்க்குப்பேருமாச்சு பாரமுடன் இதிகாச புராணமெல்லாம் பாடிவைத்தார் கவிவாணர் திறமைபாரே

விளக்கவுரை :

[ads-post]

3513. திறமையுடன் சாத்திரத்தி லதிதஞ்சொல்லி திறளாக சத்துரு சங்காரர்தன்னை
முறைமையுடன் கதைபேசி யுறவுபேசி மூர்க்கமுடன் வெகுபேரை ஜெயித்தானென்றும்
குறைமனதாய்த் தக்கனுட யாகந்தன்னை குவலயத்தில் வேரறுத்துச் சுட்டறுத்து
உறமுடனே வெகுகோடி காலந்தானும் வுத்தமனும் இருந்தாரென்று உரைத்தார்பாரே

விளக்கவுரை :


3514. உடைத்தாரே வீரபத்திரன் வீரந்தன்னை ஓகோகோ நாதாக்கள் நம்புவாரோ
நிறைத்தாரே சாத்திரங்கள் புராணமெல்லாம் நிலையான தேவனென்றுஞ் சொன்னார்பாரு
பறைத்ததொரு காயமிது தேவனானால் பாரினிலே மற்றொரு தெய்வமேன்தான்
இரைத்தாரே இவர்தானுந் தெய்வமானால் எழிலான உலகமிதில் இருக்கொணாதோ

விளக்கவுரை :


3515. ஒண்ணாது தேகமது கூடுவிட்டு வுலகத்தைத் தான்மறந்து மண்ணாப்போச்சு
நண்ணமுடன் வாதமாவுங்காணாதாச்சு நலமான சடலமது விழலாய்ப்போச்சு
எண்ணமுடன் லோகமதில் இருந்ததுண்டோ எழிலான தேகத்தால் எடுத்தகாயம்
உண்பதுவும் வுடுப்பதுவும் என்னலாகும் வுத்தமனே வீரபத்திரன் நரஜென்மமாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3506 - 3510 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3506. பாருலகில் கணபதியே தேவனென்றும் பட்சமுடன் மானிடர்கள் தொழுதுபோற்றி
சீருடனே யஷ்டாங்கந் தனைநினைத்து சிறப்புடனே அஞ்சலிகள் மிகவுஞ்செய்து
ஊருடனே குடிமக்கள் மிகவுங்கூடி வுத்தமராங் கணபதியைக் கடவுளாக்கி
பேருடனே வையகத்தில் சுவாமியென்றும் பேரான புகழ்படைத்தார் அதிதமாமே

விளக்கவுரை :


3507. அதிதமாங் கணபதியாம் என்றநாமம் அவனிதனில் மனிதரல்லா வேறொன்றல்ல
துதிதமுள்ள கடவுளாயிருப்பாரானால் தொல்லுலகில் வுயிரோடே இருக்காரோதான்
பதிதமுள்ள பாடல்களில் சுவாமியென்றும் பாடினார் வெகுகோடி மாந்தரப்பா
நிதிதமுள்ள கணபதியின் தேகந்தானும் நிலையாத யனித்திய மென்னலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3508. என்னவே கணபதியும் நீணிலத்தில் எழிலான தேகத்தை மறந்துபோனார்
பன்னவே பாரினிலே தேவனானால் பாழான தேகமது மண்ணுக்காமோ
துன்னவே காயமது நிலைப்பதற்கு தொல்லுலகில் கோடான கோடிகற்பம்
முன்னமே காயாதி கற்பமுண்டு மூதுலகில் கற்றூணாயிருந்தார்தாமே

விளக்கவுரை :


3509. காணவே வவர்கூட்டந் தன்னிலப்பா கதுமையுடன் இவருமொருசித்துமானார்
தோணவே வெகுகோடி காலமப்பா தொல்லுலகில் காயாதி கற்பமுண்டு
ஈணவே சமுசார வாழ்க்கைநீக்கி யெழிலுடனே காயத்தை யிருத்திக்கொண்டு
பூணவே புவிஈலோர்க்கு கவியாக புகழுடனே வெகுகால மிருந்தார்தாமே

விளக்கவுரை :


3510. இருந்தாரே யின்னமொரு மார்க்கங்கேளு எழிலான வீரபத்ரன் பாடுசொல்வோம்
பொருந்தவே காலாங்கிநாயர்பாதம் போற்றியே முடிவணங்கி தாள்பணிந்து
திருந்தவே சீனபதி தேசத்தார்க்கு சிறப்பான வேதாதி மாந்தர்தம்மை
வருந்தியே வரலாறு காதைசொல்வோம் வகுப்புடனே யின்னம்வெகு காதையுண்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3501 - 3505 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3501. தாமான சமுசார வாழ்க்கையற்று தகமையுள்ள பேரின்ப வாழ்வுபெற்று
சாமான மானதொரு வுலகவாழ்வை சர்ச்சனர்க்கு வுபயோக விருத்தியோகம்
நாமான சாத்திரங்கட் குயிராய்நின்று நமஸ்கரித்து கணபதியாங் கணேசரென்றும்
தாமான நூலுக்கு முதற்காப்பாக தாரிணியில் மானிடர்க்கு சத்திதானே

விளக்கவுரை :


3502. தானான சத்திக்கு முதல்வன்காப்பு தாக்கான ஈஸ்வரிக்கு முதல்வன்காப்பு
பானான திரிமூர்த்தி முதல்வன்காப்பு பாங்குபெற மானிலத்தில் செய்தவேதம்
கோனான ரிஷிமுனிவர் சித்துதாமும் கோடான கோடிநூல் செய்தார்பாரு
தேனான நூலுக்கு முதலாய்நின்று தேர்ந்தபிள்ளை வாருமென்ற பேருமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

3503. ஆச்சென்ற நூல்களுக்கு இவரேயாதி அரிவோம் நமசிவயமிதற்குள்ளாகும்
பாச்சலென்ற ஓங்கார மிதற்குள்ளாகும் பாருலகில் வேதமெல்லாம் இதற்குள்ளாகும்
மாச்சலென்ற கவிவாணர் நூலுக்காதி மகுடமுடி மன்னவர்க்கு மிவரேயாதி
கூச்சலென்ற வேதமகா கோஷ்டத்தார்க்கும் குவலயத்தில் விநாயகரும் முதலாம்பாரே

விளக்கவுரை :


3504. பாரேதான் விநாயகரைக் காப்பேடாக்கி பாரினிலே நூலெல்லாம் பாடினார்கள்
நேரேதான் சர்வகோடி பாடலுக்கு நேர்மையுடன் விநாயகரை முதல்வனாக்கி
சீரேதான் காவியங்கள் பாவினங்கள் சிறப்பான வசனமென்ற ரூபந்தானும்
கூரேதான் எழுத்தாணிந் தைரூபத்தால் கோடான கோடிநூல் எழுதலாச்சே

விளக்கவுரை :


3505. எழுதவென்றால் நூலுரையோன் சொல்லும்நீதி எழிலான ஆக்கியொன்றான் பகரும்நீதி
பழுதறவே எழுத்தாணிக் கைபிடித்து பாங்குபெற கணபதியைக் காப்புமிட்டு
தொழுதுமே சிரங்குனிந்து கைகுவித்து தொல்லுலகில் வாணரெல்லாம் காப்பிட்டார்கள்
உழுதுபயிரிடுங் குடியானர்தாமும் வுத்தமர்கள் மானிலத்தில் தொழுவார்பாரே

விளக்கவுரை :


Powered by Blogger.