3511. உண்டான வீரபத்ரன்
படைவீரன்தான் வுத்தமனே யதிவீரன் போர்வீரன்தான்
திண்டான சாத்திரங்கள்
பெருநூல்யாவும் திறைகோடி திசைகோடி திகழ்கள்கோடி
கண்டாலும் பெருநூல்கள்
விரிநூல்தன்னில் காசினியில் அவர்பெருமை மெத்தவுண்டு
அண்டாத சேனைரதப்படைக்
கூட்டத்தை அவனியிலே தான்ஜெயித்த வீரனாமே
விளக்கவுரை :
3512. வீரனாந் தக்கனது யாகந்தன்னை
வீரமுடன் தான்ஜெயித்த வீரபத்திரன் சூரனாம் பத்மாவின் சூரன்தன்னை சுட்டெரித்த
சூட்சாதி கியானமாரன் கோரமாம் டாகினியைக் கருவறுத்த கொற்றவனா
மென்றிவர்க்குப்பேருமாச்சு பாரமுடன் இதிகாச புராணமெல்லாம் பாடிவைத்தார் கவிவாணர்
திறமைபாரே
விளக்கவுரை :
[ads-post]
3513. திறமையுடன் சாத்திரத்தி
லதிதஞ்சொல்லி திறளாக சத்துரு சங்காரர்தன்னை
முறைமையுடன் கதைபேசி
யுறவுபேசி மூர்க்கமுடன் வெகுபேரை ஜெயித்தானென்றும்
குறைமனதாய்த் தக்கனுட
யாகந்தன்னை குவலயத்தில் வேரறுத்துச் சுட்டறுத்து
உறமுடனே வெகுகோடி
காலந்தானும் வுத்தமனும் இருந்தாரென்று உரைத்தார்பாரே
விளக்கவுரை :
3514. உடைத்தாரே வீரபத்திரன்
வீரந்தன்னை ஓகோகோ நாதாக்கள் நம்புவாரோ
நிறைத்தாரே சாத்திரங்கள்
புராணமெல்லாம் நிலையான தேவனென்றுஞ் சொன்னார்பாரு
பறைத்ததொரு காயமிது
தேவனானால் பாரினிலே மற்றொரு தெய்வமேன்தான்
இரைத்தாரே இவர்தானுந்
தெய்வமானால் எழிலான உலகமிதில் இருக்கொணாதோ
விளக்கவுரை :
3515. ஒண்ணாது தேகமது கூடுவிட்டு
வுலகத்தைத் தான்மறந்து மண்ணாப்போச்சு
நண்ணமுடன்
வாதமாவுங்காணாதாச்சு நலமான சடலமது விழலாய்ப்போச்சு
எண்ணமுடன் லோகமதில்
இருந்ததுண்டோ எழிலான தேகத்தால் எடுத்தகாயம்
உண்பதுவும் வுடுப்பதுவும்
என்னலாகும் வுத்தமனே வீரபத்திரன் நரஜென்மமாச்சே
விளக்கவுரை :