3506. பாருலகில் கணபதியே
தேவனென்றும் பட்சமுடன் மானிடர்கள் தொழுதுபோற்றி
சீருடனே யஷ்டாங்கந்
தனைநினைத்து சிறப்புடனே அஞ்சலிகள் மிகவுஞ்செய்து
ஊருடனே குடிமக்கள்
மிகவுங்கூடி வுத்தமராங் கணபதியைக் கடவுளாக்கி
பேருடனே வையகத்தில்
சுவாமியென்றும் பேரான புகழ்படைத்தார் அதிதமாமே
விளக்கவுரை :
3507. அதிதமாங் கணபதியாம்
என்றநாமம் அவனிதனில் மனிதரல்லா வேறொன்றல்ல
துதிதமுள்ள
கடவுளாயிருப்பாரானால் தொல்லுலகில் வுயிரோடே இருக்காரோதான்
பதிதமுள்ள பாடல்களில்
சுவாமியென்றும் பாடினார் வெகுகோடி மாந்தரப்பா
நிதிதமுள்ள கணபதியின்
தேகந்தானும் நிலையாத யனித்திய மென்னலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
3508. என்னவே கணபதியும்
நீணிலத்தில் எழிலான தேகத்தை மறந்துபோனார்
பன்னவே பாரினிலே தேவனானால்
பாழான தேகமது மண்ணுக்காமோ
துன்னவே காயமது நிலைப்பதற்கு
தொல்லுலகில் கோடான கோடிகற்பம்
முன்னமே காயாதி கற்பமுண்டு
மூதுலகில் கற்றூணாயிருந்தார்தாமே
விளக்கவுரை :
3509. காணவே வவர்கூட்டந் தன்னிலப்பா கதுமையுடன் இவருமொருசித்துமானார்
தோணவே வெகுகோடி காலமப்பா
தொல்லுலகில் காயாதி கற்பமுண்டு
ஈணவே சமுசார வாழ்க்கைநீக்கி
யெழிலுடனே காயத்தை யிருத்திக்கொண்டு
பூணவே புவிஈலோர்க்கு கவியாக
புகழுடனே வெகுகால மிருந்தார்தாமே
விளக்கவுரை :
3510. இருந்தாரே யின்னமொரு
மார்க்கங்கேளு எழிலான வீரபத்ரன் பாடுசொல்வோம்
பொருந்தவே
காலாங்கிநாயர்பாதம் போற்றியே முடிவணங்கி தாள்பணிந்து
திருந்தவே சீனபதி
தேசத்தார்க்கு சிறப்பான வேதாதி மாந்தர்தம்மை
வருந்தியே வரலாறு
காதைசொல்வோம் வகுப்புடனே யின்னம்வெகு காதையுண்டே
விளக்கவுரை :